11 February 2019

வாசிப்பில் - நாயகியும் , கீச்சு கீச் என்றதும்



இனிய காலை வணக்கம்

 கடந்த வாரம் வாசித்த இரு நாவல்களின் வாசிப்பு  அனுபவங்களை இன்று இங்கு பகிர்கிறேன் .

இவை நாவலுக்கான விமர்சனம் அல்ல, எனது வாசிப்பு அனுபவம் .


அமேசான் கிண்டில் pen to publish 2018 போட்டியில் பங்கேற்கும் கதைகள் இவை .




1. ஜான்சியின் நாயகி 




ஒரு பெண் பல இடர்களுக்கு பின் படிக்க வருவதும் , அங்கு அவள் எதிர் நோக்கும் பிரச்சனைகளுமே இந்த நாவல் . 
 போராட்ட குணம் கொண்ட நாயகி , எவ்வாறு இந்த போராட்டத்தில்  வெல்கிறாள் என்பதே கதை கரு .

நன்றாக  படிக்கும்  மாணவன் . ஆனாலும் புரிதல் இல்லா கல்வி , வாழ்வின் நல்ல குணங்களை போதிக்காத கல்வி
 என்பதை உணர்த்தும் மாணவன்,

அவனின் தவறான நோக்கத்தால் 
அவளை பாலியல் வன்புணர்வு செய்கிறான், 
இதில் அவளின் நிமிர்வு , அவனுக்கான தண்டனை என இயல்பாக நம் சமுகத்தில் காணும் கொடுமைகளை இங்கு காண முடிகிறது .


அந்த நிகழ்வுக்கு பின் அவளின் வலிகள், வேதனைகள் ...படிக்க படிக்க….மனமும் கண்களும் கலங்குகின்றன.

நீதி மன்றத்தில் அவளின் கலக்கம் ,
மற்றவர்களின்  நிலை ... அங்கு அவளுக்கான அவளின் தைரியம்…
இங்கு  எல்லாம் எழுத்தாளரின் எழுத்துக்கள் ஒளிர்கின்றன .

ஒரு புறம் மனம் வலித்தாலும் அவளின் நிமிர்வில்...
ஒரு புதிய உதயம்…
நாயகி ...போர்க்களத்தில் போராடி எழுந்து வந்த பூங்கொத்து..

வாழ்த்துக்கள் ஜோ ப்ரோ...



2.கீச்சு கீச் என்றது ... கிட்ட வா என்றது... 
-வநிஷா




ஒரு எளிய இலகு கதை இந்த  கீச்சு கீச் என்றது ... கிட்ட வா என்றது... 

எப்பொழுதும் 
 திருப்பங்கள் ,கஷ்டங்கள் , கோபங்கள் , வருத்தங்கள், பழிவாங்குதல்  மட்டும் கொண்டா நாவல் படைக்க வேண்டும் 

அந்த இலக்கணத்தை மீறி படிக்கும் போது ஒரு பரவசம் தரும் நாவல். 

பல பல திருப்பங்கள் இல்லை ..கதை இப்படி தான் செல்லும் என நமக்கும் புரிகிறது .
ஆனாலும் மிக பிடிக்கிறது

இது வரை நான் படித்த  எந்த நாவலிலும் 
சுற்றுலா மையம் கொண்டு படித்தது  இல்ல..
இங்கு அந்த சுற்றுலா வும், அந்த அனுபவமும் மே கதை .

வெளிநாட்டினர் வந்த சுற்றுலாவில் 
நாமும் அவர்களுடன் பயணித்த உணர்வு ...

லீ மெய் லிங் மற்றும்  ஜம்புலிங்கத்திற்கு ஏற்பட்ட இனிமையான அன்பை அழகாக கொடுக்கிறார் வநிஷா.
அவர்களுக்கு பொது மொழி இல்லை என்றாலும் , 
பண்டை மொழி யில் (சைகை ) பேசி, ரசிக்க வைக்கின்றனர் .

அங்கு அங்கு தனது நகைச்சுவையால் நமக்கும் கிச்சு கிச்சி மூட்டுகிறார் வனிஷா.

படித்து முடிக்கும் போது முகத்தில் புன்னகையும் , மனதில் அமைதியும் வருகிறது .

வாழ்த்துக்கள் வநிஷா...



வாய்ப்பு கிடைக்கும் போது வாசித்து பாருங்கள் ...வித்தியாசமான நாவல்கள் 


அன்புடன்
அனுபிரேம்



8 comments:

  1. புத்தக விமர்சனம் நன்றாக இருக்கிறது அனு.

    ReplyDelete
  2. புத்தக விமர்சனம் அருமை

    ReplyDelete
  3. அறிமுகம் நன்று
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  4. புத்தக அறிமுகத்திற்கு நன்றிம்மா

    ReplyDelete
  5. மிக நல்ல அறிமுகம் சகோதரி/அனு

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  6. கீச் கீச் என்றது...இப்ப சமீபத்தில் வந்த மணிரத்தினம் படம் அது என்ன மறந்து போச்சு ..ஹான் செசிவா....அதுல வந்த பாடல் தலைப்பு இல்லையா...

    கீதா

    ReplyDelete
  7. எழுதியவிதத்திலிருந்தே வாசிக்க ஆவலாக இருக்கு. அருமை.

    ReplyDelete