காலை வணக்கம் ....
எனக்கும் செடி வளர்க்க வேண்டும் என்று பல நாள் .......வருட கனவு
8 வருசத்துக்கு முன் வாங்கின தொட்டி இது....நானும் பலமுறை பலவிதமாக முயற்சி செய்தும்.............ஒண்ணும் வளறல....
கடைசியா ஏப்ரல் மாதம் வந்த அம்மா....சும்மா ஒரு தக்காளிய நசிக்கி போட்டாங்க...
10 நாள்ல வளர ஆரம்பித்து விட்டது...
ஆன எனக்கு கவலையும் ஆரம்பித்து விட்டது.....ஆமா நான் ஒரு மாசத்துக்கு ஊருக்கு போறேனு...
ஆன அவர்கிட்ட மட்டும் தண்ணி ஊத்த சொல்லிட்டு கிளம்பியாச்சு...
ஒரு மாசத்திற்கு பிறகு...........
ஆச்சரியம்....எல்லாரும் நல்லா வளர்ந்திதாங்க.....
தொட்டிக்குள்ள மண்ணு மட்டுமில்ல பிரட் எல்லாம் இருந்தது....
நல்லா செடிய வளர்திருக்கிங்கன அவருக்கும் ஒரு பாராட்டை கொடுத்தாச்சு.....
அவங்க எப்போ காய் காய்ப்பாங்கனு எல்லாம் எனக்கு தெரியாது ஆன மனசுக்கு ரொம்ப சந்தோசம்....அதை உங்ககிட்ட பகிர்ந்துக்கதான் இந்த பதிவு...........
தினமும் அந்த இலைய தொட்டு வாசம் பிடிப்பது..........அப்பப்பா...ஆனந்தம்
எங்க செடியில் காய்த்த தக்காளி உங்கள் பார்வைக்கு...
என்றும் அன்புடன்
அனுபிரேம்
ஆஹா !! சூப்பர் !! உண்மைதான் அனு ..நம்ம கையாலேயே வீட்டில் வளர்க்கும்போது அந்த சந்தோஷமே தனிதான்
ReplyDeleteஎங்க வீட்லயும் கசக்கி போட்ட விதைகள் அழகா வளந்திருக்கு !!!
சந்தோஷத்தை எங்களுடன் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி
நன்றி ஏஞ்சலின் .....என்னுடைய தோட்ட பதிவுக்கு நீங்க தான் வழிகாட்டி....
Deleteதக்காளிச்செடி வளர்த ஊக்கத்திற்குப்பாராட்டுக்கள்.
ReplyDeleteதக்காளி இலைகளை பருப்பில் போட்டு கீரை மாதிரி கூட்டு கடையல் செய்வார்கள்.சுவையும் ,.வாசனையும் நன்றாக இருக்கும்..
நன்றி அம்மா...கட்டாயம் செய்து பார்க்கிறேன்..புதுமையாக உள்ளது....
Deleteஅட என்னை போலவே தோட்டப் பிரியையா நீங்க ...சூப்பர் !!! நாம வளர்த்த செடியில் பழுக்கும் தக்காளி என்பது நம் உழைப்பு + ஆர்வம் + ஆசை + அக்கறை அத்தனையும் சேர்ந்தது...அதனால் சுவையும் அதிகம் !!!
ReplyDeleteவாழ்த்துகள் அனு !!
ஆமா ..நம்ப செடி காயினா சுவையே தனி ....
Delete