தொடர்ந்து வாசிப்பவர்கள்

08 December 2017

அசோகா அல்வா...

வாழ்க நலம்....


அசோகா அல்வா...  எளிய இனிய உணவு  இன்று...தேவையானவை


பாசிப்பருப்பு        - 1 க

சர்க்கரை                - 1 க

கோதுமை மாவு  - 3 ஸ்பூன்

நெய்                              - 3/4 க

முந்திரிப் பருப்பு   - 10

கேசரி  கலர்            - சிட்டிகை


செய்முறை


பாசிப்பருப்பை நன்கு  வேகவைக்க வேண்டும்...கடாயில் 3 ஸ்பூன்   நெய் விட்டு அதில் கோதுமை மாவை வறுக்க வேண்டும்...

 பின் அதில் சர்க்கரை, பாசிபருப்பை சேர்த்து நன்கு கிளறவேண்டும்...

சிறிது சிறிதாக நெய்யை சேர்க்கவும்...

நன்கு சுருண்டு அல்வா பதத்திற்கு வரும் போது வறுத்த முந்திரியை சேர்த்தால் ..

அசோகா அல்வா ரெடி....

அஞ்சு வோட பதிவுல அசோகா பார்த்ததுமே செய்யனும்னு ரொம்ப ஆசை....உடனே தேடி செஞ்சு ...சுவைத்தும் பார்த்துட்டேன்...ஆன பதிவிட தான் கொஞ்சம் தாமதம் ஆயிடுச்சு...


பரவாயில்லை...அஞ்சுக்கு எனது birthday ஸ்பெஷல் இது...

அதிரா வடை சுட்டாங்க...

கீதா அம்மா ஜீரா போளி செஞ்சாங்க...

இப்போ என்னுடைய முறை...லேட் தான் ஆன ரொம்ப லேட் இல்ல...

அஞ்சுவுக்கு அன்பு வாழ்த்துக்களுடன் இன்றைய அசோகா அல்வா....அன்புடன்

அனுபிரேம்..


20 comments:

 1. படம் காண்பித்ததை விட கொஞ்சம் பார்சல் அனுப்பி இருந்தால் நல்லா இருந்திருக்கும்.

  ReplyDelete
 2. அசோகா அல்வா... சமீபத்தில் திருவையாறு சென்றபோது திருவையாறு ஸ்பெஷல் அசோகா அல்வா ருசித்தேன்.

  செய்முறை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 3. அடடே.... வாய் ஊறுதே! ரொம்பப் பிடிக்கும்.

  ReplyDelete
 4. எனக்கு நீண்ட நாளாவே ஒரு சந்தேகம் இந்த பாசிபருப்பு அல்வாவை ஏன் அசோகா அல்வா என்று சொல்லுறாங்க?

  ReplyDelete
  Replies
  1. தெரியலையே....

   சுவை தான் முக்கியம்...பேர் ஆராய்ச்சியா முக்கியன்னு...இது வரை இந்த கேள்வி வந்தது இல்லை...எனக்கு..

   Delete
  2. மதுரை இதை நானும் பலரிடமும் கேட்டுவிட்டேன்...ஆனா இதுவரை யாரும் பதில் சொல்லலை....இதோ அனு சொன்னதைத்தான் சொல்றாங்க...நான் கூட நினைத்தேன் ஒருவேளை வடக்கே ஆண்ட அசோகர் தென்னகம் வந்து இதை விரும்பிச் சாப்பிட்டிருப்பாரோ அதனால் அசோகா ஹல்வா என்று ஆகிவிட்டதோ என்று...ஹிஹிஹி

   கீதா

   Delete
  3. அசோகரை வச்சும் சொன்னாங்க ..ஆன லாஜிக்க ஒத்துவரலையே...

   Delete
 5. அஆவ் !! இப்போ தான் கண்ணில் பட்டுச்சிப்பா அனு :) தாங்க்யூ தாங்க்யூ :)
  ஸோ ஸ்வீட் of யூ ..

  எல்லாரும் விதவிதமா செய்து பார்க்க ரெடின்னா நானா என்கிட்டே பல வருஷமா கட்டிங் செஞ்சி வச்சிருக்கற எல்லா ரெசிப்பியையும் ப்லாகில் வெளியிடறேன் :)

  ReplyDelete
  Replies
  1. தெய்வமே எங்களை காப்பாதுங்க

   Delete
 6. தஞ்சையின் பாரம்பர்ய இனிப்பு வகை..
  ஆனால், திருவையாறு அசோகா என்று பெயராகி விட்டது...

  அருமையான செய்முறை.. அழகிய படங்களுடன்..

  ReplyDelete
 7. அசோகா ஹல்வா சூப்பர்! அனு...ரொம்பப் பிடிக்கும்....ஆனா ஆனா...ஹும் சரி விடுங்க நான் சொல்லியா தெரியணும்...நானே ஸ்வீட்னு உங்களுக்குத் தெரியாதா என்ன...ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
 8. இருந்தாலும் நாவுல நீர் ஊற வைச்சுட்ட்டீங்க...ஸோ கொஞ்சமாவது செய்ய வேண்டாமா?...

  கீதா

  ReplyDelete
 9. திங்க வுல நான் ஒரு ஈசி ரெசிப்பி கொடுத்துருந்தேனெ அனு பார்க்கலையோ....பொட்டுக்கடலை பொடித்துச் செய்வது...ஹிஹிஹி விளம்பரம்??!!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அங்கேயே ரசுச்சு பார்த்து கமண்ட் போட்டு இருந்தேனே...

   நீங்க பார்க்கலையா...

   Delete
 10. அசோகா அல்வா அஞ்சுக்காகவா அப்ப எங்களுக்கு ......
  படங்கள் குறிப்புகளுடன் அருமையா வந்திருக்கு அனு

  ReplyDelete
  Replies


  1. உங்களுக்கு என்ன பிடிக்கும் கா இனிப்பா..காரமா...

   அடுத்து உங்களுக்கு கொடுத்துட்டா போச்சு...

   Delete
 11. அனு சூப்பரா இருக்கு பார்க்கவே!!! அப்ப செமையா டேஸ்டியா இருந்திருக்கும்!!! ரொம்பநல்லாருக்கு அனு..

  கீதா

  ReplyDelete
 12. அருமை
  படங்களைப் பார்க்கும்போதே நாவில் சுவை ஊறுகிறது
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 13. படங்களை பார்த்தாலே செய்யதூண்டுது. ஸ்வீட் செய்தால் நாந்தான் சாப்பிடவேண்டும். படங்கள் அழகு.

  ReplyDelete
 14. ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ் அஞ்சுவுக்கு அல்வாக் குடுக்கிறீங்களா... ஹா ஹா ஹா சூப்பர் அல்வா.

  ReplyDelete