![]() |
எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!
ஸ்ரீரெங்கம் கண்ணாடி அறை சேவை....
அன்புடன்
அனுபிரேம்
நன்றி.
ReplyDeleteவைகுந்த ஏகாதசியும் அதுவுமாக -
ReplyDeleteஇன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!?.. நியாயமா!..
அழகு.. அழகு..
வணக்கம் சகோதரி!
ReplyDeleteதேனாய்த் திருப்பாவை சேர்ந்த திருக்காட்சி
ஊனும் உருகிற்(று) உடன்!
அற்புதத் திருக்கோலங்களும் திருப்பாவை விளக்கமும்
கண்டு மனமும் குளிர்ந்தது!
நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரி!
ஆண்டாள் கண்ணாடி அறை சேவை மிக அழகு.
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நன்றி சகோதரியாரே
ReplyDelete