22 January 2024

ஸ்ரீ பால ராமச்சந்திர மூர்த்தி, அயோத்தி.

ஸ்ரீ பால ராமச்சந்திர  மூர்த்தி, அயோத்தி.







 ஓ ராமா நீ நாமம்

    ஏமி ருசிரா?

ஓ ராமா நீ நாமம்

    எந்த ருசிரா?

மதுரசமுல கண்டெ 

    ததி க்ருதமுல கண்டெ

அதிகமொ நீ நாமம்

    ஏமி ருசிரா?


த்ராக்ஷாரசமுல கன்ன

    இக்ஷு ரசமுல கன்ன

பக்ஷி வாஹன!

    நீ நாமம் ஏமி ருசிரா?


அஞ்சனதனய ஹ்ருத் கஞ்ச

    தளமுலண்டு ரஞ்சிலு

நீ நாமம் ஏமி ருசிரா?


சதா சிவுடு மடி சதா

    பஜிஞ்சேதி சதானந்தமாகு

நீ நாமம் ஏமி ருசிரா?


சரநன்ன ஜனமுல

    சரகுண ரக்ஷிஞ்சு

பிருது கலிகின

    நீ நாமம் ஏமி ருசிரா?


கரிராஜ ப்ரஹ்லாத தரணீஜா

     விபீஷணகுல காசின

நீ நாமம் ஏமி ருசிரா?


கதலி கர்ஜூரபல

    ரசமுல கதிகமு

பதித பாவன,

    நீ நாமம் ஏமி ருசிரா?


தும்புரு நாரதலு

    டம்பு மீராக

கானம்பு சேசேதி,

    நீ நாமம் ஏமி ருசிரா?


அரய பத்ராசல 

    ஸ்ரீ ராமதாசுனி

ப்ரேம நெளின

    நீ நாமம் ஏமி ருசிரா?






ஸ்ரீராமனே!

நின் நாமத்தினைச்

சொல்லச் சொல்ல

நெஞ்சம் இனிக்குதடா!!


தேனை விட

தயிரை விட

நெய்யை விட

திராட்சையை விட

கரும்பை விட

வாழைக்கனியை விட

பேரீச்சம்பழத்தை விட

சுவையானதன்றோ

ஸ்ரீராமனே நின் நாமம்!!


அஞ்சனை மைந்தனும்

மாதொரு பாகனும்

தம் சிந்தையுள்

உன்னை ஏற்றி

உன்னைத் துதித்து

ஆனந்தம் அடைகின்றனர்!!


நாரதனும், தும்புருவும்

பாடி மகிழ்கின்றனர்!!


சரணடைந்தவர்களைக்

காப்பாற்றுவன் நீயென்பது

நின் நாமத்திலேயே

இருக்கிறது அல்லவா?


அன்னை ஜானகியைக்

காத்தவன் நீயன்றோ!


இராவணனின் தம்பியாம்

விபீஷணனை அன்று

காத்தவன் நீயல்லவோ!


பிரகலாதனைக் காத்தாய்!

பேரானையையும் காத்தாய்!


அடியேன் பத்ராசல

ராமதாஸ் ஆகிய

என்னிடத்திலும்

அன்பினைக் காட்டி

அரவணைத்தவன் நீயன்றோ!!


ஸ்ரீராமனே!

நின் நாமம்

எத்தனை ருசியானது!!





312.   

முடி ஒன்றி*  மூவுலகங்களும் ஆண்டு*  உன்- 

அடியேற்கு அருள் என்று*  அவன்பின் தொடர்ந்த* 

படியில் குணத்துப்*  பரத நம்பிக்கு*  அன்று- 

அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற* 

அயோத்தியர் கோமானைப் பாடிப் பற.*


725.   

ஆலின் இலைப் பாலகனாய்*  அன்று உலகம் உண்டவனே* 

வாலியைக் கொன்று அரசு*  இளைய வானரத்துக்கு அளித்தவனே* 

காலின் மணி கரை அலைக்கும்*  கணபுரத்து என் கருமணியே* 

ஆலி நகர்க்கு அதிபதியே*  அயோத்திமனே தாலேலோ  


  

1875.   

கவள யானை பாய்புரவி*  தேரொடு அரக்கர் எல்லாம்-

துவள,*  வென்ற வென்றியாளன்*  தன் தமர் கொல்லாமே*

தவள மாடம் நீடு அயோத்தி*  காவலன் தன் சிறுவன்*

குவளை வண்ணன் காண ஆடீர்*  குழமணி தூரமே.



3605

கற்பார் இராம பிரானை அல்லால்*  மற்றும் கற்பரோ?,* 

புல் பா முதலா*  புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே,*

நல்பால் அயோத்தியில் வாழும்*  சராசரம் முற்றவும்,* 

நல்பாலுக்கு உய்த்தனன்*  நான்முக னார்பெற்ற நாட்டுளே?  (2)



ராம ராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய சீதா ராம்

ராம ராம ஜெய ராஜா ராம், ராம ராம ஜெய சீதா ராம்......


அன்புடன் 

அனுபிரேம் 💖💖


No comments:

Post a Comment