(80) தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே
திருவரங்கத்தில் நம்பெருமாள் புறப்பாட்டின்போது கூட்டத்தை விலக்குவதற்கு மான் தோல் பட்டையால் தரையில் அடித்துக்கொண்டே செல்வார்கள். அப்படி அடிக்கும்போது சவுக்கால் அடிப்பது போலச் சத்தம் வரும். அந்த ஓசையைக் கேட்டு நம்பெருமாளுக்குக் கூட்டம் வழி விடும். இப்படிப் பட்டையால் அடிக்கும் தொண்டர்களை ‘கோயில் மகாஜனம்’ என்று அழைப்பார்கள்.
ஒரு சமயம் திருவரங்கத்தில் நம்பெருமாளைச் சேவிக்கப் பட்டர் அங்கே வந்தார். உள்ளம் உருகிச் சேவித்துக்கொண்டு அங்கே நின்றார்.
நம்பெருமாள் புறப்படும் சமயம் ஆகிவிட்டதால், கூட்டத்தை விளக்குவதற்குப் பட்டையால் தரையில் ஓங்கித் தட்டி இன்னொரு முறை தட்ட முற்படும்போது அது பட்டரின் தோளில் தெரியாமல் பட்டுவிட்டது.
பட்டர் ஒன்றும் சொல்ல வில்லை.
ஆனால் பக்கத்தில் இருந்த பட்டரின் சிஷ்யர்கள் பட்டையடிப்பவரை “எப்படிப் பட்டர் மீது படும்படியாக மட்டை அடிக்கலாம் ?” என்று கடிந்து பேசினார்கள்.
பட்டர் தன் சிஷ்யர்களைத் தடுத்து “இவர்கள் நம்பெருமாளுக்கு மகத்தான தொண்டு செய்பவர்கள். அவர்கள் செய்ததில் தவறு ஏதுமில்லை. அந்தப் பட்டை என் தோளில் பட்டதால் என்ன குறைவு ஏற்பட்டது ? ஒன்றுமில்லை” என்று தன் சிஷ்யர்களைச் சமாதானப்படுத்தி, மட்டை அடிப்பவர்களைப் பார்த்துப் பட்டர் “உங்கள் தொண்டை நீங்கள் செய்கிறீர்கள். உங்கள் தோல் பட்டை என் ஒரு தோளில் பட்டது ‘யாம்பெறும் சம்மானம்' என்று ஆண்டாள் கூறிய சம்மானம். ஒரு தோளில் பட்டவுடனேயே இன்னொரு தோளையும் காட்டியிருக்க வேண்டும். தோளில் சங்கோடு சக்கரம் பொறித்துக்கொள்வது தானே முறை. இன்னொரு தோளையும் காட்டுகிறேன். அதிலும் நீங்கள் சாதிக்க வேண்டும். அப்போதே இன்னொரு தோளைக் காட்டாதது என்னுடைய தவறு. அதற்கு வருந்துகிறேன். ” என்று அவர்களை வணங்கினார்.
இதைக் கேட்டு, அடித்தவர்கள் வெட்கம் மேலிட பட்டரிடம் மன்னிப்புக் கேட்டனர். தங்களுக்கு துன்பம் விளைப்பவர்களிடம் பொறுமையும் கருணையும் காட்டுவது ஸ்ரீ வைஷ்ணவர்களின் பண்பு.
"பட்டர் தன் மறு தோளைக் காட்டி வெளிப்படுத்திய பண்பை நான் எந்நேரத்திலேயாவது காட்டினேனா? இல்லையே அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன் !" என்கிறாள் திருக்கோளூர் மங்கை.
முந்தைய பதிவுகள் -
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
திருவாய்மொழி இரண்டாம் பத்து
2 - 5 அந்தாமம்
இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க, மகிழ்தல்
சொல்லீர் என் அம்மானை,என் ஆவி ஆவிதனை,
எல்லையில் சீர் என் கரு மாணிக்கச் சுடரை,
நல்ல அமுதம் பெறற்கு அரிய வீடுமாய்,
அல்லி மலர் விரை ஒத்து, ஆண் அல்லன்; பெண் அலனே. 5.9
3061
ஆண் அல்லன்; பெண் அல்லன்; அல்லா அலியும் அல்லன்,
காணலும் ஆகான்; உளன் அல்லன்; இல்லை அல்லன்,
பேணுங்கால், பேணும் உரு ஆகும்; அல்லனும் ஆம்,
கோணை பெரிது உடைத்து எம் பெம்மானைக் கூறுதல. 5.10
3062
கூறுதல் ஒன்று ஆராக் குடக் கூத்த அம்மானை,
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்,
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துளை இப் பத்தும்,
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே. 5.11
3063
81. திருவரகுணமங்கை (நவதிருப்பதி)
ஸ்ரீ வரகுணவல்லீ ஸமேத ஸ்ரீ விஜயாஸநாய நமஹ
சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!
ரகசியம் தொடரும்...
அன்புடன்
No comments:
Post a Comment