11 February 2018

புத்தர்....


இனிய காலை வணக்கம்..

வாழ்க வளமுடன்...

டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் எடுத்த புத்தர் படங்கள் இன்று...






புத்தர் ஒரு கிராமத்தில் தங்கியிருந்தார்.
அப்போது அவரைப் பார்ப்பதற்கு ஒரு இளைஞன் வந்தான்.
வெகு தொலைவு நடந்து வந்த அவன், புத்தரைப் பார்த்த அக்கணமே கதறி அழுதான். அவன் அழுது முடிக்கும் வரை பொறுத்திருந்த புத்தர் கனிவாகக் கேட்டார்:





சகோதரா, ஏன் இப்படிக் கண்ணீர் சிந்துகிறாய்? உனக்கு ஏற்பட்ட பிரச்னையை என்னிடம் சொல்...

“”பகவானே, என் வாழ்க்கையில் நான் எல்லையற்ற துன்பங்களை அனுபவித்து வருகிறேன்.  எடுத்த எதிலும் தோல்வி. தாங்க முடியாத துயரம். ஆதரவுக்கென்று எனக்கு யாருமில்லை. என் மனது மிகவும் பலவீனமாகப் போய்விட்டது.

எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்.






புத்தர் அன்புடன் அவன் கையில் தண்ணீர்க் குவளையைக் கொடுத்தார்.

பிறகு உப்பையும் கொடுத்து விட்டுச் சொன்னார்: “”சகோதரா, இந்தச் குவளையில் உப்பிட்டுக் கலக்கி அருந்து.”






அவன் உப்பைக் குவளையில் இட்டுக் கலக்கி அருந்திப் பார்த்தான்.

இரண்டு மிடறு குடிப்பதற்குள் அவன் முகம் கோணியது.

மேற்கொண்டு குடிக்க முடியாமல் அப்படியே கீழே வைத்து விட்டுச் சொன்னான்: என்னால் இந்தத் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை பகவானே. மிகவும் கரிக்கிறது.”





புத்தர் மீண்டும் இதோ இப்போதும் அதே அளவு உப்பைத் தருகிறேன்.
இதை நீ எதிரில் இருக்கும் அதோ அந்தக் குளத்தில் கரைத்துவிடு....




புத்தர் சொன்னபடியே அவன் அந்த உப்பை எதிரிலிருந்த குளத்தில் கரைத்தான். :  இப்போது அந்தக் குளத்து நீரைக் குடித்துப் பார்...என்றார் புத்தர்..






உப்புக் கரைக்கப்பட்ட போதும் குளத்து நீரில் உப்பின் சுவை கொஞ்சம் கூடத் தெரியவில்லை.   அந்த இளைஞன் போதுமான அளவு நீர் குடித்துவிட்டுக் கரைக்கு வந்தான்.





நீ சிறிய குவளையில் இருந்த நீரிலும், பிறகு இந்தக் குளத்து நீரிலும் கரைத்தது ஒரே அளவான உப்புதான். 

ஆனால் சிறிய குவளையில் தண்ணீர் கொஞ்சம் தான் இருந்தது.
அதனால் தான் கரிப்புச் சுவை அதிகமாக இருந்தது.

எனவே உன்னால் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை.

ஆனால் இதே உப்பு குளத்து நீரில் கரைக்கப்பட்டிருந்தாலும்,
அந்த நீரில் உப்பின் சுவை கொஞ்சம் கூடத் தெரியவில்லை..





நம் துன்ப துயரங்கள் என்பவை உப்பைப் போலத் தான்.

இவை வாழ்க்கை நெடுகிலும் வந்து கொண்டே இருக்கும்.

இவற்றைத் தவிர்க்கவே முடியாது.

ஆனால் நம்மால் நம் மனதை விசாலமாக்க முடியும்.

இப்போது உன் மனது அந்தச் சிறிய குவளையைப் போல் தான் இருக்கிறது.

அதனால் தான் வாழ்க்கைச் சிரமங்கள் உனக்கு இந்தளவு துயரமளிக்கின்றன.

நீ நிறைய அறிவும் அனுபவங்களும் பெற்று உன் மனதைப் பெரிதாக்கு. அதை வலுப்படுத்து.

அப்போது உன் துயரங்கள் குளத்தில் கரைக்கப்பட்ட உப்பைப் போலக் காணாமல் போய்விடும்.

அந்தத் தெளிந்த நிலையில் தான் புதிய வழிகள் புலனாகும்.
அவ்வழிகளில் நீ உயர்வடைவாய் என்றார் புத்தர்.



அன்புடன்
அனுபிரேம்


12 comments:

  1. அருமையான கதை, மனதை எப்படி விசாலப்படுத்தலாம் என்பதையும் புத்தர் சொல்லியிருந்தா நல்லா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நீ நிறைய அறிவும் அனுபவங்களும் பெற்று உன் மனதைப் பெரிதாக்கு. அதை வலுப்படுத்து....ன்னு தான் புத்தர் சொல்லறார்...

      ஒவ்வொரு அனுபவத்தின் வழி நம் மனம் விசாலப்படும்....

      சரி யா அதிரா,,

      Delete
    2. அதிரா நான் சொல்ல வந்ததை அனுவே சொல்லிட்டாங்க...உங்க கேள்விக்கு...விசாலமாக்குவது என்பது நம் சில விடயங்களைப் பட்டுப் பட்டுத்தான் அறிந்து கற்று இப்படி ஒன்வ்வொன்றாஉ மனதை விசாலமாக்கும்...அப்படி நாம் மனதை விசாலமாக்கவில்லைனா...நம் வயது வளர்ந்தாலும் நாம் வளரவே இல்லை எனலாம்...நோ விஸ்டம் இன் அவர் லைஃப்...நாம் விஸ்டம் வளரவில்லைனு அர்த்தம்..

      கீதா

      Delete
  2. மிக நல்ல தத்துவம். நல்ல அறிவும்,அனுபவங்களும்தான் நம்மை பக்குவப்படுத்துகின்றது. அழகான புத்தர் படங்கள். பகிர்வுக்கு நன்றி அனு.

    ReplyDelete
  3. நல்ல விஷயம். அதிரா கேட்டிருப்பதிலும் அர்த்தம் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அனுபவங்களே நம் மனதை விசாலமாக்கும்...சரியா ஸ்ரீராம் சார்..

      Delete
  4. என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் இன்று உங்கள் பதிவினைக் கண்டேன். அனைத்து புத்தர் சிற்பங்களையும் ரசித்தேன். நின்ற நிலையில் உள்ள புத்தரைக் காணவில்லையே.

    ReplyDelete
    Replies
    1. வருக்கைக்கு நன்றி ஐயா..

      அந்த கண்காட்சியின் ஒரு கடையில் இருந்த சிலைகள் இவை...ஆம்நின்ற நிலையில் சிலைகள் ஏதும் இல்லை..

      Delete
  5. நீ நிறைய அறிவும் அனுபவங்களும் பெற்று உன் மனதைப் பெரிதாக்கு. அதை வலுப்படுத்து.

    அப்போது உன் துயரங்கள் குளத்தில் கரைக்கப்பட்ட உப்பைப் போலக் காணாமல் போய்விடும்.

    அந்தத் தெளிந்த நிலையில் தான் புதிய வழிகள் புலனாகும்.
    அவ்வழிகளில் நீ உயர்வடைவாய் என்றார் புத்தர்.//

    படங்களும் புத்தரின் அறிவுரையும் அருமை அனு.
    வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவம் தான் பாடமாகிறது என்பது உண்மை.

    ReplyDelete
  6. சிலைகள் ரொம்ப அழகு அனு!!! தத்துவக் கதையும் செம....

    கீதா

    ReplyDelete