வணக்கம் நட்புகளே......
இன்று ஒரு இனிப்பான பதிவு.... போளி..
ஆனால் இன்றைய போளியில் ...ஏதும் போலி இல்லை.....
அம்மா செய்யும் பராம்பரிய முறையில் செய்ததது...
போளி செய்தவுடன் சூடாக பதிவிட முடியவில்லை....கொஞ்சம் 3 மாதங்கள் ஆறிய பின்னே இன்றைய பதிவு...
அதுவும் எங்கள் ப்ளோகில் "திங்க"க் கிழமை :: இனிப்பு போளி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி வருவதற்கு முன்னே செய்தேன்...ஆனால் அங்கு பார்க்கவும் தான் பதிவிடும் ஆசை வந்தது....
மேல் மாவு செய்ய
மைதா மாவு - 1 கப்
உப்பு - 1/4 தே.க
மஞ்சள் தூள் - 1/2 தே.க
நல்லண்ணை - 2 தே.க
மாவுடன் கொஞ்சம் நீர், நல்லண்ணை ,உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
பின் அரைமணி நேரம் ஊறவிடவும்.
பூரணத்திற்க்கு
கடலை பருப்பு - 1கப்
வெல்லம் - 3/4 கப்
கடலை பருப்பை குக்கரில் வேகவைக்கவும்.
பின் வெல்லத்தையும் கடலை பருப்பையும் சேர்த்து மசிக்கவும் ...
( பாகு எடுத்து, மசித்த கடலை பருப்பையும் சேர்த்து மிதமான தீயில் கிளறி .. நன்றாக சுருண்டு வரும்போது எடுத்து ஆறவிட்டும் செய்யலாம்.... )
மாவையும், பூரணத்தையும் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டவும்.
![]() |
மாவை தேய்த்து, நடுவில் பூரணம் வைத்து ...தட்டி..... மிதமான தீயில் எண்ணை விட்டு போட்டு எடுத்தால் ...
போளி ரெடி...
அன்புடன்
அனுபிரேம்...
புகைப்படம் ஆசையைத் தூண்டி விட்டது
ReplyDeleteஇந்த வார்த்தை போலி இல்லை.
சுவையான போளி. எனக்குப் பிடித்த இனிப்புகளில் போளியும் ஒன்று.
ReplyDeleteகணவருக்கு பிடித்த உணவு. கேட்டுட்டே இருக்கார். செய்ய முடியவில்லை. செய்ய வேணும். நன்றி அனு.
ReplyDeleteரொம்பப் பிடிக்கும் அனு!! ஆனால் நானே ஸ்வீட்டாச்சே ஹிஹிஹி!! மங்களூர் போளி போல சீனியிலும் செய்வதுண்டு..மிக மிக மெலிதாகச் சப்பாத்திக் குழவியால் தேய்த்து....இல்லையா..
ReplyDeleteசுவையான பதிவு!!!
கீதா
போளி அருமையாக இருக்கிறது.
ReplyDeleteபடங்கள் அழகு.