18 July 2026

3.நபயௌவன தரிசனம் ..

 ஸ்ரீ  ஜெகந்நாதரின் ரத யாத்திரை 

அதற்கு முந்தைய நிகழ்வாக  அதாவது ஆரம்ப நிகழ்வு சுவாமியின்  தேவ ஸ்நான பூர்ணிமா உத்ஸவம்.

 

3. நபயௌவன  தரிசனம் 

பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் தரிசனத்தின் 14 ஆவது நாள்  "சிங்க துவார் " திறக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து ஸ்ரீ நாராயண் பதிக்கு மங்கல ஆரத்தி - அனாபஸார கால நிறைவு  தரிசனம்.


ஜெய் ஜெகநாத்! 






 "அனாபஸார காலம்!"

பூரியில் மிக முக்கியமான காலம் இந்த அனாபஸார/அனாவஸார காலம் எனப்படும் பதினான்கு நாள்கள் ஓய்வு!

ஜ்யேஷ்ட (ஆனி) பௌர்ணமி அன்று ஸ்ரீ ஜகந்நாதன், ஸ்ரீ பலராமன், ஸ்ரீ சுபத்திரா மூவரும் 108 குடங்கள் தீர்த்தத்தில் திருமஞ்சனம்  கண்டருள்வார்கள். 

அதாவது வருடத்தில் ஒரு முறை கோவில் கர்பக்ருஹத்தில் உள்ள மூல விக்ரஹங்கள் வெளியில் வந்து ஸ்நான வேதிகையில் நீராடலே "ஸ்னான யாத்திரை" எனப்படுகிறது.

நிறைய நேரம் தண்ணீரில் விளையாடிக் குளித்ததில், மூவருக்கும் ஜலதோஷம், ஜுரம் போன்றவை வந்துவிடுகின்றன.

அதனால் ஜுரமருந்து, ஜலதோஷ மருந்து எல்லாம் கொடுத்து, விசேஷ கஷாயம் கொடுத்து, ஸ்ரீ பலராமன், ஸ்ரீ சுபத்திரா, ஸ்ரீ ஜகந்நாதனை தனியாக ஒரு இடத்தில் ஓய்வாக இருக்கவைப்பர்!

அந்த சமயத்தில் பழச்சாறு, மருந்து கஷாயம் மட்டுமே பகவானுக்கு நிவேதனம் செய்யப்படும்!

இந்த இரண்டு வாரங்கள் பகவானை யாரும் தரிசிக்க இயலாது!

இந்த சமயத்தில் உலகெங்கிலும் உள்ள ஸ்ரீ ஜகந்நாத பக்தர்கள், தங்கள் வீடுகள், அலுவலகங்கள், கடைகளில் உள்ள ஸ்ரீ ஜகந்நாதனின் மூர்த்திகள், ஸ்ரீ ஜகந்நாதன் படங்கள் ஆகியவற்றை வெள்ளைத் துணியிட்டு மூடி வைப்பார்கள்! 

ஆஷாட (ஆடி) அமாவாசை வரையிலான இந்த பதினான்கு நாள்கள், பக்தர்களுக்குக் கோயிலில் தரிசனம் அனுமதியில்லை. 

ஆஷாட (ஆடி), சுக்லபக்ஷ வளர்பிறை, பிரதமை (முதல்நாள்) கோவில் திறக்கப்படும். 

ஸ்ரீ ஜகந்நாதன்,ஸ்ரீ பலராமன், ஸ்ரீ சுபத்திரா புதுப்பொலிவுடன் காட்சி தருவார்கள். அதற்கு " நபயௌவன (புதிய இளமை) தரிசனம் " என்று ஊரே வந்து தரிசித்துக் கொண்டாடும்!

அதற்கு அடுத்த நாள் ஸ்ரீ பலராமன், ஸ்ரீ சுபத்திரா, ஸ்ரீ ஜகந்நாதன் மூவரும், கோயிலைவிட்டு வெளியில் வந்து பக்தர்களுக்காக ரதயாத்திரை கண்டருள்வார்கள். அதுதான் உலகில் பிரசித்தி பெற்ற "பூரி ஜெகந்நாத ரத யாத்திரை!"





அனாசார காலத்தில், ஜெகன்னாதர் ஆலாலநாதராகக் காட்சியளிக்கிறார் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் பிரம்மகிரியில் உள்ள ஆலாலநாத் கோவிலுக்கு  செல்கின்றனர்.

ஆலாலநாத் என்பது பிரம்மகிரி என்றும் அறியப்படுகிறது. இவ்விடம் ஜெகந்நாத புரியிலிருந்து கடற்கரையில் பதினான்கு மைல் தொலைவில் உள்ளது. அங்கு அலர்நாதரின் கோயில்  உள்ளது.  










திருமங்கை ஆழ்வார்

பெரிய திருமொழி - ஏழாம் பத்து 

7- 7 திருவுக்கும் திருவாகிய

திருவழுந்தூர்  -3



1610

நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும்
நீண்ட தோளுடையாய்! அடியேனைச்
செய்யாத உலகத்திடைச் செய்தாய்!
சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து
பொய்யால் ஐவர் என் மெய்குடி ஏறிப்
போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின் அடைந்தேன்.
ஐயா! நின் அடியன்றி மற்றறியேன்
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!

7.7.3


         

 ஸ்ரீ பலராம ஸ்வாமி , ஸ்ரீ சுபத்ராதேவி, ஸ்ரீ  ஜெகந்நாத பெருமாள்  

திருவடிகளே சரணம் ... !!!






தொடரும் ....

அன்புடன் 
அனுபிரேம் 💙



No comments:

Post a Comment