28 December 2017

திருப்பாவை 13













 பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன் மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே, நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகி விட்டது.
கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது. வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் உடல்நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்? அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே!
மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா? எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா.



ஸ்ரீரெங்கம் கண்ணாடி அறை சேவை....








அன்புடன்
அனுபிரேம்

6 comments:

  1. படங்கள் வெகு அழகு.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று.. நங்காய் எழுந்திரு!..

    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகள் போற்றி..

    ReplyDelete
  3. புகைப்படங்கள் மிகவும் அழகு!

    ReplyDelete
  4. படித்தேன் ரசித்தேன்

    ReplyDelete