15 September 2024

உலகளந்த பெருமாள் - வாமன அவதாரம்

  ஆவணி - திருவோணம் - வாமன ஜெயந்தி




 மூவுலகத்தையும் மூன்றடியில் அளந்த உலகளந்த பெருமாள் - வாமன அவதாரம்

.

வாமனன் என்றால் குள்ள வடிவினன் என்பது பொருள். 

வாமன அவதாரத்தில் அந்தணச் சிறுவனாக ஒரு கையில் தாழம்பூ குடையுடனும், மற்றொரு கையில் கமண்டலத்தைப் பிடித்தும் அருளுகிறார் பகவான் விஷ்ணு.

 கேரளாவை ஆட்சி செய்த மகாபலி சக்கரவர்த்தியை ரட்சிக்க அவரின் புகழை உலகறியச்செய்ய வாமனனாக அவதரித்தார் மகாவிஷ்ணு.





மகாபலி சக்கரவர்த்தி மூவுலகையும் ஆளுவதற்காக யாகம் செய்தார். அதைப்பார்த்து தேவர்கள் பயந்தனர். விஷ்ணுவிடம் வேண்டினர்.

அதிதி காஷ்யபர் தம்பதியின் மகனாக வாமனனாக அவதரித்தார் மகாவிஷ்ணு. மகாபலி நடத்திய யாகத்திற்கு வந்த வாமனன் மூன்றடி நிலத்தினை தானமாக கேட்டார். சுக்ராசாரியரின் சொல்லைக் கேட்காமல் மூன்றடி தானம் தர மகாபலி சம்மதித்தான். 

.

அப்போது இறைவன் திரிவிக்ரமனாக உருவம் கொண்டு வானத்தை ஓரடியாகவும், பூமியை ஓரடியாகவும் அளந்து மூன்றாவது அடியை மகாபலிச்சக்ரவர்த்தியின் தலையில் வைத்து பாதளலோகத்திற்கு அரசனாக்கினார்.


கொடை வள்ளலாக திகழும் மகாபலியின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கவும் அருள் செய்தார்.

கேரளாவிலும் மற்ற ஊர்களிலும் எல்லா மதத்தினரும் கொண்டாடும் ஓணம் பண்டிகை. 

ஆயுதம் இல்லாமல் பகவான் மகா விஷ்ணு எடுத்த ஒரே அவதாரம் இது.  மற்ற அவதாரங்களில் ஆயுதம் எடுத்து அசுரர்களை அழித்து நல்லோர்களை காத்தார். இந்த அவதாரத்தில் வானோர்களை காப்பாற்றினார். 



 (7)

குறள் பிரமசாரியாய் மாவலியைக்

குறும்பு அதக்கி அரசு வாங்கி

இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை

கொடுத்து உகந்த எம்மான் கோயில்

எறிப்பு உடைய மணி வரை மேல்

 இளஞாயிறு எழுந்தாற்போல் அரவு அணையின்வாய் 

சிறப்பு உடைய பணங்கள்மிசைச் செழுமணிகள்

 விட்டு எறிக்கும் திருவரங்கமே


418

சிறிய ப்ரமசாரி வடிவம் கொண்டு மாவலியிடம் சென்று

மூன்றடி மண்ணை யாசித்து, அவனின் கர்வத்தை அடக்கி,

அவனுடைய ராஜ்யத்தைப் பெற்று, பின்பு நொடிப்பொழுதில்,

பாதாளத்தை அவனுக்கு ஏற்ற இருப்பிடமாகக் கொடுத்த

எம்பெருமானின் கோயில், ஜோதியுடன் விளங்கும் ஒரு நீல

ரத்ன மலையின் மேலே இளம் சூரியன் உதித்தாற்போல்,

சிவந்த ரத்தினங்கள் ஒளிரும் தலைகளை கொண்ட

பாம்பினைப் படுக்கையாக உடைய

எம்பெருமானின் திருவரங்கமே!




கொள்வன் நான் மாவலி! மூவடி தா என்ற 

கள்வனே! * கஞ்சனை வஞ்சித்து, வாணனை 

உள் வன்மை தீர * ஓர் ஆயிரம் தோள் துணித்த 

புள் வல்லாய்! * உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?


9 2982



பெருமான் திருவடிகளே சரணம் ..



அன்புடன்
அனுபிரேம்💖💖💖

1 comment:

  1. படங்களும் தகவல்களும் சிறப்பு. தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete