இன்று சீனப் புத்தாண்டு ....அதைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்...
மதிமான நாள்காட்டியின் (Lunar Calender) அடிப்படையில் சீனப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
கமாரி என்று அழைக்கப்படும் இந்தச் சீன நாள்காட்டி 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
இந்த நாள்காட்டி முறையைச் சீனாவில் அறிமுகப்படுத்தியவர் சீ உவாங் தி (Shi Huang Ti) என்பவர்.
இந்த நாள்காட்டி 5 சுற்றுகள் அடங்கிய மொத்தம் 60 ஆண்டுகளைக் கொண்டது (5X12=60).
சீனர்கள் ஏன் 12 விலங்குகளின் பெயர்களை ஆண்டின் பெயராகச் சூட்டினர்? அவர்களுடைய தொன்மத்தின்படி (புராணம்) புத்தர் பூமியைவிட்டுப் பிரியும் வேளையில் எல்லா விலங்குகளையும் சந்திக்க அழைத்தாராம். ஆனால், வந்தது என்னவோ இந்த 12 விலங்குகள்தானாம்.
அதனால், அந்த விலங்குகளுக்கு நன்றிக்கடன் பாராட்டும் வகையில் அவை வந்து சேர்ந்த நேரப்படி வரிசைப்படுத்தி ஒவ்வொரு ஆண்டுக்கும் பெயர் சூட்டப்பட்டதாக ஒரு கருத்து உண்டு.
புத்தாண்டு பிறப்பானது தங்களின் ஆற்றலைப் புதுப்பிக்கிறது; நம்பிக்கையை அதிகரிக்கிறது; புதிய எதிர்ப்பார்ப்புகளை உண்டாக்குகிறது என்று சீனர்கள் நம்புகிறார்கள். புத்தாண்டு வாழ்க்கையில் பல ஆக்கமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என எண்ணுகிறார்கள்.
புத்தாண்டு நாளில் சீனர்கள் தங்கள் வீடுகளைத் தூய்மைப்படுத்தி அலங்காரமும் செய்கின்றனர். சிவப்பு நிறத்திலான ‘தங்லுங்’ (காகிதத்தைக் கொண்டு அழகழகான வடிவத்தில் செய்யப்பட்டு உள்ளே மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்படும் ஒருவகை ஒளியணிப் பொருள்) வீட்டின் முன்னால் கட்டப்படும்.
வீட்டு நுழைவாயிலில் மங்கல வாழ்த்து பொறிக்கப்பட சிவப்புப் பதாகைகள் தொங்கவிடப்படும். இப்படிச் செய்வதால் வீட்டுக்குள் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை.
அதேவேளையில், துடைப்பம், குப்பைத்தொட்டி, தூரிகை(Brush) போன்ற பொருள்களை எடுத்து மறைத்து வைத்துவிடுகிறார்கள். ஏனெனில், அன்றைய நாளில் வீடுகூட்டுதல், தூய்மைப்படுத்துதல் முதலான வேலைகளைத் தவிர்க்கிறார்கள். இப்படிச் செய்வதால் விட்டில் உள்ள நற்பேறு (Luck) விலகிப்போய்விடும் என்கிறார்கள்.
புத்தாண்டுக்கு முதல்நாள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி ‘பெரு விருந்து’ உண்பது முகவும் முக்கியமானதாகும். குடும்ப உறுப்பினர்கள் எங்கு இருந்தாலும் கண்டிப்பாக இந்தப் ‘பெரு விருந்தில்’ வந்து கலந்துகொள்கிறார்கள். இதன்வழியாக அவர்களுடைய குடும்ப உறவுகளை வலுப்படுத்திக் கொள்கிறார்கள்.
புத்தாண்டின் முதல் நாளில், எல்லாரும் கண்டிப்பாகப் புத்தாடை அணிய வேண்டும். சொர்க்கத்திலிருக்கும் கடவுளர்களைப் பூமிக்கு அழைத்து, அனைத்து நன்மைகளையும் வேண்டிப் பெறுவதற்காக வழிபாடு செய்கிறார்கள். இந்நாளில் அவர்கள் மரக்கறி (சைவ) உணவையே உண்கின்றனர். வீட்டில் உள்ள பெரியோர்களிடத்தில் மன்னிப்பும் ஆசியும் பெற்றுக்கொள்கின்றனர்.
‘அங் பாவ்’ (Ang Pau) அதாவது மொய்ப்பணம் போன்ற அன்பளிப்பு வழங்குவது சீனப் புத்தாண்டு நாளில் நிகழும் ஒரு வழக்கம்.
பட்டாசு வெடிப்பது சீனப் புத்தாண்டின் குறிப்பிடத்தக்க அங்கமாகும்.
மனிதர்களைப் பிடித்து விழுங்கும் ‘நியன்’(Nian) என்ற ஓர் அரக்கனை விரட்டவே பட்டாசு வெடிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இருந்தாலும், கெட்ட சத்திகளை விரட்டியடிக்கும் நோக்கத்திலேயே சீனர்கள் பெரிய அளவில் பட்டாசு கொளுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
பட்டாசு போலவே சீனநாக நடனமும் சிங்க நடனமும் புத்தாண்டின்போது தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருக்கிறது.
சீன ஆலயங்களிலும் வீடுகளிலும் இந்த நடனங்கள் ஆடப்படுகின்றன.
அன்புடன்
அனுபிரேம்...
ஓம் இன்று பிறப்பறது dog இல் ஆம்:).
ReplyDelete/ ஆனால், வந்தது என்னவோ இந்த 12 விலங்குகள்தானாம்.//
ReplyDeleteநல்ல அருமையான தகவல்கள் இந்த வருடம் பைரவர்களுக்கு .
என் தோழி ஹென் முன்பு ஒவ்வொரு வருஷமும் சீன புத்தாண்டுக்கு அகர் அகர் ஜெல்லி அந்த ஆண்டு வரும் விலங்கின் வடிவத்தில் அழகா செஞ்சி தருவார் .
சிங்கப்பூரில் இருந்தபோது சீன புத்தாண்டு விழாக்களில் கலந்து கொண்ட நினைவுகள் மலர்கின்றன...
ReplyDeleteவாழ்க நலம்..
ஓ... இந்த வருடம் நம் நண்பர்கள் பெயரிலானதா?
ReplyDeleteசீன வருடப்பிறப்பு பற்றி தெரியாத தகவல்கள் அனு. அருமை.
ReplyDeleteநல்ல பகிர்வு...
ReplyDeleteஎங்கள் அறைக்கு அருகில் வெள்ளி இரவு ஒன்பது மணிக்கு திடீரென வாணவேடிக்கை...
என்ன ஏது என்று விசாரித்தால் சீனப்புத்தாண்டு என்றார்கள்.
சீனப்புத்தாண்டு பற்றிய அரிய தகவல்கள் அருமை. படங்கள் அழகு. பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete