வாழ்க வளமுடன்
அறிவர் கோயிலும் ஓவியமும் பார்த்து முடிக்கும் போது மதியம் ஆகிவிட்டது .பின் கொண்டு சென்ற உணவை சாப்பிடும் போது மழை...ஆஹா மழையோ மழை ..
மழை நின்றதும் ஏழடிப்பாட்டம் பார்க்க சென்றோம் , ஆனால் அங்கு இருந்த காவலர் மழை பெய்து ஈரமாக இருப்பதால் அங்கு இப்பொழுது செல்ல முடியாது ஒரு மணி நேரம் கழித்து அனுப்புகிறேன் என்று கூறவும் , அங்கு அருகில் இருந்த சிறுவர் பூங்காவிற்கு சென்றோம் ...
நல்ல பராமரிப்புடன் , குழந்தைகள் விளையாட சிறப்பான இடம் ...
ஒரு மணி நேரம் சென்று , நுழைவு சீட்டு வாங்கிக்கொண்டு ஏழடிப்பாட்டம் காண சென்றோம் ..
செல்லும் வழி
ஒரு மலையில் செங்குத்தாக கடந்து மறுபக்கம் இறங்கவேண்டி உள்ளது. மலையில் ஏறி செல்லும் போது சுத்தமாக கழுவி விட்டது போல அவ்வளவு சுத்தம் , மலை மேல் நின்று காணும் போது கண்ணுக்கு விருந்தான இயற்கை காட்சிகள்.
அங்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் காவல் இருக்கிறார்கள் , யாரும் இல்லாத இடம் என்னும் பயம் இல்லாமல் செல்ல முடிகிறது .
நடந்தோம் ,...நடந்தோம் ..
வந்தாச்சு ..
இந்த குறுகலான படி வழியாக நடந்து சமணர்கள் படுக்கைகளும் கல்வெட்டுகளும் உள்ள இடத்துக்கு செல்ல வேண்டும் .
அங்கிருந்து இயற்கை எழில் ...
அங்கிருந்த காவலர் அந்த இடத்தை பூட்டி விட்டு , கைபேசியில் வேலையாக இருந்தார் ...
நாங்கள் கேட்கவும் அந்த கதவுகளை திறந்துவிட்டார் ,
நாங்கள் அங்கு கண்ட சமணர் படுக்கைகளையும், கல்வெட்டுகளையும் அடுத்த பதிவில் காணலாம் ...
முந்தைய பதிவுகள்
சித்தன்னவாசல் பற்றி
சமணர் குடைவரைக் கோயில்
அறிவர் கோயிலும் ஓவியமும்
தொடரும்
அனுபிரேம்
அழகிய காட்சிகள் விழிகளுக்கு விருந்து.
ReplyDeleteபடங்கள்லாம் வெகு துல்லியம்.
ReplyDeleteஇந்த மாதிரியான சமணர்கள் வரலாற்று இடங்களுக்கு போகும்போது ஒரு ப்ளஸ் பாயிண்ட் இருக்கும். அது என்னன்னா, படிகள்லாம் உயரமா இல்லாம, சும்மா ஓரிரு செ.மீ உயரம் உள்ளதாவே இருக்கும். கால்முட்டிலாம் வலிக்காது.
சுவாரஸ்யமான ப்ளஸ் திகிலான இடம்!
ReplyDeleteசென்றுள்ளேன். பார்க்கவேண்டிய இடம்.
ReplyDeleteஅழகான படங்களுடன் அருமையான பதிவு.
ReplyDeleteமிகவும் அருமையான ஒரு இடமாக தெரிகிறது.
ReplyDelete