17 February 2019

குலசேகராழ்வார்

இன்று  குலசேகராழ்வார்    அவதார திருநட்சத்திரம் .....

மாசி -புனர்பூசம்









 குலசேகராழ்வார்  வாழி திருநாமம்!

அஞ்சனமா மலைப்பிறவியாதரித்தோன் வாழியே!

அணியரங்கர் மணத்தூணையடைந்துய்ந்தோன் வாழியே!

வஞ்சிநகரந் தன்னில் வாழவந்தோன் வாழியே!

மாசிதனிற் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே!

அஞ்சலெனக் குடப்பாம்பிலங்கையிட்டான் வாழியே!

அநவரதமிராமகதை அருளுமவன் வாழியே!

செஞ்சொல்மொழி நூற்றஞ்சுஞ் செப்பினான் வாழியே!

சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே.!





குலசேகராழ்வார்

பிறந்த   -காலம் 9ம் நூற்றாண்டு

பிறந்த இடம் -திருவஞ்சிக்களம்

பிறந்த மாதம் - மாசி

திருநட்சத்திரம்- புனர்பூசம்

வேறு பெயர்கள்- கொல்லி காவலன்,கூடல் நாயகன், கொயிகொனே , வில்லவர் கோனே , செய்ரளர் கோனே

சிறப்பு -ஸ்ரீகௌஸ்துபாம்ஸராய் - பெருமாள் அணியும் இரத்தின மாலையின் அம்சம்

பிரபந்தங்கள்: முகுந்தமாலா, பெருமாள் திருமொழி

பரமபதம் அடைந்த இடம்: திருநெல்வேலி அருகிலுள்ள மன்னார்கோயில்








650

மாவினை வாய் பிளந்து உகந்த மாலை*  வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி*
ஆவினை அன்று உயக் கொண்ட ஆயர்-ஏற்றை*  அமரர்கள் தம் தலைவனை அந் தமிழின் இன்பப்

பாவினை*  அவ் வடமொழியை பற்று-அற்றார்கள்*  பயில் அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
கோவினை நா உற வழுத்தி என்தன் கைகள்*  கொய்ம்மலர் தூய் என்றுகொலோ கூப்பும் நாளே






651
       
 இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி*  இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த*
துணையில்லாத் தொல் மறை நூல்-தோத்திரத்தால்*  தொல் மலர்க்கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த*

மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ*  மதில்-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
மணிவண்ணன் அம்மானைக் கண்டுகொண்டு*  என் மலர்ச் சென்னி என்றுகொலோ வணங்கும் நாளே 






652

அளி மலர்மேல் அயன் அரன் இந்திரனோடு*  ஏனை அமரர்கள்தம் குழுவும் அரம்பையரும் மற்றும்*
தெளி மதி சேர் முனிவர்கள்தம் குழுவும் உந்தித்*  திசை திசையில் மலர் தூவிச் சென்று சேரும்*

களி மலர் சேர் பொழில்-அரங்கத்து உரகம் ஏறிக்*  கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும்*
ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு*  என் உள்ளம் மிக என்றுகொலோ உருகும் நாளே




653

மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி*  வன் புலன்கள் அடக்கி இடர்ப் பாரத் துன்பம்
துறந்து*  இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லாத் தொல் நெறிக்கண்*  நிலைநின்ற தொண்டரான*

அறம் திகழும் மனத்தவர்தம் கதியை பொன்னி*  அணி அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்*  நீர் மல்க என்றுகொலோ நிற்கும் நாளே




654

கோல் ஆர்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்*  கொலையாழி கொடுந்தண்டு கொற்ற ஒள் வாள்* 
கால் ஆர்ந்த கதிக் கருடன் என்னும் வென்றிக்*  கடும்பறவை இவை அனைத்தும் புறஞ்சூழ் காப்ப*

சேல் ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த*  திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்* 
மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி*  வல்வினையேன் என்றுகொலோ வாழும் நாளே






ஓம் நமோ நாராயணாய நம!!
 குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்!!



அன்புடன்
அனுபிரேம்...

2 comments:

  1. நீங்க மன்னார்கோவிலுக்குப் போயிருக்கீங்களா? அங்க குலசேகராழ்வார் ஆராதித்த பெரிய இராம விக்ரஹம் இருக்கு. அந்தக் கோவில்லதான் அவரோட பிருந்தாவனமும் இருக்கு.

    வாழித்திருநாமம், வார்த்தைகளைப் பிரித்துப் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    அஞ்சனமா மலைப்பிறவி ஆதரித்தோன் வாழியே!

    அணியரங்கர் மனத்தூணை அடைந்து உய்ந்தோன் வாழியே!

    வஞ்சிநகரந் தன்னில் வாழவந்தோன் வாழியே!

    மாசிதனில் புனர்பூசம் வந்து உதித்தான் வாழியே!

    அஞ்சல் எனக் குடப்பாம்பில் அங்கை இட்டான் வாழியே! (அஞ்சல்-அஞ்சேல்-பயமில்லை அங்கை-அழகிய கை)

    அநவரதம் இராமகதை அருளும் அவன் வாழியே! (அநவரதம்-எப்போதும்)

    செஞ்சொல்மொழி நூற்றஞ்சும் செப்பினான் வாழியே!

    சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே.!

    ReplyDelete
    Replies
    1. மன்னார் கோவிலுக்கு சிறு வயதில் சென்று இருக்கிறேன் ..வேறு நினைவு இல்லை

      குலசேகராழ்வார் பிருந்தாவனம் படங்கள் கண்டு இருக்கிறேன் ..அப்பா தான் இப்பொழுது அனைத்து இடங்களுக்கும் செல்வது அவர் வழி செய்திகள் தான் நான் பகிர்வதும் ..

      பெரும்பாலும் அனைத்து கோவில் உற்சவ பத்திரிகைகள் அப்பாவிற்கு வரும் ..அப்பாவையும் அங்கிருக்கும் ராமானு கூடத்திலிருந்து கைங்கர்யதிற்க்கு அழைப்பார்கள்..

      அடுத்த முறை வாழித்திருநாமம் இப்படியே பகிர்கிறேன் ..

      நன்றி

      Delete