01 January 2024

16. நாயகனாய் நின்ற

 16. நாயகனாய் நின்ற...

நந்தகோபனுடை திருமாளிகையைக் காப்பவனே! அழகிய தாழ்ப்பாளைத் திறந்து விடு, இடைச் சிறுமிகளுக்கு நீல நிற வண்ணனான  ஸ்ரீ கிருஷ்ணன் சப்திக்கும் பறையைக் கொடுப்பதாக  வாக்களித்தான். அவன் தூக்கத்திலிருந்து எழுந்திருக்க  பாட வந்திருக்கிறோம்.




பதினாறாம் பாசுரம் - இதில் நந்தகோபன் திருமாளிகை வாயில் காவலர்களையும், அவர் அறையின் காவலர்களையும் எழுப்புகிறாள்.



நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய

      கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண

வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்

      ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்

      தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்

வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ

      நேய நிலைக் கதவம் நீக்கு ஏலோர் எம்பாவாய்


எங்களுக்கு ஸ்வாமியாய் இருக்கும் நந்தகோபனுடைய திருமாளிகையைக் காப்பவனே! 

கொடிகள் இருக்கும் தோரண வாயிலைக் காப்பவனே! 

ரத்னங்கள் பதிக்கப்பட்ட கதவினுடைய தாளை நீக்கவேண்டும்.

 இடைப் பெண்களான எங்களுக்கு ஆச்சர்யமான செயல்களை உடையவனும் நீல ரத்னம் போன்ற திருநிறத்தை உடையவனுமான கண்ணன், நேற்றே எங்களுக்கு ஓசையெழுப்பும் பறையைக் கொடுப்பதாக வாக்களித்தான். 

அவனைத் திருப்பள்ளி உணர்த்துவதற்காக உள்ளத் தூய்மையுடன் வந்துள்ளோம்.

 ஸ்வாமி! முதலில் உங்கள் வாயால் மறுக்காமல், கண்ணனிடத்தில் அன்பு கொண்ட இந்தக் கதவை நீங்களே திறக்கவேண்டும்.









ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்



அன்புடன்

அனுபிரேம்💗💗💗

No comments:

Post a Comment