26 February 2019

கத்திரிக்காய் மசியல் / சட்னி


வாழ்க வளமுடன்

இன்றைய ஸ்பெஷல் பதிவு கத்திரிக்காய் மசியல் / சட்னி






தேவையானவை


பெரிய கத்திரிக்காய் – 1

தேங்காய் துருவியது  – 1/2  கப்

மிளகாய்   – 3

புளி             – சிறிதளவு

உப்பு

தாளிக்க -கடுகு,உளுந்த பருப்பு , கடலை பருப்பு, பெருங்காயம்

எண்ணெய் - சிறிது


செய்முறை 




 கத்திரிக்காயின் தோலைச் சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் தேய்த்து அடுப்புத் தீயில் நன்றாக சுட்டு எடுக்கவும்.


மேல் தோல் கறுப்பாக மாறிவிடும், உரிப்பதற்கும் எளிதாக  இருக்கும்.




கத்திரிக்காயின் மேல் தோலை நீக்கிவிடவும்



ஒரு வாணலியில் சிறிது எண்ணெய்  ஊற்றி அதில்  தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து, பின் மிளகாயும்  போட்டு அந்த சூட்டிலே வறுக்கவும்  .

 புளி , தேங்காய் , உப்பு  , தோல் உரித்த கத்தரி மற்றும் தாளித்த பொருட்களை எல்லாம் சேர்த்து அரைக்க கத்திரிக்காய் மசியல் / சட்னி ரெடி .






மிக சுவையான சட்னி , சாதத்திக்கும்  தோசைக்கும் அருமையாக இருக்கும் . அத்தை வீட்டில் இதை சுட்டு பிசையும் சட்னி ன்னும் சொல்லுவாங்க ...






அன்புடன்
அனுபிரேம்








18 comments:

  1. தகவல் நன்று நன்றி சகோ.

    ReplyDelete
  2. இதுவரை செய்ததில்லை..

    ஆமா கத்திரிக்காயை சுடுவதால் சட்னி சுடுவாசனை வராதா?!

    ReplyDelete
    Replies
    1. அதில் கொஞ்சம் புகை வாசம் வரும் ஆன அதுவும் ரொம்ப நல்லா இருக்கும் ராஜி க்கா

      Delete
  3. செம சட்னி/தொகையல் நாங்க சொல்றது...எனக்கும் ரொம்பப் பிடிக்கும்...கொஞ்ச நாள் முன்னதான் செஞ்சேன்..எல்லாத்துக்கும் நல்லாருக்கும்...

    கீதா

    ReplyDelete
  4. நாங்களும் சுட்டு இப்படி செய்வோம். நாங்க பச்சடின்னு சொவோம். ஆனா இந்த முறையில் இல்லை. கத்தரிக்காயை சுட்டு பின் சாம்பார்வெங்காயம், ப.மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி சின்னதாக அரிந்து போட்டு,உப்பு, தயிர்,அல்லது 1ம் தேங்காய்பால் விட்டு லெமன் ஜுஸ் கொஞ்சம் விட்டு கலந்து சாதத்துடன் சாப்பிடுவோம். என் பேவரிட் டிஷ். இங்கு நான் ஓவனில் க்ரில் மோல்டில் வைத்து செய்கிறேன்.
    உங்க முறையிலும் செய்துபார்க்கிறேன் அனு..

    ReplyDelete
    Replies
    1. செஞ்சு பாருங்க அம்மு ..

      நீங்க சொன்ன மாதரி பொடியா கத்தரிக்காய் வெட்டி போட்டு, புளி தண்ணி ஊத்தியும் சட்னி செய்வோம்

      Delete
  5. எனக்கும் பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஸ்ரீ ராம் சார்

      Delete
  6. நானும் நீங்கள் செய்யும் முறைப்படிதான் செய்வேன் ஆனால் சில சமயங்களில் சுடுவதற்கு பதில் மைக்ரோஅவனில் எண்ணெய் தடவி வேக வைத்து சட்னி செய்வேன்

    ReplyDelete
    Replies
    1. அது இன்னும் சுலபமான வேலை ..

      Delete
  7. கத்தரிக்காய் சட்னி அருமை, நான் அரைக்காமல் குட்டியாக வெட்டிக் குழைப்பேன். வீடியோ முயற்சியும் நன்று.

    ReplyDelete
    Replies
    1. நாங்க அப்படியும் செய்வோம் அதிரா...

      பாராட்டுக்கு நன்றி

      Delete
  8. வாவ் !! பார்க்கா ஆசையா இருக்கு ..ரொம்ப வருஷம் முன்னே ஒருதடவை சுட்டப்போ எல்லாம் தீஞ்சு .அதிலிருந்து செயறதை விட்டேன் ..இப்போ சில வகை கத்திரி எனக்கு ஒத்துக்கலை ..நாட்டுக்கத்திரியில் இது நல்லா இருக்குமா ?
    செய்யணும் விரைவில்

    ReplyDelete
    Replies
    1. நாட்டுக்கத்திரியிலும் நல்லா இருக்கும் அஞ்சு ..கொஞ்சம் பெரிய கத்திரிக்காய் ன்னா சுட எளிது

      Delete
  9. இதுல புளி சேர்த்து அரைப்பதற்கு முன்னால், புளியை லேசாக வாணலில சூடுபடுத்திக்க வேண்டாமா?

    சுட்ட கத்தரி வாசனை நல்லா இருக்கும்.

    ReplyDelete