27 December 2017

திருப்பாவை 12














பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம்?.



ஸ்ரீரெங்கம் கண்ணாடி அறை சேவை....












அன்புடன்
அனுபிரேம்

5 comments:

  1. படங்கள் அருமை
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. நல்லதோர் பாசுரமும் அழகிய படங்களும். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  3. அழகோவியம் எனப் பதிவு..

    ReplyDelete
  4. பாவை 12 படித்தேன் ,ரசித்தேன்....

    ReplyDelete