19 December 2017

திருப்பாவை 4







மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.





ஸ்ரீரெங்கம் கண்ணாடி அறை சேவை....












அன்புடன்
அனுபிரேம்

10 comments:

  1. நல்லதொரு சேவை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Replies
    1. இதென்ன இது புது ஸ்டைல்?:) ஹா ஹா ஹா...

      Delete
  3. அழகிய தரிசனம் நன்றி சகோ

    ReplyDelete
  4. இனிய தரிசனம்..
    வாழ்க நலம்..

    ReplyDelete
  5. படங்கள் அருமைப்பா

    ReplyDelete
  6. அருமை.. அதென்ன கண்ணாடி அறை சேவை.. புரியவில்லை..

    ReplyDelete
    Replies
    1. வாங்க கம்ப பாரதி...

      இந்த கமெண்டை இப்போதான் பார்த்தேன்.. சாரி

      ஸ்ரீரெங்கத்தில் ஆண்டாள் சன்னதியின் ஒரு பகுதியில் எல்லா பக்கமும் கண்ணாடி வைத்து இருப்பார்கள்...

      தினம் ஒரு அலங்காரம் அங்கு செய்வார்கள்....

      அந்த அலங்காரத்தை கண்ணாடி அறையில் பார்க்கும் போது முன் அலங்காரம்...பின் அலங்காரம்...பக்க அலங்காரம் அனைத்தும் சிறப்பாக தெரியும்...

      இப்பொழுது மேலுள்ள படங்களை பாருங்கள்...அதன் கண்ணாடி அறை சேவை புரியும்...

      Delete
  7. கண்ணாடி அறை சேவை படங்கள் வெகு அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete