16 September 2016

வெந்தயக் கீரை

வெந்தயக் கீரை........



  • வெந்தயக்  கீரையில் கலோரி, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, மாவுச்சத்து, நீர்ச்சத்து, புரதம், கொழுப்புச்சத்து போன்ற பல சத்துகள் நிறைந்துள்ளன.



  • வெந்தயக் கீரையை தினமும் சமைத்து சாப்பிட்டால் கபம், சளி போன்ற நோய்கள் விரைவாக குணமடையும்.



  • சுறுசுறுப்பு தன்மையற்று மந்த நிலைமையை உணர்பவர்கள் அல்லது உடல் சோர்வுத் தன்மையை உணர்பவர்கள் வெந்தயக் கீரை தினமும் சமைத்து சாப்பிட்டால், உடலின் செயலாற்றல் அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

  • வெந்தயக் கீரையை நம் அன்றாட உணவில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.



  • நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு வெந்தயக் கீரை ஓர் சிறந்த மருந்தாகும், இது நரம்பு தளர்ச்சியில் இருந்து விடுபட வைக்கிறது.

  • வயிற்று வலி, உப்புசமாக உணர்தல், வயிற்று எரிச்சல் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளை குணமாக்க வெந்தயக் கீரை உதவுகிறது.

  • வெந்தயக் கீரை குளிர்ச்சி தன்மையை தருவதால் உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள், வெந்தயக் கீரை சாப்பிடுவதால் உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியைத் தருகிறது.


சில வாரங்களுக்கு முன் எங்கள் ப்ளாக் கில் வெந்தயக்  கீரை பயிர் செய்வது பற்றி  ஹாபி பதிவு வந்தது...


அதை பார்த்தவுடன்  நாங்களும் முயற்சித்தோம்...மிகவும் செழிப்பாக வளர்ந்தது...,, நன்றி எங்கள் ப்ளாக் ..










அந்த கீரையை  வைத்து செய்த சமையல் இன்று...

வெந்தயக் கீரை  சாம்பார் / தால்


வெந்தயக் கீரை - 1 கட்டு

பெரிய வெங்காயம்     - 2

தக்காளி                  - 2   

வேகவைத்த துவரம் பருப்பு, பாசி பருப்பு  - 1 கப்

மி.தூள்   - 2     ஸ்பூன்

உப்பு

தாளிக்க

வடகம்  - சிறிது


செய்முறை..


















வடகத்தை தாளித்து ..
பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு வதக்க வேண்டும் ... பிறகு   நறுக்கிய வெந்தய கீரையும் சேர்த்து வதக்கி...
மி.தூள் ,  உப்பு சேர்க்க வேண்டும்....
கடைசியாக  வேகவைத்த துவரம் பருப்பு, பாசி பருப்பை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்க  ...
சுவையான வெந்தய கீரை  சாம்பார் / தால்  ரெடி...


இது சூடான  சாதத்திற்கும் , சப்பாத்திக்கும் நல்ல இணை உணவு...


அன்புடன்

அனுபிரேம்



6 comments:

  1. வெந்தயக்கீரை எனக்குப் பிடிக்கும்... அப்ப அப்ப செய்து சாப்பிடுவதுண்டு.

    ReplyDelete
  2. மிகவும் பிடித்த கீரை. மேத்தி பனீர் செய்வதுண்டு. உங்கள் ரெசிப்பியும் செய்வதுண்டு. உருளைக்கிழங்கு வெந்தயக் கீரை மேத்தி ஆலு என்று செய்வதுண்டு, வெந்த்யக் கீரை சப்பாத்தி, நான் செய்யலாம். வீட்டில் சிரட்டையில்/கொட்டாங்கச்சியில், வெந்தயக் கீரை சமையலறை ஜன்னலில் வளர்க்கலாம்...அடுத்து வருவதற்கு...நிறைய சிரட்டை அல்லது சிறு சிறு மண் சட்டிகள் வைத்து ஒன்றில் வளரும் போது மற்றொன்றில் விதைத்து என்று ரெகுலராகக் கிடைக்கும் படி செய்யலாம். விரைவாக வளரும். வெந்தயக்கீரை பருப்பு உசிலி செய்யலாம்...வெந்தயக் கீரை பருப்புருண்டைக் குழம்பு செய்யலாம்...நிறைய....உங்கள் குறிப்புகள் அருமை அனு

    கீதா

    ReplyDelete
  3. எனக்கும் பிடித்த கீரை ஆனால் கிடைக்க மாட்டேன் என்கிறது வளர்க்க சரியான இடம் இல்லை , தொட்டியில் வளர்க்க ஆசை வந்து விட்டது.

    ReplyDelete
  4. படங்கள், செய்முறை அருமை.

    ReplyDelete
  5. படங்கள், சமையல் குறிப்பு அனைத்தும் அருமை!

    ReplyDelete