28 December 2024

தொண்டரடிப்பொடியாழ்வார்

 தொண்டரடிப்பொடியாழ்வார்   அவதார திருநட்சித்திரம் இன்று - மார்கழியில் கேட்டை







தொண்டரடி பொடியாழ்வார்  வாழி திருநாமம்!

மண்டங்குடியதனை வாழ்வித்தான் வாழியே
மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே
தெண்டிரைசூழ் அரங்கரையே தெய்வம் என்றான் வாழியே
திருமாலை ஒன்பதஞ்சும்  செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளியெழுச்சி பத்து உரைத்தான் வாழியே
பாவையர்கள் கலவிதனைப் பழித்த செல்வன் வாழியே
தொண்டு செய்து துளபத்தால் துலங்கினான் வாழியே
தொண்டரடிப்பொடியாழ்வார் துணைப் பதங்கள் வாழியே..!










பிறந்த இடம் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)

பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு பராபவ ஆண்டு மார்கழி மாதம்

நட்சத்திரம் : கேட்டை (தேய்பிறை சதுர்த்தசி திதி)

கிழமை : செவ்வாய்

எழுதிய நூல் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி

பாடிய பாடல் : 55

வேறு பெயர் : விப்பிர நாராயணர்

சிறப்பு : திருமாலின் வனமாலையின் அம்சம்

விப்ரநாராயணர் என்ற தொண்டரடிப் பொடியாழ்வார் பாடிய பாசுரங்கள் திருமாலை என்ற 45 பாசுரங்களும் திருப்பள்ளியெழுச்சி என்ற 10 பாசுரங்களும் ஆக, 55 பாசுரங்கள்.

 திருவரங்கத்து பெரிய பெருமாளுக்கு ஆட்பட்டு வாழ்ந்த இவர் தேவதேவி என்ற பெண்ணின் அழகில் மயங்கிச் சில நாள் நிலைதவறி மீண்டும் பெருமானின் திருவருளால் பாகவத கைங்கரியத்தில் ஈடுபட்டு பரமனடி சேர்ந்தவர்.








திருப்பள்ளியெழுச்சி

          

922

இரவியர் மணி நெடுந் தேரொடும், இவரோ?
இறையவர் பதினொரு விடையரும்  இவரோ?
மருவிய மயிலினன் ஆறுமுகன்,இவனோ?
மருதரும் வசுக்களும் வந்து வந்து ஈண்டி,
புரவியோடு  ஆடலும் பாடலும் தேரும்
குமர தண்டம் புகுந்து  ஈண்டிய வெள்ளம்,
அருவரை அனைய நின் கோயில் முன், இவரோ?
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே.

6


923

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ?
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ?
இந்திரன் ஆனையும் தானும் வந்து, இவனோ?
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்,
சுந்தரர் நெருக்க, விச்சாதரர் நூக்க,
இயக்கரும் மயங்கினர்; திருவடி தொழுவான்,
அந்தரம் பார் இடம்  இல்லை, மற்று இதுவோ?
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே.
7


924

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க,
மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா,
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பன ஆயின கொண்டு, நன் முனிவர்,
தும்புரு நாரதர் புகுந்தனர்; இவரோ?
தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி,
அம்பர தலத்தில்னின்று அகல்கின்றது இருள்போய்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே.
8


925

ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி,
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி,
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம்,
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்,
ஆதலில் அவர்க்கு நாள் ஒலக்கம் அருள
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே.
9


926

கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன, இவையோ?
கதிரவன் கனைகடல் முளைத்தனன், இவனோ?
துடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறித்
துகில் உடுத்து ஏறினர், சூழ் புனல் அரங்கா,
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டரடிப் பொடி என்னும்
அடியனை, அளியன் என்று அருளி உன் அடியார்க்கு 
ஆட்படுத் தாய்! பள்ளி எழுந்தருளாயே.  

10



 




ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிய உபதேசரத்தினமாலை.

மன்னியசீர் மார்கழியில் கேட்டையின்று மாநிலத்தீர்
என்னிதனுக் கேற்ற மெனில் உரைக்கேன்
தன்னுபுகழ் மாமறையோன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால்
நான்மறையோர் கொண்டாடும் நாள்







ஓம் நமோ நாராயணாய நமக!!
தொண்டரடிப்பொடியாழ்வார்  திருவடிகளே சரணம்!!




 அன்புடன்
அனுபிரேம்🌼🌼🌼

No comments:

Post a Comment