74. என்னைப் போல் என்றேனோ உபரிசரனைப் போலே.
முன்னொரு காலத்தில் ’வசு’ என்பவன் தன் நாட்டை ஆண்டு வந்தான்.
தர்மம் அறிந்தவன்.
அதன்படி நடப்பவன். தர்ம நெறி தவறாமல் ஆட்சி புரிந்தான். அதனால் தருமதேவதை அருளால் பூமிக்கு மேல் நடமாடும் ஆற்றலைப் பெற்றிருந்தான். தேரில் செல்லும் போது அவனுடைய தேர் பூமிக்கு மேலே பறந்து செல்லும். உபரி என்றால் மேலே என்று பொருள் ; சர என்றால் பிரயாணம் ; அதனால் அவனுக்கு உபரி-சர-வசு என்று பெயர்.
ஒரு சமயம் ரிஷிகளுக்கும் தேவர்களுக்கும் யாகப் பசு ( யாகப் பசு என்பது ஆடு) பற்றி ஒரு விவாதம் எழுந்தது.
யாக வேள்வியில் உயிருள்ள யாக பசுவைப் பயன் படுத்த வேண்டும் என்று தேவர்கள் கூறினார்கள். ரிஷிகளோ அது ஜீவஹிம்சை, உயிருள்ள யாக பசுவிற்குப் பதிலாக மாவினால் யாகப் பசு போன்ற உருவம் ஒன்றைச் செய்து அதைப் பயன்படுத்தலாம் என்றார்கள்.
விவாதம் முடிவுக்கு வரமுடியவில்லை.
விவாதம் பெரிய சர்ச்சையாகியது. தங்களால் தீர்க்க முடியாத இந்தப் பிரச்சனைக்குத் தர்மத்தில் சிறந்து விளங்கும் உபரிசரவசு தான் தீர்வு சொல்ல வேண்டும் என்று ரிஷிகளும், தேவர்களும் அவனை அணுகினார்கள்.
ரிஷிகளும், தேவர்களும் தங்கள் வாதத்தை உபரிசரவசு முன் வைத்தார்கள்.
ரிஷிகள் மாவினால் செய்த யாகப்பசு போதும். ஜீவஹிம்சை கூடாது அதுவே சாமானியத் தர்மம் என்றார்கள்.
தேவர்களோ இதை ஒப்புக்கொள்ளவில்லை. உயிருடன் கூடிய யாகப்பசு தான் வேண்டும் அது தான் சாஸ்திரம் என்றார்கள்.
இருவருடைய கருத்துக்களையும் உபரிசரவசு கேட்டான். தன் உயிரைப் போலப் பிற உயிர்களை மதிப்பவன் உபரிசரவசு.
அதனால் அவன் ரிஷிகளின் கூற்றையே ஆமோதித்தான். என்னை வெட்டினால் எனக்கு வலிக்கும் அதுபோலத் தானே இந்த யாகப் பசுவிற்கும் வலிக்கும். ’என்னைப் போல’ தானே யாகப் பசுவும் உயிர்வாழத்தக்கது ? அதை வதைக்கக் கூடாது என்றான். இந்தத் தீர்ப்பினால் கோபம் கொண்ட தேவர்கள் அவனை நீ பூமியில் விழக் கடவாய் என்று சபித்தார்கள்.
உபரிசரவசு கலங்கவில்லை. அவன் தேர் ஆகாசத்திலிருந்து கீழே பூமியில் விழுந்து அழுந்தியது (தேர் அழுந்திய ஊரே தேர் அழுந்தூர், தேரழுந்தூர் என்று இன்று கூறுகிறோம்).
“சாமி ! ’என்னைப் போல்’ தானே யாகப் பசுவும் என்று எந்த உயிர்களுக்குத் தீங்கு நினையாத வைணவ நெறியை நான் கூறினேனா ? அதனால் நான் ஊரைவிட்டுப் போகிறேன்!” என்கிறாள் திருக்கோளூர்ப் பெண் .
முந்தைய பதிவுகள் -
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
75. திருவனந்தபுரம்
ஸ்ரீ ஹரிலக்ஷ்மீ ஸமேத ஸ்ரீ அனந்தபத்மநாபாய நமஹ
சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!
ரகசியம் தொடரும்...
அன்புடன்
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. தேரெழுந்தூர் பெயர் காரண கதை அறிந்து கொண்டேன். பெருமாள் மேல் பக்தி கொண்ட திருக்கோளூர் பெண் பிள்ளாய் ரகசியம் கதைகளை தொடர்கிறேன்.படங்கள் பாசுரங்கள் அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தகவல்கள் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDelete