(72) உயிராய பெற்றேனோ ஊமையைப் போலே.
திருவரங்கத்தில் சுவாமி ராமானுஜருடைய மடத்தில் பல சிஷ்யர்கள் தொண்டு புரிந்து சுவாமி ராமானுஜருடன் இருந்தார்கள். தினமும் சுவாமி ராமானுஜர் கூறும் நல் உபதேசங்களைக் கேட்பார்கள்.
திருவரங்கன் முன் ஆழ்வார் பாசுரங்களைச் செவிக் குளிர பாடுவார்கள். மடத்தில் வைணவர் ஒருவர் இருந்தார். பிறவி செவிடு, ஊமை. கல்வி அறிவு இல்லாதவர்.
தினமும் மடத்தில் பல வேலைகளைச் செய்வார்.
அவரால் சுவாமி ராமானுஜர் கூறும் நல்வார்த்தைகளைக் கேட்க முடியாது. சிஷ்யர்களுடன் சேர்த்து ஆழ்வார்களின் பாசுரங்களைப் பாடவும் முடியாது.
வேலை எல்லாம் முடித்துவிட்டு, ராமானுஜர் உபதேசம் செய்யும்போது ஒரு ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு ராமானுஜரையே பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பார் “என்ன அருமையான தேஜஸ்! எவ்வளவு பிரகாசமான திருமுகம், காவியுடையுடன், திரிதண்டம், பவித்திரமான பூணூல், நெற்றியில் சூரியனைப் போலப் ஒளிரும் திருமண், அவருடைய மென்மையான திருப்பாதங்கள்... ” என்று ராமானுஜரின் திருமேனியை ரசிப்பதே அவருக்கு வேலை.
ஒரு நாள் சுவாமி ராமானுஜர் காலட்சேபத்தின்போது இந்த ஊமை ஏக்கமாக ராமானுஜரைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.
சுவாமி ராமானுஜருக்கு “அடடா ! நாம் கூறும் ரகசிய அர்த்தங்களை இவரால் கேட்க முடியாது. இவருக்கு என்ன வேண்டும் என்று வாய் திறந்து கேட்கவும் முடியாது. இவரும் நற்கதி அடைய வேண்டும்” என்று நினைத்துக்கொண்டார்.
அன்றைய காலட்சேபம் முடிந்தவுடன் சுவாமி ராமானுஜர் கருணையுடன் “என்னுடன் வா” என்று சைகை காண்பித்து அவரைத் தன் அந்தரங்க அறைக்கு அழைத்துச் சென்று கதவைச் சாத்திக்கொண்டார்.
இந்தக் காட்சியைப் கண்ட சிஷ்யர்களுக்கு ஒரே வியப்பு. உள்ளே என்ன நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. சிஷ்யர்களுடன் இருந்த கூரத்தாழ்வானுக்கும் வியப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
தாழிட்ட கதவுக்கு அருகில் சென்றார். கதவில் காதை வைத்துப் பார்த்தார். காது கேளாதவருடன் என்ன பேசுவார் ? ஒன்றும் கேட்கவில்லை. கண்ணை இடுக்கிக்கொண்டு சாவி துவரத்தின் வழியே என்ன நடக்கிறது என்று பார்த்தார்.
“ஐயோ! பல சாஸ்திரங்கள், ஸ்ரீபாஷ்யம் என்று பலவற்றைப் படித்தேன். படித்துப் பண்டிதர் ஆகிக் கெட்டு ஒழிந்தேன்! ஒரு ஊமையாகப் பிறந்திருந்தால் பெரும் பாக்கியம் கிடைத்திருக்கும்!” என்று மூர்ச்சையாகி கீழே விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் “ஆழ்வான்! என்ன நடந்தது” என்று கேட்க மயக்கம் தெளிந்த ஆழ்வான் உள்ளே தான் கண்ட காட்சியைக் விவரித்தார்.
ராமானுஜர் திரிதண்டத்துடன் ஆசனத்தில் உட்கார்ந்து இருந்தார். அவரை தன் எதிரே கீழே உட்காரச் சொல்லித் தன் இரு பாதங்களை அவர் தலையில் வைக்க. அந்த வைணவர் தன் இரு கரத்தால் உடையவரின் பாதங்களைத் தன் தலைமீது அழுத்திக்கொண்டான். அப்போது அவன் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார்.
நான் ஒரு பிறவி ஊமை, செவிடனாகப் பிறந்திருந்தால், எனக்குப் படிப்பு அறிவு இருந்திருக்காது. ராமானுஜரிடம் கொண்ட பக்தியால் எனக்கும் இந்தப் பேரருள் கிடைத்திருக்கும். இவர் பெற்ற பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லையே! என்று வருந்தினார்.
ஊமை ஸ்ரீவைஷ்ணவன் இராமானுஜரின் பாதங்களில் அடைக்கலம் பெற்று அன்று முதல் அதனை வாழ்வின் ஆதாரமாக ("உயிராய") கொண்டான்.
"ஊமை வைஷ்ணாவைப்போல உங்கள் கருணைக்கு இலக்காகி வாழ்வைவிட உயிரான ஒன்றை உங்களிடமிருந்து பெற்றேனா? இல்லையே. பிறகு ஏன் நான் இங்கிருக்க வேண்டும்? கிளம்புகிறேன்" என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்மணி .
முந்தைய பதிவுகள் -
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
73. திருவாறன்விளை
ஸ்ரீ பத்மாசன நாச்சியார் ஸமேத ஸ்ரீ திருக்குறளப்பன் ஸ்வாமிநே நமஹ
சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!
ரகசியம் தொடரும்...
அன்புடன்
தகவல் சிறப்பு. படங்களும் நன்று.
ReplyDelete