04 February 2019

கம்பு தோசை

வாழ்க வளமுடன்...

கம்பு  தோசை  இன்றைய பதிவில் ...






தேவையானவை

கம்பு                    –      1 கப்

இட்லி அரிசி     –      1 கப்

உளுத்தம் பருப்பு  -  1/2 கப்

உப்பு 

     





கம்பு , அரிசி , உளுந்தை தண்ணீர் சேர்த்து
 3 மணிநேரம் ஊற விடவும் ...

பின் அதை அரைத்து உப்பு சேர்த்து கரைக்கவும் ...  

அந்த  மாவை 6 மணி நேரம் கழித்து தோசை வார்க்க ...

கம்பு தோசை ரெடி ...










அன்புடன்
அனுபிரேம்






13 comments:

  1. பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  2. இங்கு கம்பு சரியாக கிடைப்பது இல்லை. கிடைக்கும்போது கண்டிப்பாக செய்து பார்க்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. பூரிக்கட்டை இங்கு நிறைய இருக்கிறது அது எல்லாம் தடித்த கம்பால் செய்யப்பட்டுள்ளது வேண்டுமானல் அனுப்பட்டுமா நண்பரே

      Delete
    2. பூரிக் கட்டை வைத்து தோசை செய்ய முடியாதே ...

      Delete
  3. அருமையாய் வந்திருக்கிறது என்று தெரிகிறது.

    ReplyDelete
  4. இதோ கம்பு வாங்க கிளம்பிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. வயசான கம்பு தேவைதான் சிக்கிரம் வாங்குங்கோ இல்லைன்னா நடக்கும் போது கிழே விழுந்திடப் போறீங்க

      Delete
    2. கம்பு தோசை சுடுவது பற்றி சொன்னீங்க அதோடு அதன் பயன்களையும் சொல்லி இருக்கலாம்..கம்பு தோசை சாப்பிட்டால் உடலி வலு கூடுமா?பூரிக்கட்டை அடியில் இருந்து உடம்பை காக்க வலு சேர்க்க வேண்டும் அதனால்தான் கேட்கிறேன்

      Delete
  5. வயசான கம்பு தேவைதான் சிக்கிரம் வாங்குங்கோ இல்லைன்னா நடக்கும் போது கிழே விழுந்திடப் போறீங்க....


    ராஜி க்கா உங்களுக்கு வயசாகி போச்சு ன்னு தமிழர் சொல்றார் பாருங்க..

    ReplyDelete
  6. கம்பு தோசை சாப்பிட்டால் உடலி வலு கூடுமா?

    ...நிச்சியமா வலு கூடும் தமிழரே ..ஆனால் என்ன நீங்க மாமி ய விட்டு சாப்பிட மாட்டிங்க சோ அவங்களுக்கும் வலு கூடும் ...அதனால் அடி இன்னும் பலமாகும் ...

    பார்த்துகோங்க

    ReplyDelete
  7. கம்பு தோசை பார்க்க ரொம்ப நல்லா வந்திருக்கு. தொட்டுக்க கொஞ்சம் கொத்தமல்லி சேர்த்த ஏதோ சட்னியா?

    இந்தத் தோசைக்கு, புளிமிளகாய் அல்லது ப.மிளகாய்+சிறிது கொத்தமல்லி+பெருங்காயம் சேர்த்து அரைத்த கலவை (ப.மிளகாய்தான் அதிகமா இருக்கும், கொத்தமல்லி இல்லை) ரொம்ப நல்லா இருக்குமே.

    ReplyDelete
  8. அன்பு அனு மா. இங்கேயும் கேழ்வரகு கிடைக்கிறது. கம்பு
    இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்/ தோசை பார்க்கவே
    அருமையாக இருக்கிறது.நன்றி மா.

    ReplyDelete
  9. வணக்கம் சகோதரி

    சுவையாக இருக்கிறது கம்பு தோசை.. செய்முறையும் மிக எளிதாக உள்ளது. சாதரண தோசையைப் போல் அரிசி. பருப்புடன் ஊற வைத்து, தோசை பார்க்கவே மிகவும் அழகாக உள்ளது. கம்பு உடலுக்கு குளிர்ச்சி தரும் தானியம். பாரதியின் வரிகளையும் ரசித்தேன். பதிவு அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete