திருப்பாவை 12
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்!
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்!
அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏலோர் எம்பாவாய்
நன்றி: Upasana Govindarajan Art |
பொருள்:
எருமைகள் பால் சொரிந்து, உறங்கும் தோழியின் இல்ல வாசலை சேறாக்கி விட்டதால், அவளது வீட்டுக்குள் நுழைய முடியாத பெண்கள், அவளது வீட்டு வாசலிலுள்ள ஒரு கட்டையைப் பிடித்துக் தொங்கியபடி அவளை எழுப்புகிறார்களாம் இந்தப் பாடலில். பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது.
இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் மாளிகையின் வாசற்காலைப் பற்றி நின்ற வண்ணம், (சீதாபிராட்டியை தன்னிடமிருந்து பிரித்ததால்) பெருங்கோபம் கொண்டு இலங்கை வேந்தன் ராவணனை மாய்த்தவனும், நம் உள்ளத்துக்கினியவனும் ஆன ஸ்ரீராமபிரானின் திருப்புகழை நாங்கள் பாடிக்கொண்டிருப்பதை கேட்டும் நீ ஏதும் பேசாதிருக்கலாமா! இப்போதாவது விழித்தெழுவாய்! ஊரில் உள்ளோர் அனைவரும் எழுந்து விட்ட பின்னரும் நீ பெருந்தூக்கத்தில் இருக்கலாமா! உன் ஆழ்ந்த உறக்கத்தின் பொருள் தான் என்ன?
விளக்கம் -
நாட்டில் இருந்த நாட்களோடு, காட்டில் இருந்த நாட்களோடும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் எம்பெருமான் இராமனை பின்தொடர்ந்து, நோக்கிக் கொண்டு திரியும், இளையபெருமாளை (லக்ஷ்மணன்) போன்று, கண்ணனை அன்றி மற்றொருவரையும் அறியாமல் என்று மொத்தமாக அவனையே பின் தொடர்ந்து அவன் பக்கம் மிகவும் பரிவு பூண்டிருப்பான் ஓருவனுடைய தங்கையாய்ச் சீர்மை பெற்றிருப்பாள் ஓரு ஆய்ப்பெண்ணை, நற்செல்வன் தங்காய் என்பவளை, உணர்த்தும், கனைத்து இளம் கற்றெருமை என்ற பாசுரம்.
கறவைகளைக் காலந் தவறாது கறப்பதில்லை ; அந்த கறவைகள் வகுத்த காலத்தில் கறக்கப் படாததால், வாசலிலே நின்று குமுறி, தூரத்தில் கட்டப்பட்டு நின்றுள்ள கன்றின் மீது தனது பாசத்தை செலுத்தி அதனால், கன்று பால் குடிப்பதாக நினைத்துக்கொண்டு, முலை வழியே பால் சொரிந்து கொண்டே இருக்கும்.
அர்ஜுனன் கேளாதே இருந்த போதும், கண்ணன் கீதையை கூறத் தொடங்கினால் போல உள்ளது கறவைகள் பால் சுரப்பது என்கிறார். அந்தப் பால் பெருக்கால் வீடு முழுவதும் வெள்ளம் பெருகியது. அது ராவண வதம் முடிந்த பிறகு, திருவயோத்திக்கு மீண்டும் எழுந்து அருள, பெருமாளை (இராமன்) நோக்கி, பரத்வாஜ மஹர்ஷி, பரதாழ்வான் இரவும் பகலும் எப்போதும் அழுது அழுது, நனைத்தில்லம் சேறாக்கினன் என்பதற்கு ஒப்பு ஆகும்.
இங்கு பால் சேறு ஆனாலும் அதனைச் செல்வம் என்று சொல்லி, இப்படி செல்வம் உடையானுக்குத் தங்கையாகப் பிறந்தவளே! என்று அவளை அழைக்கின்றனர்.
தென் இலங்கை கோமானை, என்பதை பற்றி சொல்லும் போது, ஒரு அம்பாலே இராவணனின் தலை அறுக்காமல், படையை கொன்று, புத்திர, பௌத்திரர்களை கொன்று, ஆயுதங்களை முறித்து, அரக்கர் கோன் என்ற பெருமைகளை அழித்ததை சொல்கிறார். இராமன் இராவணனோடு போர் புரியும் போது அவன் ஆயுதங்களை இழந்து நிற்கும் போது, இரக்கமுற்று, “போரில் மிகவும் வருத்தமுற்றாய்; ஆதலின் இன்று இருப்பிடம் சென்று சிறிது தேறி நாளை போர்க்கு வா,” என்று அனுமதி தந்து, தானே போகவிட்டு அருளினது முதலிய பல குணங்களினால் “மனத்துக்கு இனியானை” என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.
பொய்கையாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது என்பார்கள். இந்த பாசுரத்தோடு ஆண்டாளுக்கு முந்தின ஆழ்வார்களை எல்லாம் சொல்லியாயிற்று. ஸ்ரீ மதுர கவி, ஆண்டாள் ஆகிய இவ்விருவரையும் உணர்த்துவதும் இப்பாட்டிலேயே இருக்கிறது என்றும் சொல்வார்கள்.
இப்பாடல் கூறும் திவ்யதேசம் -
12. கனைத்திளம் - தென் இலங்கை கோமானை சேற்ற மனத்துக்கு கினியான்- தில்லை திருச்சித்திரக்கூடம்.
ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ ஆண்டாள் சேர்த்தி சேவையில் |
No comments:
Post a Comment