வாழ்க வளமுடன்
மலையின் மேல் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மலை மேல் ஏறி கிழக்குப் பக்கமாக வந்தால், புகழ்பெற்ற சமணர் படுக்கைகளைக் காணலாம். மொத்தம் ஏழு படுக்கைகள் இருக்கின்றன கல் தலையணையோடு...!
இயற்கையில் அமைந்த தாழ்வாரம் மாதிரி உள்ளது இந்த குகை.
இங்கேதான் சமண துறவிகள் பல ஆண்டுகளுக்கும் மேலாக தங்கி சமய சேவைகள் செய்து, பின் நோன்பிருந்து தம் நல்லுயிர் ஈந்திருகின்றனர். இந்த குகை ஒரு அறை போன்று தோற்றம் உடையது.
பாறையில் ஆறு அங்குல நீளத்திற்கு படுக்கைகள் வழவழப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்தப் படுக்கைகளில் தான் சமண முனிவர்கள் படுத்து உறங்கினார்கள்.
இந்த படுக்கையைச் சுற்றித்தான் தென்னிந்தியாவின் மிகப் பழமையான எழுத்துவடிவம் கல்வெட்டாய் நமக்குக் கிடைக்கிறது. தமிழ் மொழியை அசோக பிராமியில் பதித்துள்ளார்கள்.
கி.பி. 8-9ம் நூற்றாண்டுகளுக்குரிய தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட சமணத் துறவிகளின் பெயர்களும் அதில் உள்ளன.
எருமிநாட்டில் உள்ள குமிழூரில் பிறந்த காவுடி (துறவியோட பெயர்)க்காக, தென்கு சிறுபோசில் ஊரைச் சேர்ந்த இளையர் செய்தளித்த படுக்கை என்பதே அதில் கூறப்படும் செய்தி. செய்தியை விட , அது செய்யப்பட்ட காலத்தில் தான் சிறப்பு உள்ளது.
பெரும்பாலும் அனைத்துப் படுக்கைகளும் கல்வெட்டுக்களைக் கொண்டுள்ளன. பொதுவாக யாருக்காக யார் செய்து கொடுத்த படுக்கை என்று அதில் எழுதப்பட்டிருக்கும். சில படுக்கைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கல்வெட்டுக்களும் உண்டு. ஒரே படுக்கையை பலரும் பயன்படுத்தி இருக்கலாம் அல்லவா.
எத்தகைய கால பொக்கிஷம் என்னும் பிரமிப்புடன் கண்டு ரசித்தோம் , இடமும் , சூழலும் அத்துனை அழகு ...
முந்தைய பதிவுகள்
சித்தன்னவாசல் பற்றி
சமணர் குடைவரைக் கோயில்
அறிவர் கோயிலும் ஓவியமும்
ஏழடிப்பாட்டம்
தொடரும்...
அன்புடன்
அனுபிரேம்
சித்தன்னவாசல் பற்றி
சமணர் குடைவரைக் கோயில்
அறிவர் கோயிலும் ஓவியமும்
ஏழடிப்பாட்டம்
தொடரும்...
அனுபிரேம்
படங்களும் பகிர்வும் அருமை
ReplyDeleteஒருமுறை சென்று வந்துள்ளேன்
நன்றி சகோதரியாரே
ஏழடிப்பாட்டம் எங்கே இருக்கிறது என்ற தகவல் இல்லையே...
ReplyDeleteவியப்பை ஊட்டுகின்றது அந்தச்சூழ்நிலை...
மற்றபடி படங்கள் அழகு...
புதுக்கோட்டையிலிருந்து விராலிமலைக்குச் செல்லும் சாலையில், 16 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது சித்தன்னவாசல்....
Deleteசித்தன்னவாசல் பயண குறிப்புகள் இவை ..அங்கு தான் ஏழடிப்பாட்டம் உள்ளது ..போன பதிவில் இந்த தகவல்கள் எல்லாம் உள்ளத்தால் இங்கு பகிர வில்லை ..
மிக அருமையாகவும், சில படங்கள் பார்க்கப் பயமாகவும் இருக்குது அனு.
ReplyDeleteஇடம் சூப்பரா இருக்கும்போல!
ReplyDeleteஅற்புதமான, பார்க்க வேண்டிய இடங்கள்.
ReplyDeleteஅழகிய படங்கள்.
படுக்கை.... ஏதோ போர்வை, தலையணை, தண்ணீர் கூஜாலாம் இருக்குமான்னு பார்த்தா, பாறைல வெட்டியிருக்கும் படுக்கை போன்ற அமைப்பு... தூக்கம் வரும்கிறீங்க?
ReplyDelete