தொடர்ந்து வாசிப்பவர்கள்

07 July 2017

பீச்சி அணை (peechi dam) , திருச்சூர்

அனைவருக்கும் வணக்கங்கள்...

முந்தைய பதிவில்  திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோயிலை
பார்த்தோம்....

இன்று பீச்சி அணை .....இது  திருச்சூர் நகரத்திற்கு வெளியே 22 கிமீ  தொலைவில் உள்ளது.....

திரிச்சூரின் சுற்றியுள்ள கிராமங்களுக்கான நீர்ப்பாசன திட்டமாக இந்த  அணை தொடங்கப்பட்டது. இது ஒரு பாசன அணை....

 மணாலி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணை சுமார் 3,200 ஏக்கர் (1,300 ஹெக்டேர்) பரப்பளவு பரந்த தோட்டக்கலைகளோடு பரந்து விரிந்துள்ளது.


 மிகவும் பசுமையான, குளுமையான இடம்...இங்கு மேலிருந்து  காணும் போது 36௦  கோணத்தில் அணையின் அழகை காணலாம்...

இத்தனை அழகான இடத்தையும்  இப்படி சேதப்படுத்துபவர்களை என்னதான்  செய்வது...


தொடரும்....

பீச்சி அணை பூங்கா..


அன்புடன்

அனுபிரேம்


7 comments:


 1. ​அழகிய படங்கள். ஆறுகளில் தண்ணீரைப் பார்ப்பதே தமிழ்நாட்டில் அரிதான காட்சியாய் இருக்கும்போது படத்தில் அப்படிப் பார்க்கும்போது பொறாமையாய்த்தான் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நாமும் இது போல் பல அணைகளை கட்டி நீர் மேலாண்மையை காக்க வேண்டும்..அப்பொழுது அவரையும், இவரையும் கேளாமலே நம் நீர் வளம் உயரும்....

   Delete
 2. கண்ணுக்கு குளுமையாக இருக்கிறது! படங்கள் மிக அழகு!

  ReplyDelete
 3. அழகான இடம். படங்கள் மூலம் இவ்விடத்தின் அழகை நானும் ரசித்தேன். நன்றி.

  ReplyDelete
 4. அழகான படங்கள்! கேரள சுற்றுலாவா? அருமை! பார்த்த இடங்கள்..நான் இருப்பதும் கேரளம் தானே..

  கீதா: அட! நான் சென்றிருக்கிறேன் ஆனால் கேமரா இல்லாத போது எனவே படம் இல்லை. அழகான படங்கள். நான் சென்றிருந்த போது மழைக்காலம் பீக் இன்னும் நீர் இருந்தது போன்று இருந்தது....தமிழ்நாட்டில் நீர் மேலாண்மை மிகவும் குறைவு...

  ReplyDelete
 5. 5 வது படம் சூப்பரா இருக்கு. அழகான இடம். ரசித்தேன் அனு.

  ReplyDelete