09 February 2019

திருநாங்கூர் கருட சேவை - 2019

திருநாங்கூர் பதினொரு கருட சேவை 

தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் திருமணிமாடக் கோயில் என்று அழைக்கப்படும் நாராயணப் பெருமாள் சன்னதியில்  கருடசேவை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.











திருமங்கை மன்னன், பரகாலன், நீலன், ஆலிநாடன், கலிகன்றி, மங்கையர் கோன், மங்கை வேந்தன், கலியன் என்றெல்லாம் அழைக்கப்படும் திருமங்கை ஆழ்வார் இந்த திவ்ய தேசங்களில் திருக்குறையலூரிலேதான் அவதரித்தார்.

 மணக் கோலத்தில் பெரிய பிராட்டியாரோடு வந்த பெருமாளால், திருமணங்கொல்லையில் அஷ்டாத்திர மந்திரோபதேசமும் பெற்றார், 
இந்த பதினோரு திவ்ய தேசங்களையும் இவர் மட்டுமே மங்களாசாசனமும் செய்துள்ளார்.

 திருமங்கையாழ்வாரோடு பெரிதும் தொடர்புடையவை இத்திவ்ய தேசங்கள்.






  இத்தகைய சிறப்புகளைக் கொண்ட 
திருநாங்கூர் திவ்ய தேசங்கள்-



1. திருக்காவளம்பாடி, ஸ்ரீகோபாலகிருஷ்ணன்

2. திரு அரிமேய விண்ணகரம், ஸ்ரீகுடமாடுகூத்தர் (ஸ்ரீசதுர்புஜ கோபாலன்)

3. திருவண்புருஷோத்தமம், ஸ்ரீபுருஷோத்தம பெருமாள்

4. திருச்செம்பொன்செய் கோயில், ஸ்ரீசெம்பொன்னரங்கர்.

5. திருமணிமாடக் கோயில், ஸ்ரீநாராயண பெருமாள்.

6. திருவைகுந்த விண்ணகரம், ஸ்ரீவைகுந்தநாதன்.

7. திருத்தேவனார்த் தொகை, ஸ்ரீமாதவ பெருமாள்.

8. திருத்தெற்றியம்பலம், செங்கண்மால்.

9. திருமணிக்கூடம், ஸ்ரீவரதராஜன்.

10. திருவெள்ளக்குளம், ஸ்ரீநிவாஸ பெருமாள்.

11. திருப்பார்த்தன்பள்ளி, தாமரையாள் கேள்வன்



 ஆகிய பெருமாள்கள் தங்களுடைய கோயில்களில் இருந்து மேள, தாளங்களுடன் புறப்பட்டு திருநாங்கூர் மணிமாட கோயில் முன்பு எழுந்தருள்வர்.


பின்னர், மணவாள மாமுனிகள் சகிதம் திருமங்கை ஆழ்வார் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி 
மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.   

இந்த பதினொரு பெருமாள்களையும் திருமங்கையாழ்வார் ஒருவருக்கு அடுத்து ஒருவராக மங்களாசாசனம் செய்வார். 

பிறகு திருமங்கையாழ்வாரை மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்வார்.

இதைத் தொடர்ந்து தங்க கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய 11 பெருமாள்களுக்கும், ஆழ்வாருக்கும் ஒரே நேரத்தில் பாசுரங்கள் பாடி வீதியுலாவும்  நடைபெறும்.

அன்நிகழ்வின் படங்களே  இன்று   உங்கள் பார்வைக்கு அப்பாவின் பார்வையாக ....
















கூட்டம் அதிகம் என்பதால் இன்னும் தெளிவான படங்கள் , பெருமாள் பெயருடன் அப்பாவால் எடுக்க இயலவில்லை ..



967 
கரிய மா முகில் படலங்கள் கிடந்து*  அவை முழங்கிட*
களிறு என்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர்தரு*  பிரிதி எம் பெருமானை* 

வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர்*  கலியனது ஒலி மாலை* 
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு*  அரு வினை அடையாவே*  (2)

968         


முற்ற மூத்து கோல் துணையா*  முன் அடி நோக்கி வளைந்து* 
இற்ற கால் போல் தள்ளி மெள்ள*  இருந்து அங்கு இளையாமுன்* 

பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை 
வற்ற வாங்கி உண்ட வாயான்*  வதரி வணங்குதுமே.


ஓம் நமோ நாராயணாய நம!!


அன்புடன்
அனுபிரேம்

7 comments:

  1. படம் பார்த்துத் தரிசனம் கிடைக்கப் பெற்றேன்.

    ReplyDelete
  2. சிறப்பான தரிசனம். நன்றி.

    ReplyDelete
  3. படங்களும் விளக்கங்களும் அருமை

    ReplyDelete
  4. கும்பகோணம் கருட சேவை, தஞ்சாவூர் கருட சேவை பார்த்துள்ளேன். திருநாங்கூர் சேவையினைக் காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  5. மாயவரத்தில் இருந்த போது நிறைய தடவை போய் தரிசனம் செய்து இருக்கிறோம்.
    இரண்டு, மூன்று பதிவுகள் போட்டு இருக்கிறேன்.
    இன்று உங்கள் தளத்தின் மூலம் தரிசனம் செய்து கொண்டேன்.

    ReplyDelete
  6. படங்கள் விவரங்கள் அனைத்தும் சிறப்பு

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  7. படங்களைக் கண்டேன். விபரங்கள் அருமை (குறைவாக இருந்தாலும்)

    ReplyDelete