22 February 2018

ஆயிரம் தடா வெண்ணெய், தேரழுந்தூர் ...


முந்தைய பதிவில் திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதிராஜன் திருக்கோயில்  கருட சேவையை தரிசித்தோம்...


இன்று திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதிராஜன் திருக்கோயில் ஆயிரம் தடா வெண்ணெய் படைத்து சிறப்பித்த படங்கள்......


தல பெருமை

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இங்கு மட்டுமே திருமங்கையாழ்வார் தாயாரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்துள்ளார்.

கவிச்சக்கரவர்த்தி கம்பன் இத்தலத்தில் தான் பிறந்தார்.





தலப்பெயர் விளக்கம்:

உபரிசரவசு என்ற மன்னன் வானில் தேர் வரும் போது, அதன் நிழல் எதன் மீது பட்டாலும் அது கருகிவிடும்படி வரம் பெற்றிருந்தான்.

இவன் மேலே சென்றபோது அதன் நிழல் கண்ணனின் மீதும் அவர் மேய்த்துக்கொண்டிருந்த பசுக்களின் மீதும் பட்டது.

பசுக்கள் துன்பம் அடைந்தன. இவனது செருக்கை அடக்க நினைத்தார் கண்ணன்.

அவனது தேர் நிழல் மீது தன் திருவடியை வைத்து அழுத்தினார்.

மன்னனின் தேர் கீழே அழுந்தியது. அத்துடன் அவனது ஆணவமும் அழுந்தியது. இதனால் தான் இத்தலம் “தேரெழுந்தூர்’ ஆனது.




கருட விமானம்:

ஒரு முறை தேவேந்திரன் கருடாழ்வாரிடம் ஒரு விமானத்தையும் வைரமுடியையும் கொடுத்து, “108 திருப்பதிகளுள் எந்த பெருமாளுக்கு எது உகந்ததோ, அதை கொடுத்து விடு” என்றான். அதன் படி மைசூர் அருகே திருநாராயணபுரத்தில் உள்ள பெருமாளுக்கு வைர முடியை கொடுத்துவிட்டு, தேரெழுந்தூர் ஆமருவியப்பனுக்கே விமானத்தை கொடுத்தார் கருடன்.

 இதனால் இங்குள்ள விமானம் கருட விமானம் ஆனது.

அத்துடன் கருடன் பெருமாளின் அருகில் இருக்கும் பாக்கியமும் கிடைத்தது.

 பெரும்பாலான கோயில்களில் கருடன் சன்னதி பெருமாளுக்கு எதிரில் இருக்கும்.

இத்தகு பெருமை மிகு தலத்தில் நடைபெற்ற ஆயிரம் தடா வெண்ணெய் படைத்து சிறப்பித்த படங்கள்......







பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 23 வது திவ்ய தேசம்.



(1589)
பாரித் தெழுந்த படைமன்னர் தம்மை யாள,

பாரதத்துத் தேரில் பாக னாயூர்ந்த தேவ தேவ னூர்போலும்,

நீரில் பணைத்த நெடுவாளைக் கஞ்சிப் போன குருகினங்கள்,

ஆரல் கவுளோ டருகணையும் அணியார் வயல்சூழ் அழுந்தூரே!




அன்புடன்
அனுபிரேம்

10 comments:

  1. அருமையான தரிசனம்

    ReplyDelete
  2. உபரிசரவசு என்றொரு மன்னன் பெயரோ... சுவாரஸ்யமான கதைகள்.. அழகிய படங்கள்.

    ReplyDelete
  3. படங்களும் தகவல் கதை எல்லாம் அருமை..

    கீதா: தேர்ழுந்தூர் கதை வாசித்த நினைவு வருகிறது...இப்போது உங்க பதிவு மூலம் நன்றாக நினைவு வந்துவிட்டது...படங்கள் எல்லாம் நல்லாருக்கு அனு

    ReplyDelete
  4. அருமையான தரிசனம். ஊரில் 2பெருமாள் கோவில்களுக்கு அடிக்கடி செல்வோம். அங்கு நடைபெறும் விழா ஞாபகம் வருகிறது. தல பெயர் விளக்கம் அறிந்துகொண்டேன். அழகிய படங்கள்.

    ReplyDelete
  5. இன்று திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதிராஜன் திருக்கோயில் ஆயிரம் தடா வெண்ணெய் படைத்து சிறப்பித்த படங்கள்....//

    ஆஹா ! அருமையான தரிசனம்.
    படங்கள் அருமை.
    வாழ்த்துக்கள் அனு.

    ReplyDelete
  6. அழகிய படங்கள் மிக அருமை.. அத்தனையும் நெய் நிரம்பிய பானைகளோ அவ்வ்வ்வ்..

    ReplyDelete
  7. ஆமருவியப்பனின் அழகே அழகு..

    இனிய தரிசனம்.. வாழ்க நலம்..

    ReplyDelete
  8. இக்கோயிலுக்குச் சென்றுள்ளேன். இன்று உங்கள் பதிவு மூலமாக மறுபடியும் செல்லும் வாய்ப்பு கிடைததது.

    ReplyDelete