20 February 2018

தேரழுந்தூர் ஆமருவியப்பன் கருடசேவை


திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதிராஜன் திருக்கோயில் 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் வட்டத்தில்..  மாயவரம் குத்தாலம் கோமல் செல்லும் வழியில் 21 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.   தேரழுந்தூரில் அமைந்துள்ள இக்கோவில் 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்று.

சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர மூலவர் கொண்ட திருத்தலம்.

மூலவர்: தேவாதிராஜன்

உற்சவர்: ஆமருவியப்பன்

தாயார்: செங்கமலவல்லி

தீர்த்தம்: தர்சன புஷ்கரிணி, காவிரி

பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்






தல வரலாறு

ஒரு முறை பெருமாளும் சிவனும் சொக்கட்டான் விளையாடிக்கொண்டிருந்தார்கள். பார்வதி ஆட்டத்தின் நடுவராக இருந்தாள். காய் உருட்டும் போது குழப்பம் வந்தது. நடுவராக இருந்த பார்வதி பெருமாளுக்கு சாதகமாக கூற, சிவனுக்கு கோபம் வந்து பசுவாக மாறும் படி சாபமிட்டார். பார்வதி பசுவாக மாறியவுடன், துணைக்கு சரஸ்வதியும், லட்சுமியும் பசுவாக மாறி பூமிக்கு வந்தார்கள். இவர்களை மேய்ப்பவராக பெருமாள் “ஆ’மருவியப்பன் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் ஆட்சிசெய்கிறார்.


அங்கு நடைபெற்ற தை அமாவாசை மூன்று கருட சேவையின் சில படங்கள் இன்று ....










(1588)
தந்தை காலில் பெருவி லங்கு தாளவிழ, நள்ளிருட்கண் வந்த

எந்தை பெருமானார் மருவி நின்ற வூர்போலும்,

முந்தி வானம் மழைபொழியும் மூவா வுருவில் மறையாளர்

அந்தி மூன்று மனலோம்பும் அணியார் வீதி அழுந்தூரே.





அன்புடன்

அனுபிரேம்.

8 comments:

  1. தரிசித்தேன் நன்று நன்றி சகோ

    ReplyDelete
  2. அழுந்தூர் ஐயன் திருவடிகள் போற்றி!..

    ஹரி ஓம்!..

    ReplyDelete
  3. தேரெழுந்தூர் சகோதரிகள் என்று பக்திப்பாடல்கள் பாடும் சகோதரிகள் உண்டு. எங்க நண்பர் கவிஞர் வரதராஜன் எழுதிய "வரவேண்டும் வரவேண்டும் தாயே" என்கிற பாடலைப் பாடியவர்கள். அவர்கள் இந்த ஊர்தான் போலும்.

    ReplyDelete
  4. இவர் யாரென்றே எனக்குத் தெரியவில்லை... அழகாக காட்சி தருகிறார்.

    ReplyDelete
  5. படங்களும் பகிர்வும் அருமை
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  6. அழகான படங்கள்,அருமையான கருடசேவையின் தரிசனம்.

    ReplyDelete
  7. படங்கள் ரொம்ப அழகு!!! கருடன் படம் ரொம்ப அழகாக இருக்கிறது சகோதரி/அனு

    ஊர்ப்பெயர் கேள்விப்பட்டதுண்டு ஆனால்சென்றதில்லை.

    ReplyDelete
  8. படங்கள் அழகு. புதிய கதை அறிந்தேன். மகிழ்ச்சி.

    ReplyDelete