05 January 2024

20. முப்பத்துமூவர் அமரர்க்கு...

20.முப்பத்துமூவர்_அமரர்க்கு...

தேவர்களின் பயத்தைப் போக்கும் பலமுள்ளவனே! அழகிய வடிவுடைய நப்பின்னையே! துயில் ஏழாய். நோன்பிற்கு வேண்டிய உபகரணங்களை அளித்து, எங்கள் விரதத்தினை முழுமை அடையச் செய்திடுவாய்.




 இருபதாம் பாசுரம் - இதில் கண்ணனையும் நப்பின்னைப் பிராட்டியையும் சேர்த்து எழுப்பி நப்பின்னைப் பிராட்டியிடம் “நீ எங்களையும் அவனையும் நன்றாகச் சேர்த்து, அனுபவிக்கும்படி செய்” என்று கேட்கிறாள்.



முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று

      கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்

செப்பம் உடையாய்! திறல் உடையாய்!  செற்றார்க்கு

      வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்

செப்பு அன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்

      நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்

உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை

      இப்போதே எம்மை நீர் ஆட்டு ஏலோர் எம்பாவாய்


முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு இடர்வரும் முன்னமே எழுந்தருளி அவர்களுடைய நடுக்கத்தைப் போக்கவல்ல பலத்தையுடைய கண்ணன் எம்பெருமானே! துயில் எழு. 

அடியார்களை ரக்ஷிப்பதில் நேர்மை உள்ளவனே! 

ரக்ஷிப்பதற்குத் தேவையான பலம் உள்ளவனே!

 எதிரிகளுக்குத் துன்பத்தைக் கொடுக்கக்கூடிய பரிசுத்தியை உடையவனே! துயில் எழு. 

பொற்கலசம் போன்ற ம்ருதுவான திருமுலைத்தடங்களையும் சிவந்த வாயையும் மெல்லிய இடையையும் உடைய நப்பின்னைப் பிராட்டியே! பெரிய பிராட்டியைப் போன்றவளே! துயில் எழு. 

நோன்புக்குத் தேவையான திருவாலவட்டத்தையும் கண்ணாடியையும் எங்களுக்குக் கொடுத்து உனக்கு நாதனான கண்ணனையும் கொடுத்து இப்போதே, நீயே அவனுடன் எங்களை நீராட்ட வேண்டும்.



ஸ்ரீவில்லிபுத்தூர்   ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னா ர் பகல் பத்து 3ம் திருநாள்






ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்



அன்புடன்

அனுபிரேம்💗💗💗

No comments:

Post a Comment