19 July 2026

5. சுவாமியின் தேர் ...

1.ஸ்ரீ  ஜெகந்நாதரின் ரத யாத்திரை 

2. அதற்கு முந்தைய நிகழ்வாக  அதாவது ஆரம்ப நிகழ்வு சுவாமியின்  தேவ ஸ்நான பூர்ணிமா உத்ஸவம்.

3. நபயௌவன  தரிசனம் 

4.  ஸ்ரீ குண்டிசா மார்ஜனம்  

 

 5. மூன்று இரதங்கள்



உலகிலேயே மிகப் பழமையான இரத யாத்திரையாகக் கருதப்படும் பூரி இரத யாத்திரையானது, ஆண்டுதோறும் ஆனி மாதம் வளர்பிறை இரண்டாம் நாள் தொடங்கி நடைபெறும். 

ஸ்ரீ ஜெகந்நாதர் மற்றும் அவரது சகோதர சகோதரிகளின் மூன்று இரதங்களும் அளவு மற்றும் பிற விவரங்களில் பரஸ்பரம் வேறுபட்டவை. 

தேர்கள் ஒவ்வொரு ஆண்டும் அழகாகவும் உள்ளார்ந்ததாகவும் வடிவமைக்கப்பட்டு வண்ணம் தீட்டப்படுகின்றன.

ஸ்ரீ ஜெகந்நாதரின் தேர் 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேராகும். 

14  சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரர் எனப்படும் பலராமரும், 

12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் ஸ்ரீ ஜெகந்நாதரின் தங்கையான சுபத்திரை தேவியும் நகர்வலம் வருவார்கள்.

ஒரு ஆண்டு பயன்படுத்தப்படும் தேர் மறு ஆண்டு பயன்படுத்தப்படுவதில்லை. ஆண்டுதோறும் 45அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய இரதங்கள் உருவாக்கப்படுகின்றன.










ஸ்ரீ ஜகந்நாதரின் தேர்


பெயர்: நந்திகோஷா

மாற்றுப் பெயர்கள்: கருடத்வஜா, கபிலத்வஜா

பயன்படுத்தப்பட்ட மரத் துண்டுகளின் மொத்த எண்ணிக்கை: 832

சக்கரங்களின் எண்ணிக்கை: 16

பரிமாணங்கள் (உயரம் x நீளம் x அகலம்): 44′ 2″ x 34’6″ x 34’6″

விதானங்களின் நிறங்கள்: சிவப்பு மற்றும் மஞ்சள்

காவலர்: கருடன்

தேரோட்டி: தாருகா

கொடியின் பெயர்: ட்ரைலோக்யமோகினி

குதிரைகளின் பெயர்: ஷங்க, பலஹாகா, சுவேதா, ஹரிதாஷ்வா

தேர் கயிற்றின் பெயர்: சங்கசூடா நாகினி

பரிவார தெய்வம்: மதன்மோகன்

துவாரபாலா: ஜெயா, விஜயா

ஒன்பது பார்ஷ்வதேவதா (துணை தெய்வங்கள்): பஞ்சமுகி மஹாபீர், ஹரிஹர, மதுசூதனன், கிரிதர், பாண்டு நரசிங்க, சிதாமணி கிருஷ்ணா, நாராயணா, சத்ர பங்கா ரபனா, ஹனுமான் மீது அமர்ந்த ராமர்.

ஸ்ரீ பாலபத்ரரின் தேர்.....

பெயர்: தலத்வாஜா

மாற்று பெயர்: லங்காலத்வாஜா

பயன்படுத்தப்பட்ட மரத் துண்டுகளின் மொத்த எண்ணிக்கை: 763

சக்கரங்களின் எண்ணிக்கை: 14

பரிமாணங்கள் (உயரம் x நீளம் x அகலம்): 43′ 3″ x 33′ x 33′

விதானங்களின் நிறங்கள்: சிவப்பு மற்றும் நீல பச்சை

காப்பாளர்: வாசுதேவ்

தேரோட்டி: மாதலி

கொடி பெயர்: உன்னனி

குதிரைகளின் பெயர்: திரிப்ரா, கோரா, திர்காஷர்மா, ஸ்வர்ணனவா

தேர் கயிற்றின் பெயர்: பாசுகி நாகா

பரிவார தெய்வம்: ராமகிருஷ்ணர்

துவாரபாலா: நந்தா, சுனந்தா

ஒன்பது பார்ஷ்வதேவதா (துணை தெய்வங்கள்): விநாயகர், கார்த்திகேயா, சர்வமங்களா, பிரலம்பரி, ஹலாயுதா, மிருத்யுஞ்சயா, நாதம்வர, முக்தேஸ்வர், ஷேஷதேவா.

ஸ்ரீ சுபத்திரை தேர்

பெயர்: தர்படலனா

மாற்று பெயர்கள்: தேவதாலனா, பத்மத்வஜா

பயன்படுத்தப்பட்ட மரத் துண்டுகளின் மொத்த எண்ணிக்கை: 593

சக்கரங்களின் எண்ணிக்கை: 12

பரிமாணங்கள் (உயரம் x நீளம் x அகலம்): 42’3″ x 31’6″ x 31’6″

விதானங்களின் நிறங்கள்: சிவப்பு மற்றும் கருப்பு

காவலர்: ஜெயதுர்கா

தேரோட்டி: அர்ஜுனா

கொடி பெயர்: நாதாம்பிகை

குதிரைகளின் பெயர்: ரோசிகா, மோச்சிகா, ஜிதா, அபராஜிதா

தேர் கயிற்றின் பெயர்: ஸ்வர்ணசூடா நாகினி

பரிவார தெய்வம்: சுதர்சனம்

துவாரபாலா: கங்கா, ஜமுனா

ஒன்பது பார்ஷ்வதேவதா (துணை தெய்வங்கள்): சண்டி, சாமுண்டா, உக்ரதாரா, பனதுர்கா, ஷுலிதுர்கா, வாராஹி, ஷியாமகாளி, மங்களா, விமலா.




























ஜெய் ஜெகநாத்! 

ஜெய் ஜெகநாத்! 

ஜெய் ஜெகநாத்! 


திருமங்கை ஆழ்வார்

பெரிய திருமொழி - ஏழாம் பத்து 

7- 7 திருவுக்கும் திருவாகிய

திருவழுந்தூர்  -3



1612

விண்டான் விண் புக, வெம் சமத்து அரியாய்ப்
பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து
பண்டு ஆன் உய்ய ஓர் மால் வரை ஏந்தும்
பண்பாளா! பரனே! பவித்திரனே!

கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை
கருமம் ஆவதும் என் தனக்கு அறிந்தேன்
அண்டா! நின் அடி அன்றி மற்று அறியேன்
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!

7.7.5


         

 ஸ்ரீ பலராம ஸ்வாமி , ஸ்ரீ சுபத்ராதேவி, ஸ்ரீ  ஜெகந்நாத பெருமாள்  

திருவடிகளே சரணம் ... !!!






தொடரும் ....

அன்புடன் 
அனுபிரேம் 💙

No comments:

Post a Comment