08 February 2019

தையல் இயந்திரமும் ,புத்தரும் ..

வாழ்க வளமுடன்...





கேக் கண்காட்சியின்... 
கேக் படங்களின் அடுத்த தொகுப்பு இன்று ... ..





1775 ஆம் ஆண்டு வெய்விந்த்தாலி என்பவரால் முதல் தையல் எந்திரம் உருவாக்கப்பட்டது. 
இது மரத்தினால் செய்யப்பட்டது. 
இதனை ஊசியின் நடுப்பகுதியில் துவாரம் செய்யப்பட்ட மரத்தினாலான தையல் எந்திரம் எனலாம்.


1790 ஆம் ஆண்டு தாமசு செயின்ட் என்பவரால் 
தோல் எந்திரம் வடிவமைக்கப்பட்டது.
 விலங்குகளின் தோல்களைத் தைப்பதற்காக உருவாக்கப்பட்டது.


1830 ஆம் ஆண்டு பார்த்தடெமி திம்மோனியர் என்பவரால் 
இரும்புத் தையல் எந்திரம் வடிவமைக்கப்பட்டது.
 இது பஞ்சினால் உருவான, நூலால் செய்யப்பட்ட துணியை மட்டுமே தைக்கப் பயன்பட்டது.


1831 ஆம் ஆ்ண்டு வால்டர்ஹண்ட் என்பவரால் ஒருதலைப்பூட்டு தையல் எந்திரம் வடிவமைக்கப்பட்டது. 
இது ஊசி மற்றும் பிணைப்புத் தையலை அறிமுகப்படுத்தியது. 
தைக்கப்படுகின்ற துணியின் மேற்புறத்தில் ஊசியானது நூலுடன் கீழே நுழையும்போது 
கீழே உள்ள நூலுடன் தையல் 
உருவாகும்படி அமைக்கப்பட்டுள்ளது.


1845 ஆம் ஆண்டு இலியாசுகோ என்பவரால் தொழில் நுணுக்கங்களுடன் கூடிய புதிய தையல் எந்திரம் உருவாக்கப்பட்டது. 
வளைவான துவாரம் கொண்ட ஊசியினையும் கீழ் வழியாக நூலினைச் செலுத்தும் முறையையும் பயன்படுத்தினார். கையினால் தைக்கப்பட்ட முறையைவிட 5 மடங்கு கூடுதலாக ஒரு நிமிடத்திற்கு 250 தையல்கள் தைக்கப் பயன்படுவதாக உள்ளது.


கி.பி. 1851 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டைச் 
சேர்ந்த ஐசக்சிங்கர் என்பவர் 
மிகப்பெரிய தையல் எந்திர தொழிற்சாலையை நிறுவினார். இன்றையத் தையல் எந்திரத்தின் முன்னோடியாகத் திகழ்கிறார்.


உஷா தையல் எந்திரமானது 1935 ஆம் ஆண்டு ஜே.ஜே இஞ்சினியரிங் (J J Engineering) நிறுவனத்தாரால் 
இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்டது.




 புத்தர் ...


















 தையல் இயந்திரம் கேக் பார்க்கவும் அப்படியே பிரமிச்சு போய்ட்டேன் ..அவ்வளவு தத்ருபம் மேலும் தைக்க தேவையான எல்லா உபகரணங்களும் செஞ்சு வச்சது இன்னும் சிறப்பு ...

புத்தர் கேக் அமைதி ..

WISHING WELL கேக் ன் ஒவ்வொரு அடுக்கிலும் சின்ன சின்ன வடிவமைப்பு...அனைத்தும் கண்ணுக்கு விருந்து ..


கேக் கண்காட்சி முந்தைய பதிவு  இங்கு

 தொடரும்...


அன்புடன்
அனுபிரேம்





15 comments:

  1. நன்றாக இருக்கிறது.
    அன்பே வடிவான புத்தரை எப்படி சாப்பிடுவது?
    உஷா தையல் எந்திரம் 1960 ல் வாங்கியது இன்னும் அம்மாவீட்டில் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அன்பே வடிவான புத்தரை எப்படி சாப்பிடுவது?

      அதானே ...என்ன பண்ணுவாங்க ளா இருக்கும் ..

      Delete
  2. வாவ் !! சூப்பரா இருக்குப்பா கேக்குகள் எல்லாமே .தையல் எந்திரமும் புத்தரும் என்னே அழகு !!
    இந்த கண்காட்சியில் வைத்த கேக்குகளை பிறகு என்ன செய்வாங்க ?

    ReplyDelete
    Replies
    1. அதான் தெரில அஞ்சு ..

      அடுத்த வருஷமும் அந்த கண்காட்சிக்கு போய் கேக்கணும் ..

      Delete
  3. அருமையான பகிர்வு. கண்காட்சிக்காக செய்யப்படும் கேக்குகள் பலநாட்கள் வைக்கப்பட வேண்டியிருக்கும் என்பதால் அதை உண்பார்களா என்பது சந்தேகமே. பெங்களூரில் முன்னர் கிறுஸ்துமஸ் நேரங்களில் இது போன்ற கண்காட்சிகள் நடக்கும். மிகப் பெரிய கட்டிடங்களை கேக்காக செய்து வைத்திருப்பார்கள். தையல் இயந்திரம் நன்றாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. இதுவும் கிருஸ்துமஸ் நேரத்தில் நடந்த கண்காட்சி தான் கா ..st Josephs பள்ளி வளாகத்தில் நடந்தது

      Delete
    2. நான் பார்த்ததும் அங்கேதான். நீங்கள் பெங்களூரிலா வசிக்கிறீர்கள்?

      Delete
    3. ஆமாம் ..sarjapur அருகில்

      Delete
  4. கேக் கண்காட்சி மிகவும் அருமையாக உள்ளது. இவற்றையெல்லாம் சாப்பிட தான் மனசு வராது.
    பிறந்த நாள் கேக்கிலும் விதவிதமான வடிவங்கள் அமைத்து செய்கிறார்கள். அவ்வாறு செய்த கேக்கை வெட்டும்போது கொஞ்சம் வருத்தமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ,இப்போவெல்லாம் நிறைய விதமான கேக் க்குகள் கிடைக்கின்றன

      Delete
  5. துளசிதரன் : இது அத்தனையும் கேக்கா? வியப்பாக இருக்கிறது. பிரமிப்பாகவும் இருக்கிறது.

    கீதா: ரொம்ப அழகா இருக்கு அனு. ஓ இந்த முறையும் கேக்கலையா அனு கேக்கை என்ன செய்வாங்கனு? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி நாங்க ரொம்ப சீக்கிரம் போய்ட்டோம் ..சோ அவங்க யாரும் இல்ல நானும் கேக் பார்க்குற ஆசையில கேக்க கேக்க மறந்துட்டேன் கீதாக்கா

      Delete
  6. தையல் இயந்திர கேக் அவ்வளவு சூப்பரா இருக்கு. நம்பவே முடியல. புத்தர் கேக்கும் அழகு.

    ReplyDelete