14 January 2024

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்






 


ஆண்டாள் வாழித்திருநாமம்


திருவாடிப் பூரத்து  செகத்து உதித்தாள் வாழியே

திருப்பாவை முப்பதும்  செப்பினாள் வாழியே

பெரியாழ்வார் பெற்று எடுத்த பெண் பிள்ளை வாழியே

பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே

உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே

மருவாரும்  திருமல்லி வள நாடி வாழியே

வண் புதுவை நகர்க் கோதை மலர்ப் பாதங்கள் வாழியே 











அன்னவயல் புதுவை ஆண்டாள் * அரங்கற்குப்

பன்னு திருப்பாவைப் பல்பதியம் * - இன்னிசையால்

பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை

சூடிக் கொடுத்தாளைச் சொல்லு


சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே! * தொல்பாவை 

பாடி அருளவல்ல பல்வளையாய்! * நாடி நீ

வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம் *

நாம் கடவா வண்ணமே நல்கு.












கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர்
சோதி மணிமாடம் தோன்றும் ஊர்  -நீதியால்
 நல்ல பத்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்.

பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் - கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும்  வம்பு.













ஸ்ரீ  ஆண்டாளின் அனுகிரகத்தால் தினமும் இங்கும், youtubeலும்  பாசுரங்களை பகிரும் பாக்கியம் பெற்றேன்...  மனதிற்கு மகிழ்ச்சி தந்த  ஒரு செயல். மேலும் தொடர்ந்து இங்கு வந்து சேவித்த நண்பர்களுக்கும்  என் மனமார்ந்த நன்றிகள்...
















ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ....


அன்புடன்

அனுபிரேம்🌺🌺🌺

1 comment:

  1. மிக அழகிய படங்களைக் கோர்த்து இந்த மார்கழியை நிறைவு செய்துள்ளீர்கள்.

    ReplyDelete