09 January 2024

தொண்டரடிப்பொடியாழ்வார்

 தொண்டரடிப்பொடியாழ்வார்   அவதார திருநட்சித்திரம் இன்று - மார்கழியில் கேட்டை









தொண்டரடி பொடியாழ்வார்  வாழி திருநாமம்!

மண்டங்குடியதனை வாழ்வித்தான் வாழியே
மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே
தெண்டிரைசூழ் அரங்கரையே தெய்வம் என்றான் வாழியே
திருமாலை ஒன்பதஞ்சும்  செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளியெழுச்சி பத்து உரைத்தான் வாழியே
பாவையர்கள் கலவிதனைப் பழித்த செல்வன் வாழியே
தொண்டு செய்து துளபத்தால் துலங்கினான் வாழியே
தொண்டரடிப்பொடியாழ்வார் துணைப் பதங்கள் வாழியே..!










பிறந்த இடம் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)

பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு பராபவ ஆண்டு மார்கழி மாதம்

நட்சத்திரம் : கேட்டை (தேய்பிறை சதுர்த்தசி திதி)

கிழமை : செவ்வாய்

எழுதிய நூல் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி

பாடிய பாடல் : 55

வேறு பெயர் : விப்பிர நாராயணர்

சிறப்பு : திருமாலின் வனமாலையின் அம்சம்

விப்ரநாராயணர் என்ற தொண்டரடிப் பொடியாழ்வார் பாடிய பாசுரங்கள் திருமாலை என்ற 45 பாசுரங்களும் திருப்பள்ளியெழுச்சி என்ற 10 பாசுரங்களும் ஆக, 55 பாசுரங்கள்.

 திருவரங்கத்து பெரிய பெருமாளுக்கு ஆட்பட்டு வாழ்ந்த இவர் தேவதேவி என்ற பெண்ணின் அழகில் மயங்கிச் சில நாள் நிலைதவறி மீண்டும் பெருமானின் திருவருளால் பாகவத கைங்கரியத்தில் ஈடுபட்டு பரமனடி சேர்ந்தவர்.






திருப்பள்ளியெழுச்சி

   1

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்*  
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்,* 
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்*  
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி,*

எதிர்திசை நிறைந்தனர்; இவரொடும் புகுந்த*  
இருங் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்,* 
அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்* 
 அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே.  (2)

917 

          

   2

கொழுங்கொடி முல்லையின் கொழு மலர் அணவிக்* 
 கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ,* 
எழுந்தன மலர் அணைப் பள்ளிகொள் அன்னம்*  
ஈன்பனி  நனைந்த தம் இருசிறகு உதறி,*

விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ்வாய்*  
வெள் எயிறு உற, அதன் விடத்தினுக்கு அனுங்கி,* 
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த* 
 அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே.   

918  

          

   3

சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்*  
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி,* 
படரொளி பசுத்தனன் பனி மதி, இவனோ* 
 பாயிருள் அகன்றது பைம் பொழில் கமுகின்,*

மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற* 
 வைகறை கூர்ந்தது மாருதம், இதுவோ,* 
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம்  தடக்கை*  
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே.  

919










4

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்* 
 வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும்,* 
ஈட்டிய இசை திசை பரந்தன; வயலுள்*
  இருந்தின சுரும்பினம்; இலங்கையர் குலத்தை,*

வாட்டிய வரிசிலை வானவர் ஏறே!*
  மாமுனி வேள்வியைக் காத்து,*  அவ பிரதம்- 
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!* 
 அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே.

920

          

   5

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்*  
போயிற்றுக் கங்குல்; புகுந்தது புலரி,* 
கலந்தது குணதிசை கனைகடல் அரவம்*  
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த,*

அலங்கல் அம்  தொடையல் கொண்டு அடியிணை பணிவான்*
  அமரர்கள் புகுந்தனர்; ஆதலில் அம்மா* 
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்*  
எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே.

921

          

 






ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிய உபதேசரத்தினமாலை.

மன்னியசீர் மார்கழியில் கேட்டையின்று மாநிலத்தீர்
என்னிதனுக் கேற்ற மெனில் உரைக்கேன்
தன்னுபுகழ் மாமறையோன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால்
நான்மறையோர் கொண்டாடும் நாள்






No comments:

Post a Comment