05 February 2019

சீனப் புத்தாண்டு..

இன்று சீனப் புத்தாண்டு ....அதைப் பற்றிய  சில சுவாரஸ்ய தகவல்கள்...


சீன புத்தாண்டு 2019 ...இந்த ஆண்டின்  விலங்கு - பன்றி








மதிமான நாள்காட்டியின் அடிப்படையில் சீனப் புத்தாண்டு முடிவுசெய்யப்படுகிறது. கமாரி என்று அழைக்கப்படும் இந்தச் சீன நாள்காட்டி 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த நாள்காட்டி முறையைச் சீனாவில் அறிமுகப்படுத்தியவர் சீ உவாங் தி என்பவர்.

இந்த நாள்காட்டி 5 சுற்றுகள் அடங்கிய மொத்தம் 60 ஆண்டுகளைக் கொண்டது (5X12=60). 
ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு விலங்கின் பெயர் சுட்டப்பட்டுள்ளது. அவை எலி, மாடு, புலி, முயல், சீன நாகம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, கோழி, நாய், பன்றி ஆகியன.
 இந்த 12 விலங்கும் மீண்டும் மீண்டும் சுற்றி வந்து கொண்டே இருக்கும். 
ஐந்து  முறை சுற்றியதும்  முழுமையை அடையும்.






சீன நாள்காட்டியில் புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு திடமான தேதியில்  இல்லை.
 ஜனவரி 12 முதல் பிப்ரவரி 19 வரையிலான காலங்களில் அது சந்திர சுழற்சியை சார்ந்துள்ளது. 
ரஷ்யர்கள் ஐரோப்பிய கிரிகோரியன் நாட்காட்டியை பழக்கப்படுத்தியுள்ளனர், எனவே ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை தினம் தோராயமாக தெரிவு செய்யப்படுகிறது. 


புத்தாண்டுக்கு முதல்நாள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி ‘பெரு விருந்து’ உண்பது முகவும் முக்கியமானதாகும். குடும்ப உறுப்பினர்கள் எங்கு இருந்தாலும் கண்டிப்பாக இந்தப் ‘பெரு விருந்தில்’ வந்து கலந்துகொள்கிறார்கள். 
இதன்வழியாக அவர்களுடைய குடும்ப உறவுகளை வலுப்படுத்திக்கொள்கிறார்கள்.

மறுநாள் புத்தாண்டு என்பதால் காலையிலேயே எழுந்து விடுகிறார்கள். 
இவ்வாறு அதிகாலையிலேயே எழுவதை ‘சௌ சூய்’ என்கிறார்கள். 

சௌ சூயைக் கடைப்பிடிப்பதால் தங்கள் பெற்றோரின் ஆயுள் கூடும் என்பது சீனர்களின் நம்பிக்கை.

புத்தாண்டின் முதல் நாளில், எல்லாரும் கண்டிப்பாகப் புத்தாடை அணிய வேண்டும். சொர்க்கத்திலிருக்கும் கடவுளர்களைப் பூமிக்கு அழைத்து, அனைத்து நன்மைகளையும் வேண்டிப் பெறுவதற்காக வழிபாடு செய்கிறார்கள். இந்நாளில் அவர்கள் மரக்கறி (சைவ) உணவையே உண்கின்றனர். வீட்டில் உள்ள பெரியோர்களிடத்தில் மன்னிப்பும், ஆசியும் பெற்றுக்கொள்கின்றனர்.



‘அங் பாவ்’ அதாவது மொய்ப்பணம் போன்ற அன்பளிப்பு வழங்குவது சீனப் புத்தாண்டு நாளில் நிகழும் ஒரு வழக்கம். திருமணம் முடித்த பெரியவர்கள் கணவன், மனைவியாக சேர்ந்து சிவப்பு நிற உறைக்குள் பணத்தை வைத்துத் இன்னும் திருமணமாகாதவர்களுக்கு வழங்குவார்கள். 

அப்படி கொடுக்கப்படும் ‘அங் பாவ்’ பணத்தின் தொகை ஒற்றைப்படை எண்ணில் இருத்தல் கூடாது. 
அது கெடுதியைக் கொடுக்கும். கண்டிப்பாக இரட்டைப் படை எண்ணாக இருக்க வேண்டும். 
அதிலும் 4 எண் வரக்கூடாது. சீன மொழியில் நான்கு என்பதன் உச்சரிப்பு ‘சாவு’ என்பதுபோல ஒலிப்பதால் அதனைத் தவிர்க்கிறார்கள். 8 எண்ணில் வரும் தொகையைக் கொடுப்பது நல்ல பேறு என்று கருதுகிறார்கள்.



பட்டாசு வெடிப்பது சீனப் புத்தாண்டின் குறிப்பிடத்தக்க அங்கமாகும். 
மனிதர்களைப் பிடித்து விழுங்கும் ‘நியன்’ என்ற ஓர் அரக்கனை விரட்டவே பட்டாசு வெடிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 

இருந்தாலும், கெட்ட சத்திகளை விரட்டியடிக்கும் நோக்கத்திலேயே சீனர்கள் பெரிய அளவில் பட்டாசு கொளுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 
இதற்காகவே, சீனாவில் மணிக்கணக்காக வெடிக்கும் சரவெடிகள் தயாரிக்கப்படுகின்றன. 
பட்டாசு போலவே சீன நாக நடனமும் ,சிங்க நடனமும் புத்தாண்டின்போது தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருக்கிறது. 







அன்புடன்
அனுபிரேம்...


8 comments:

  1. யாதும் ஊரே! யாவரும் கேளிர்...

    இனிய சீனப்புத்தாண்டு நலவாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ராஜி க்கா ...எல்லோரும் நம் மக்களே

      Delete
  2. நல்ல தகவல்கள் சீனப்புத்தாண்டு பற்றி. - துளசிதரன்

    அனு நான் நேரிலேயே பார்த்திருக்கேன் அவங்க நடனம் எல்லாம்....சூப்பரா இருக்கும்.

    //பட்டாசு வெடிப்பது சீனப் புத்தாண்டின் குறிப்பிடத்தக்க அங்கமாகும்.
    மனிதர்களைப் பிடித்து விழுங்கும் ‘நியன்’ என்ற ஓர் அரக்கனை விரட்டவே பட்டாசு வெடிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

    இருந்தாலும், கெட்ட சத்திகளை விரட்டியடிக்கும் நோக்கத்திலேயே சீனர்கள் பெரிய அளவில் பட்டாசு கொளுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். //

    ஆமாம் கிட்டத்தட்ட நம்ம தீவாளி போலத்தான் இல்ல? நான் அப்படித்தான் நினைத்தேன் நேரில் கண்டு இதைப் பற்றி அறிந்த போது....

    சூப்பர் அனு தகவல்கள் ---

    கீதா

    ReplyDelete
    Replies
    1. hello fm la ஞாயிறு மதியம் இந்த சீன வரலாறு சொல்லுவாங்க க்கா.. அதை கேக்க ஆரம்பிக்கவும் தான் எனக்கு ஆர்வம் வந்தது ...

      அவங்க சொன்ன நிறைய கதைகள் நம்மது போல தான் ..

      சூப்பர் க்கா நேர்லயே பார்த்து இருக்கீங்க

      Delete
  3. ஹா ஹா ஹா இவ்வருடம் பிக் வருடமாக வருது அருமை.. நாமும் செக் பண்ணுவதுண்டு சைனீஸ் பலன்கள்.

    ReplyDelete
  4. சுவாரஸ்யமான தகவல்கள்.

    ReplyDelete
  5. சீனபுத்தாண்டு தகவல்கள் அருமை.
    நாமும் புத்தாண்டுக்கு பணம் கொடுப்போம் அதை கை நீட்டம் என்போம்.

    ReplyDelete
  6. சீன புத்தாண்டிற்குள் இவ்வளவு விஷயங்களா...
    அருமை.

    ReplyDelete