12 February 2019

அவல் பாயசம்

வாழ்க வளமுடன்

இன்றைய பதிவில்  அவல் பாயசம்








பொதுவாக அவல் பாயசத்துக்கு நாங்க அவலை அப்படியே சேர்த்து செய்வோம் ...பக்கத்தில் ஒரு சிநேகிதி இந்த முறை சொன்னாங்க ரொம்ப அருமையா இருந்தது . வாங்க அந்த சமையல் முறையை இன்று  பார்க்கலாம்.






தேவையானவை

அவல்  - 1 கப்
வெல்லம் - 3/4 கப்

தேங்காய் - அரை கப்
ஏலக்காய் - 3
முந்திரி
திராச்சை
நெய் - 4 ஸ்பூன்


செய்முறை

முதலில் அவலை இரு  ஸ்பூன் நெய் விட்டு வறுத்துக்கொள்ளவும்.


பின் அதை மிக்ஸ்யில் சேர்த்து பொடிக்கவும்.




பொடித்ததை நீர் சேர்த்து வேகவிடவும் ..
வெந்ததும் அதில் வெல்லம் சேர்க்கவும்.








தேங்காய் , 4 முந்திரி , ஏலக்காய் எல்லாம் சேர்த்து
 அரைத்து அதை பாயசத்தில் சேர்க்கவும் .











 அடுப்பை மிதமான தீயில் வைத்து
 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

பின் நெய்யில் வதக்கிய முந்திரி , திராச்சையும் சேர்க்க,

 பாயசம் ரெடி .





 அவல் என்றே சொல்ல முடியாது .. அவ்வளவு சுவை . நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்கள்.




அன்புடன்
அனுபிரேம்



19 comments:

  1. நாங்கள் இந்த முறையில் செய்வோம் அனு.
    பாசிபருப்பு பாயசம், கடலைபருப்பு பாய்சம் இப்படி எல்லாவ்ற்றிக்கும் இப்படி தேங்காய் அரைத்து சேர்க்கலாம் ருசியாக இருக்கும். முந்திரி அரைத்து சேர்த்தால் மேலும் சுவை கூட்டும் திக்காக இருக்கும்.

    குருமாவிற்கு தேங்காயுடன் முந்திரி சேர்க்கிறோம் அல்லவா ! அது போல!
    படங்களுடன் செய்முறை அருமை.

    ReplyDelete
    Replies
    1. நானும் இப்போ எல்லா பாயசத்துக்கு இப்படி அரைத்து தான் சேர்ப்பது ..

      Delete
  2. அவல் பாயசம் எனக்கு அவ்வளவாக பிடிக்காது ஆனால் இந்த பாயசம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. முடிஞ்சா சமைத்து, சுவைத்து பாருங்க..

      Delete
  3. பாயாசம் குடிக்க கசக்குமா என்ன?! நாளைகே செஞ்சு பார்த்துடவேண்டியதுதான். நாளைக்கு கிருத்திகைகூடவும்...

    ReplyDelete
    Replies
    1. என்னக்கா செஞ்சா ச்சா ..எப்படி இருந்தது ..

      Delete
  4. குறிப்பு நன்று. முயற்சி செய்யத் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்கள் சகோ ..அருமையாகவே இருக்கும்

      Delete
  5. சூப்பராக இருக்குது அஞ்சு, செய்து பார்க்கோணும், எங்கள் சின்னவருக்கு மட்டும் பாயாசம் பிடிக்கும் வீட்டில்.

    கற்பனையூர் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அதிரா...

      அனு அஞ்சு வாகி...

      Delete
    2. ஹா ஹா ஹா சொறி அனு... பப்ளிஸ் பட்டினைத் தட்டி விட்டால் பின்பு ஒண்ணும் பண்ண முடிவதில்லை மொடரேஷன் இருக்கும் இடங்களில்.... வெளி வந்த பின்புதான் தெரியுது ஹா ஹா...

      Delete
  6. அனு நாங்களும் இதே முறையில்தான் செய்யறது..கொஞ்சம் வறுத்துட்டு பொடித்து என்று.....தேங்காயுடன் கொஞ்சம் கேஷ்யூவும் சேர்த்து அரைத்து செய்தால் சுவை கூடும் திக்காகி. அப்புறம் நான் பாலில் வேக விட்டும் செய்வேன். வெல்லம் போட்டு....இல்லைனா பாலை கொஞ்சம் குறுக்கி அதை அவலுடன் சேர்த்து வேக வைத்து சர்க்கரை சேர்த்தும் செய்வதுண்டு...

    தேங்காய்ப்பால் வெல்லம் சேர்த்து செஞ்சு பாருங்க சூப்பரா இருக்கும். மூன்றாவது பாலில் வேக வைச்சுட்டு, ரெண்டாவது பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் முதல் பால் சேர்த்து சிம்மில் ஜஸ்ட் 2, 3 நிமிடம் வைத்து கொதிக்க விடாமல் எடுத்துரனும். தேங்காய் கொஞ்சம் நெய்யில் வறுத்தும் போடலாம் ...ரொம்ப நல்லாருக்கும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. என் சிநேகிதி ஒருந்தவங்க தேங்காய் பால் சேர்த்து செய்வாங்க ..

      சூப்பரா இருக்கும் கா ..நானும் செஞ்சு பார்க்குறேன்

      Delete
  7. அவல் பாயாசம் செய்வதுண்டு இம்முறை வித்தியாசமாக இருக்கு. கண்டிப்பா செய்கிறேன் அனு
    ஹா..ஹா... பூஸாருக்கு எப்பவும் அ வில் பெயர் வந்தா அது அஞ்சுதான்.

    ReplyDelete
    Replies
    1. செஞ்சு பாருங்க அம்மு..

      பூசாருக்கு அஞ்சு மேல அன்பு ரொம்ப அதிகம் அதான்

      Delete
  8. அரிசிப் பாயசம் செய்முறை போல்னா இருக்கு? அவலை அரைத்துவிடாமல் செய்தாலும் நல்லா இருக்கும். இது மாதிரி ஒரு நாள் நான் செய்துபார்க்கிறேன்.

    ReplyDelete