(81) துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே.
திருவயிந்திபுரத்தில் ’வில்லிபுத்தூர் பகவர்’ என்றவர் வாழ்ந்து வந்தார். இவருக்குப் பெரியாழ்வார், ஆண்டாள் மீது பேரன்பு.
அதனால் வில்லிபுத்தூர் என்ற ஊர்ப் பெயரைச் சேர்த்து ‘வில்லிபுத்தூர் பகவர்’ என்று வைத்துக்கொண்டார். அந்தணர் குலத்தில் பிறந்தவர். சிறந்த வைணவர். தினமும் ஊரில் இருக்கும் ’கெடில நதிக்கு’ சென்று நீராடுவார்.
அந்த ஊரில் அந்தணர் எல்லோரும் ஒரு படித்துறையில் நீராடுவார்கள். ஆனால் வில்லிபுத்தூர் பகவர் அவர்களோடு சேராமல் அதற்கு எதிர்புறம் உள்ள படித்துறையில் நீராடுவார்.
ஒரு நாள் அந்தணர் குழுவில் ஒருவர் “அந்தணர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து வருகிறோம். ஒரே படித்துறையில் நீராடுகிறோம். நீங்கள் எங்களுடன் சேர்ந்து வருகிறீர்கள். ஆனால் வேறொரு படித்துறையில் நீராடுகிறீரே ? ஏன் ?” என்று கேட்டுவிட்டார். அதற்குப் பகவர் “நீங்கள் வேறு குலம், நான் வேறு குலம்!” என்றார்.
”என்ன பகவரே நாம் எல்லோரும் அந்தணர்கள், பிராமணர்கள். ஆனால் நீர் குலம் வேறு என்று சொல்லுகிறீர்களே !” என்றார் ஆச்சரியமாக.
அதற்குப் பகவர் “நீங்கள் வர்ண தர்மிகள்! தினமும் வர்ணத் தர்மம் படி, சாஸ்திரம் கூறியபடி தர்ப்பையை கையில் இடுக்கிக்கொண்டு, நித்திய கர்மானுஷ்டங்களை, சந்தியாவந்தனம், யாகம் யக்கியம் போன்றவற்றை செய்பவர்கள்” என்றார்.
கேள்விகேட்டவர் விடவில்லை “பகவரே! நீரும் இதை எல்லாம் தவறாமல் செய்கிறீர்களே! நாங்கள் செய்வதற்கும் நீங்கள் செய்வதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லையே!” என்றார்.
பகவர் சிரித்துக்கொண்டு “ஆம் நானும் செய்கிறேன். ஆனால் இந்த நித்திய கர்மானுஷ்டங்களை பெருமாளுக்குச் செய்யும் கைங்கரியமாக அன்றோ நான் செய்கிறேன். நீங்களோ நான் அந்தணர் என்ற வர்ணத் தர்மப்படி இதைச் செய்கிறேன் என எண்ணத்தில் செய்கிறீர்கள். செய்யவில்லை என்றால் பாவம் என்று பயந்துகொண்டு செய்கிறீர்கள்” என்றார்.
“சாமி! நான் பகவரைப் போலக் கைங்கரியத்தின் பெருமையை அறியவில்லையே! அவரைப் போல மற்றவர்களிடமிருந்து வேறுபட்டேனா ? என் துறை வேறு என்று கூறினேனா ? இல்லையே அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்!” என்றாள்.
முந்தைய பதிவுகள் -
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
திருவாய்மொழி இரண்டாம் பத்து
2.6. வைகுந்தா!
ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்
வைகுந்தா! மணிவண்ணனே! என்பொல்லாத் திருக்குறளா என்னுள் மன்னி
வைகும் வைகல் தோறும் அமுது ஆய வான் ஏறே
செய் குந்தா! அரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து, அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா! உன்னை நான் பிடித்தேன், கொள் சிக்கெனவே. 2.6.1
3064
சிக்கெனச் சிறுது ஓர் இடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான்; புகுந்ததற்பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர்விளக்காய், துளக்கு அற்று அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான், என் பைந்தாமரைக் கண்ணனே. 2.6.2
3065
82. திருப்புளிங்குடி (நவதிருப்பதி)
ஸ்ரீ மலர்மகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீகாய்சினவேந்தன் ஸ்வாமிநே நமஹ
அன்புடன்
மிக நிறைவாக, முழுமையாக வெளியிட்டிருக்கிறீர்கள் திருக்கோளூர் பெண்புள்ளை ரகசியங்களை.
ReplyDeleteதிருவாய்மொழியை அழகாகப் பிரித்துக் கொடுத்துள்ளீர்கள். நன்று.
81 ரகசியங்கள் என்பதால் 82வது திவ்யதேசப் பெருமாளா? என்ன காரணம்? சின்ன வயதிலிருந்தே, இந்த திவ்யதேசப் பாசுரங்களை தினமும் கோவிலில் சேவிப்போம், காரணம் எங்கள் ஊர் ஶ்ரீவேணுகோபாலன் கோவில் இந்த திவ்யதேசத் தொடர்புக்காக, திருப்புளிங்குடி சடாரியைக் கொண்டுள்ளது.
மிகவும் நன்றி சார் ... இருவருடங்களாக தொகுத்து வருகிறேன் ... போன வருடம் எல்லா சனிக்கிழமையும் பதிவிட்டேன். ஆனால் இந்த ஆண்டு அப்படி போட இயலவில்லை. பொறுமையாக படித்து தொகுப்போம் என நேரம் கிடைக்கும் பொழுது மட்டும் பதிவிட்டேன். ஆனாலும் இன்று முடிந்தது ஆச்சரியமே எல்லாம் எம்பெருமானின் அருள்.
Delete81 ரகசியங்கள் என்பதால் 82வது திவ்யதேசப் பெருமாளா? என்ன காரணம்?
முன்னுரைக்கு முதலாம் திவ்ய தேசம் அதிலிருந்து தொடர்ந்து எல்லா பதிவிலும் தொடர்ந்து வந்ததால் இன்று 82 வது திவ்ய தேசம். மீதம் உள்ள திவ்ய தேச பெருமாளையும் இனி பதிவிட வேண்டும்.ஒவ்வொரு கதையும் வாசிக்கும் பொழுது அத்தனை இனிமை .
அதே போல பாசுரங்களும் திருவாய்மொழி முதலாம் பாசுரத்தில் ஆரம்பித்தேன், எல்லா பதிவிலும் அப்பாசுரங்கள் தொடர்ந்து வந்தன.
எம்பெருமான் அருள் பெற்ற திருக்கோளூர் பெண்பிள்ளையின் வாயிலாக பல பல வைஷ்ணவ அடியார்கள் பற்றி அறிந்துக் கொண்டதில் எனக்கும் மிக மகிழ்ச்சி.இன்னும் முழு மனதுடன் பல விஷயங்களை கற்க எம்பெருமான் கண்டிப்பாக அருள் புரிவார்.
எம்பெருமானார் திருவடிகளே சரணம்