கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக திருமால், நான்முகன் உள்ளிட்ட உலக உயிர்களுக்கு காட்சியருளிய நாளாகக் கருதப்படுகிறது.
முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகைப் பெண்களின் நினைவாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
மகாபலிச் சக்கரவர்த்தி ஆணவத்தால் உடலில் பெற்ற புண்கள் குணமாக நெய் தீபம் ஏற்றி வந்தார். கார்த்திகை தீபத்தன்று நெய் தீபம் ஏற்றியபோது மாபலியின் புண்கள் குணமாகின. அது முதல் திருகார்த்திகை அன்று தீபம் ஏற்றும் வழக்கம் ஏற்பட்டதாகவும் கருதப்படுகிறது.

![]() |

திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி, தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது.
தீபத்தின் அடி பாகத்தில் பிரம்மா,
தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு,
நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கிறார்.
கார்த்திகை விளக்கின் தத்துவம்
எண்ணெய் கரைகிறது, திரி கரிகிறது.
ஆம்… தீபம் என்பது தன்னை கரைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஒளி வழங்குகிறது.
பிறர்நலம் பேணுவதற்காக தன் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்பது கார்த்திகை தீபத் தத்துவம்.
எப்படி, தீபத்தின் ஒளி, மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களின் மீதும் விழுகிறதோ..
அதுபோல் மனிதனின் மனதில் எழும் அன்பு ஒளி எல்லார் மீதும் பட வேண்டும் என்பதையே கார்த்திகை தீபம் நமக்கு உணர்த்துகிறது.
கற்றலுடன் கேட்டுணர்ந்து காதலுடன் சிந்தித்தோர்க்(கு)
உற்றதுணையாய் உறுதீபம்– சொற்றகதிக்(கு)
ஏணிநிகர் சோணகிரி ஏர்முடிமேல் அஞ்சலெனும்
பணிநிகர் கார்த்திகைத் தீபம். (43)
கற்று, கேட்டு, இறைவன் பெருமைகளை உணர்ந்து அன்புடன்
வழிபடுவோருக்கு, அவனே அத்தீபம்போல உறுதுணையாய்
நிற்கின்றான். சோணகிரியின் அழகிய உச்சியில் அஞ்சேல் என
அபயமளித்தபடி கார்த்திகைத் தீபமாக விளங்குகிறான் ஈசன்.
அண்ணாமலையே ஈசன் – அவனே கார்த்திகைத் திருத்தீபம்.
புத்திதருந் தீபநல்ல புத்திரசம் பத்துமுதல்
சித்திதருந் தீபஞ்சிவதீபஞ்–சத்திக்
குயிராகுஞ் சோணமலை யோங்கிவளர் ஞானப்
பயிராகுங் கார்த்திகைத்தீ பம்
நல்ல சிந்தனைகளைத் தரும் தீபம்;
நன்மக்களையும் (புத்திர சம்பத்து) மேலும் சித்திகளையும் தரும்
தீபம்; சிவதீபம்; அன்னை சக்தியாம் உண்ணாமுலைக்கு உயிராகி,
சோணமலையில் ஓங்கி வளரும் ஞானப்பயிராக நிற்கும்
கார்த்திகைத்தீபம்.
சோணாசல முதலியார் (பாரதியார்) எனும் புலவர் இயற்றிய ‘கார்த்திகைத் தீபவெண்பா‘ எனும் நூறுபாடல்கள் கொண்ட நூலில் இருந்து இப்பாடல்கள்.... அவரின் காலம் 1858- 1925 ஆகும்...
அன்பு ஒளி எங்கும் பரவி ...
அனைத்து உயிர்களும் மகிழ்வோடு வாழட்டும்.....
(படங்கள் போன வருடம் எங்கள் வீட்டின் கார்த்திகை தீபத்தின் போது எடுத்தவை..)
அன்புடன்
அனுபிரேம்...

வாழ்த்துக்கள்.
ReplyDeleteகார்த்திகை தீபவிளக்கின் தத்துவம் அருமை. படங்கள்,கோலம் அழகு.
அருமை
ReplyDeleteதீபத் திருக்கார்த்திகைத் திருநாள்..
ReplyDeleteஎங்கெங்கும் இருள் அகலட்டும்
அன்பின் நல்வாழ்த்துகள்..
அழகிய படங்களும் விளக்கமும் நன்று.
ReplyDeleteஅழகிய படங்களும் விளக்கமும் நன்று.
ReplyDeleteஅன்பு ஓளி எங்கும் பரவட்டும்.
ReplyDeleteஅருமையான பாடல்கள், படங்கள்.
வாழ்த்துக்கள்.
கார்த்திகை தீபம் நல்ல பதிவு சகோதரி/அனு
ReplyDeleteமஹாபலிச் சக்கரவர்த்தி உடற் புண்கள் என்பது இதுவரை அறியாதது.
கோலம் நன்றாக இருக்கிறது
திருக்கார்த்திகை வாழ்த்துக்கள், படங்கள் அனைத்தும் அழகு அனு
ReplyDeleteஅருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்
அழகான படங்கள். கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteகார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்! படங்கள் அழகு. தகவல்களுக்கு நன்றி.
ReplyDeleteபயனுள்ள தகவல். திருவண்ணாமலை கார்த்திகை தீபம் Click here to watch
ReplyDelete