04 December 2017

ஆழ்வார்கள் தரிசனம்..


வாழ்க வளமுடன்...




முந்தைய பதிவுகளில் 

திருமங்கையாழ்வார்  அவதார பற்றியும்

திருப்பாணாழ்வார்  அவதாரம் பற்றியும் ..தரிசித்தோம்...


இன்று அவர்களின் புகைப்பட உலா...

போன வருடம்  .....அப்பா ஆழ்வார்களின்  அவதார தலங்களில் தாம் தரிசித்து எடுத்த  படங்கள் இன்று ..இங்கே  ஆழ்வார்கள் தரிசன  உலாவாக...


திருமங்கையாழ்வார்......



















திருப்பாணாழ்வார்... 












பெரிய திருமொழி

(949)

     

ஆவியே! அமுதே! என நினைந்து உருகி*  அவர் அவர் பணை முலை துணையாப்*
பாவியேன் உணராது எத்தனை பகலும்*  பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்*

தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்*  சூழ் புனல் குடந்தையே தொழுது* 
என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். (2) 


(952)

   
கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன்*  கண்டவா திரிதந்தேனேலும்*
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன்*  சிக்கெனத் திருவருள் பெற்றேன்*

உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன்*  உடம்பு எலாம் கண்ண நீர் சோர*
நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன்*  நாராயணா என்னும் நாமம். 


அமலனாதிபிரான்

(934)

பரியனாகி வந்த*  அவுணன் உடல்கீண்ட,*  அமரர்க்கு-
அரிய ஆதிபிரான்*  அரங்கத்து அமலன் முகத்து,*

கரியவாகிப் புடைபரந்து*  மிளிர்ந்து செவ்வரிஓடி*  நீண்டவப்‍-
பெரிய வாய கண்கள்*  என்னைப் பேதைமை செய்தனவே!



(935)

ஆலமா மரத்தின் இலைமேல்*  ஒரு பாலகனாய்,*
ஞாலம் ஏழும் உண்டான்*  அரங்கத்து அரவின் அணையான்,*

கோல மாமணி  ஆரமும்*  முத்துத் தாமமும் முடிவில்ல  தோரெழில்*
நீல மேனி ஐயோ!*  நிறை  கொண்டது என் நெஞ்சினையே! (2)



அன்புடன்
அனுபிரேம்

7 comments:

  1. தரிசித்தேன் நன்று நன்றி

    ReplyDelete
  2. ​ஆழ்வார்கள் தரிசனத்துக்கு நன்றி.​

    ReplyDelete
  3. அருமை அனு படங்கள் தரிசித்தேன்

    ReplyDelete
  4. அழகான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  5. படங்கள் பார்த்துத் தரிசனம் செய்து கொண்டேன்...

    ReplyDelete
  6. காலையில் இனிய தரிசனம்..

    ஆழ்வார் தம் திருவடிகள் சரணம்..

    ReplyDelete