73) உடம்பை வெறுத்தேனோ திருநறையூராரைப் போலே.
திருவரங்கத்துக்கு மேற்கில் திருநாராயணபுரம் (தொட்டியம்) என்ற கிராமம் இருக்கிறது. இங்கே இருக்கும் பெருமாள் வேதநாராயண பெருமாள். இந்தப் பெருமாள் திருவரங்கம் பெருமாள் போலவே படுத்துக்கொண்டு, தலைக்கு அடியில் நான்கு வேதங்களையும் வைத்திருக்கும் பெருமாள். மேலே ஆதிசேஷன். காலுக்கு அடியில் சின்ன வடிவில் மூன்று வயதுக் குழந்தையாகப் பிரகலாதனுடன் மிக அழகான பெருமாள்.
திருவரங்கத்து ஆதிசேஷனுக்கும் இங்கே இருக்கும் ஆதிசேஷனுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது அது ”திருவரங்கத்தில் இருக்கும் ஆதிசேஷன் ஐந்து தலைகளுடன் இருப்பார் இங்கே இருக்கும் ஆதிசேஷனுக்கு பத்துத் தலைகள்!”.
இந்த அழகிய பெருமாளைத் தரிசிக்கப் பிள்ளை திருநறையூர் அரையர் அவர் மனைவி குழந்தைகளுடன் அங்குச் சென்றார்.
அப்போது கோயிலிருந்து சிலர் வெளியே வேகமாக ஓடி ஓடினார்கள். அரையருக்கு என்ன என்று புரியவில்லை.
அங்கே ஓடியவரைப் பார்த்து “ஏன் எல்லோரும் பெருமாளை விட்டு இப்படி ஓடுகிறீர்கள் ?” என்று கேட்டார்.
“சாமி ! சில விரோதிகள் கோயிலுக்கு நெருப்பு வைத்துவிட்டார்கள்! உள்ளே தீப்பிடித்து எறிகிறது! நீங்களும் ஓடுங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்!” என்று ஓடிக்கொண்டே சொன்னார்.
அரையர் திடுக்கிட்டார் சட்டென்று “ஐயோ உள்ளே பெருமாள் இருக்கிறாரே !” என்று வேகமாகப் பெருமாளை நோக்கி ஓடினார்.
அவரைத் தொடர்ந்து அவர் மனைவியும் குழந்தைகளும் அவர் பின்னால் ஓடினார்கள்.
நெருப்பு எல்லா இடங்களிலும் பரவிக் கொழுந்துவிட்டு எறிந்துகொண்டு இருந்தது.
அரையர் பெருமாள் கருவறைக்குள் ஓடினார்.
பெருமாள் பக்கம் நெருப்பு வரத் தொடங்கியிருந்தது.
பக்கத்தில் இருந்த நீரை எடுத்து நெருப்பின் மீது வீசினார்.
ஆனால் நெருப்பு அடங்கவில்லை.
பெருமாளுக்குத் தீங்கு நேர்ந்துவிடக்கூடாதே என்று அச்சத்தில் தவித்தார். பெருமாளை வெளியே எடுத்து வர முடியாது.
தீயின் வெளிச்சத்தில் பெருமாள் நன்றாகத் தெரிந்தார். “”எல்லோரும் இங்கே வாருங்கள் !” என்று தன் மனைவியும் குழந்தைகளும் அழைத்தார். “பெருமாளை நன்றாகச் சேவித்துக்கொள்ளுங்கள் இங்கே நாம் மட்டும் தான் இருக்கிறோம் பெருமாளைக் காப்பாற்ற” என்றார்.
குழந்தைகள் புகைமண்டலத்தில் மூச்சு விட முடியாமல் கண்களில் பீதியுடன் மூச்சுவிட முடியாமல் திணறி ”தந்தையே! பொறுக்கமுடியவில்லையே! பயமாக இருக்கிறது!” என்றனர்.
அரையர் “பிள்ளைகளே! கவலைப் படாதீர்கள். இந்தக் கஷ்டம் நமக்குக் கொஞ்சம் நேரம் தான். பொறுத்துக்கொள்ளுங்கள். பிறகு நமக்குப் பேரின்பம் கிட்டும்!” என்றார்
”அதற்கு என்ன செய்ய வேண்டும் தந்தையே?” என்று பிள்ளைகள் அப்பாவியாகக் கேட்டார்கள்.
அரையர் சாந்தமாக ”நம்முடைய பெருமாள் நமக்காக வைகுண்டத்தைவிட்டு இங்கே வந்து படுத்துக்கொண்டு இருக்கிறார். அவரைக் காக்க வேண்டியது நம் கடமை அல்லவா ?” என்றார்
பிள்ளைகள் “ஆம் தந்தையே !” என்றார்கள்.
அரையர் ஆனந்தக் கண்ணீருடன் “வாருங்கள் நாம் எல்லோரும் சேர்ந்து பெருமாளைக் கட்டிக்கொண்டு அவருக்குக் கவசமாக இருக்கலாம்!” என்றார்
அரையர் பெருமாளை அணைத்துக்கொள்ள, அவர் மனைவியும் குழந்தைகளும் அரையரை அணைத்துக்கொள்ள தீ அவர்களைத் தீண்டிவிட்டுச் சென்றது.
அரையரின் மனைவியும் குழந்தைகளையும் முதலில் கருகி உயிரை விட்டார்கள். பிறகு அரையர் உயிரைவிட்டார். பெருமாள் தப்பித்தார். இன்றும் நாம் பெருமாளைச் சேவிக்க முடிகிறது என்றால் அதற்கு அரையர் குடும்பம் தான் காரணம்.
“சாமி! அரையரைப் போல எனக்குப் பொங்கும் பரிவு இல்லையே ! அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்!” என்றாள் திருக்கோளூர்ப் பெண்மணி .
முந்தைய பதிவுகள் -
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
74. திருவண்வண்டூர்
ஸ்ரீ கமலவல்லீ ஸமேத ஸ்ரீ பாம்பணையப்பன் ஸ்வாமிநே நமஹ
சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!
ரகசியம் தொடரும்...
அனுபிரேம் 💕💕
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. படங்களில் நாராயணனை தரிசித்து கொண்டேன். திருநறையூர் அரையரின் பக்தியை படித்து மெய்சிலிர்த்துப் போனேன். தொடரட்டும் தங்களுடன் பக்தி கதைகள். படிக்க ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எத்தனை பெரிய பக்தி அந்த அரையருக்கு…. வியப்பு. தொடர்கிறேன்.
ReplyDelete