வாழ்க வளமுடன்...
இனிய ..கரும்பு சாறு ... இன்று...
தேவையானவை....
கரும்பு - 1 துண்டு
இஞ்சி - சிறிய துண்டு
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்.
சர்க்கரை - 2 ஸ்பூன்.
செய்முறை...
கரும்பு துண்டுகளை தோல் நீக்கி ....
இஞ்சி மற்றும் நீர் சேர்த்து அரைத்து...சாறு எடுக்கவும் ...
பின் அதை வடிகட்டி...
அதில் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்க
.....சுவையான கரும்பு சாறு ரெடி....
இதில் மிதப்பது எலுமிச்சையின் பகுதிகள்...
சாஷிகா கிட்சனில் sugarcane-karumpu-juice. ..கரும்பு சாறு சமையல் குறிப்பு கண்ட உடன் எனக்கும் செய்து பார்க்க தோன்றியது...
வீட்டில் இருந்த மீந்த ஒரு துண்டு கரும்பில் தயாரித்தேன்....அருமை...
கரும்பு கொஞ்சம் பழசு ஆனதால் இனிப்பு குறைவு...அதனால் சிறிது சர்க்கரையும் சேர்த்தேன்.....
நன்றாக இருந்தது....நன்றி சாஷிகா
அன்புடன்
அனுபிரேம்
இனிக்கும் கரும்புசாறு அருமை. ஊரில் சாறு எடுத்து குடிக்குமளவு பொறுமையில்லாமல் கடித்து சாப்பிட்ட ஞாபகம்தான் வருது.
ReplyDeleteகரும்புச் சாறு - நல்லது! தில்லியில் கடைகளில் சாறாகவே கிடைக்கிறது என்றாலும் வாங்கிக் குடிப்பதில்லை. நேராக கரும்பு சாப்பிடவே பிடிக்கும்.
ReplyDelete//இனிப்பு குறைவு அதனால் சிறிது சர்க்கரையும் சேர்த்தேன்.
ReplyDeleteநன்றாக இருந்தது//
குடித்த உங்களுக்குதானே ?
பலமுறை அருந்தி மகிழ்ந்திருக்கிறேன்
ReplyDeleteவணக்கம் அனு!
ReplyDeleteஅடடா.... கரும்பை விரும்பாதவர் உண்டோ!..:)
அருமை! கிடைத்தால் செய்து பருகிப் பார்க்கலாம்..
பகிர்வினுக்கு நன்றியுடன் நல் வாழ்த்துக்கள் அனு!
எலுமிச்சை சேர்த்திருப்பதால் நிட்சயம் நன்றாக இருக்கும்.. நான் ஒரு தடவை வெறும் சாறு குடிச்சுப் பார்த்தேன் எனக்கு பெரிதாகப் பிடிக்கவில்லை.
ReplyDeleteகரும்புச் சாறு... அருமை..
ReplyDeleteபடங்களுடன் பதிவும் அருமை..
மிக்க நன்றி அனு,செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு...தங்களுக்கு பிடித்ததில் மிக்க சந்தோஷம்பா...
ReplyDeleteநானும் செய்யணும் :) கரும்பு துண்டு கடையில் கிடைக்குமான்னு பார்க்கிறேன்
ReplyDeleteஅத்தை இருந்த ராமகிருஷ்ணா ஆஸ்பத்திரியில் சுத்தமான முறையில் நவீன மெஷினில் கரும்புச்சாறு கிடைக்கிறது காலை முதல், மாலை வரை.
ReplyDeleteகுடித்து பார்த்தேன் நன்றாக இருக்கிறது. (ஆலை கரும்பு வெள்ளையாக இருக்கும்)
இப்போது முன்பு போல் பல் பலமில்லாத காரணத்தால் பொங்கலுக்கு வாங்க்கும் கரும்பை மற்றவர்களுக்கு பகிர்ந்து அளித்து விட்டு இரண்டு துண்டுகளை சாறு எடுத்து தான் குடிக்கிறோம்.
உங்கள் செய்முறையும் படங்களும் அருமை.
ஆமாம் அனு வீட்டில் செய்வதுண்டு. பொங்கல் சமயம் கரும்பு வாங்கினால் அதில் பல ஜூஸ் ப்ரிப்பரேஷன்...இஞ்சி, எலுமிச்சை என்று...அப்புறம் கரும்பு ஜூஸ் வித் பைனாப்பிள், இல்லைனா தர்பூஸ் இப்படிக் கலந்து காக்டெயில் போலவும்...எல்லாம் நம்ம இமாஜினேஷன் தான்...அப்புறம் வெள்ளைப் பூஷணி இருக்கில்லையா அதன் ஜூஸுடன் இதைக் கலந்தும் குடிச்சுப் பாருங்க..ரொம்ப நல்லாருக்கும்...
ReplyDeleteஓ நீங்களும் சாஷிகா தளம் பார்ப்பீங்களா...நானும்...நல்லா போடறாங்க...
கீதா
உங்கள் படமும், அதில் எலுமிச்சையின் பகுதி மிதப்பதும் சூப்பரா இருக்கு
ReplyDeleteகீதா