16 March 2015

காடு ...

காடு


காடு என்பது பெரிய மலை மற்றும் அடர்ந்த மரங்களும் நிறைந்தது  என நினைத்து இருந்தேன்....

ஆனால் திருமணத்திற்கு பிறகு அங்கு ஊரில் காட்டிற்கு போவது பற்றி கூறுவதை கேட்கும் போது வித்தியாசமாக இருக்கும்....

சில நாட்களுக்கு பிறகு நானும் அவரோடு காட்டிற்கு சென்றேன்  .....
அப்பொழுதுதான் தெரிந்தது வானம் பார்த்த விளை நிலங்களையே அங்கு  காடு என  கூறுகிறார்கள் என (....எப்படி ....)

இப்ப வாங்க எங்க காட்டுக்கு பாேகலாம்...

இது எல்லாம் புரட்டாசி மாசம் பருத்தி போட்டப்ப எடுத்தது...

நாங்களும் ஒரு நாள் களை எடுக்க போனோம்...உஸ் அப்பா கஷ்டம்தான் ஆனாலும் பசங்கள அங்க அலசுட்டு போறதுல அத்தைக்கு ரொம்ப சந்தோசம் ....
பிரசன்னா நாங்க  எடுத்த களை 

பசங்களும் அவரும்...கீர்த்தி பிரசன்னா ஒரே ஒரு பூல்லை புடுங்கி எடுத்திட்டு ...கடைசி வரைக்கும் நான் காட்டுல போயி வேலை செஞ்சேன்னு .....எல்லார் கிட்டவும் சொன்னார் ...

பாவம் அத்தை தான் ரொம்ப பயந்துகிட்டே இருந்தாங்க...ஆமாம் கலன்னு நெனச்சு  பருத்திய புடுங்கிடுவோம்னு ...

அன்புடன் 
அனுபிரேம் 


Image result for tamil quotes

11 comments:

 1. நானும் புக்கில் வாசிக்கும் போது யோசிப்பேன் அனு. வெட்டவெளியா இருக்கே என்ன காடுன்னு சொல்றாங்களே என. நீங்க சொன்னபோது தான் புரிந்தது. அழகாக இருக்கு படங்கள் எல்லாம். பிரசன்னா சின்சியரா வேலை பார்க்கிறார் போல.
  கீர்த்தியின் காமெடி செம. நல்ல பகிர்வு

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க ....வேலை எல்லாம் பார்க்கல ...சும்மா என்ஜாய் பண்றாங்க ...

   Delete
 2. அனு,

  வானம் பார்த்த விளைநிலங்கள் & பின்னால் உள்ள மலைகளைப் பார்க்கும்போது இது தி.மலை பக்கமோ !

  நாங்க புன்செய் நிலங்களை கொல்லி என்றும், நன்செய் நிலங்களை கழனி என்றும் சொல்லுவோம்.

  பிள்ளைகளின் 'லுக்'கைப் பார்க்கும்போது அங்கு வேலை செய்யறவங்களே தோத்துப்போவாங்க போங்க ! பருத்தி பிஞ்சு சாப்பிட்டுப் பார்த்தீங்களா, சூப்பரா இருக்கும் !

  ReplyDelete
  Replies
  1. இல்லங்க ..துறையூர் பக்கம் (திருச்சியில் இருந்து 48 KM ) ,,,

   அது உண்மை தாங்க ...

   அப்ப போனப்ப பருத்தி யில் காய் எல்லாம் இல்லை...

   Delete
 3. அருமையான பதிவு. எனது வலைப்பூவுக்கு வந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி. உறுப்பினராக சேர்ந்து தொடர்ந்து கருத்துக்களை சொல்லுங்கள்.

  ReplyDelete
 4. பரவாயில்லை உங்க அத்தை பயந்த மாதிரி இல்லாம களையைத்தான் பறிச்சிருக்கீங்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க ....எப்படியோ களைய மட்டும் தேடி பறிச்சோம் ...

   Delete
 5. அருமை! சகோதரி! படங்களும் அருமை! சிறிய வயதில் செய்ததுண்டு. இப்போதும், இருக்கின்றது. தங்கள் காடு இருக்கும் ஊர் எது சகோதரி?!! பிரசன்னா சூப்பர்!!

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுதலுக்கு ரொம்ப நன்றிங்க ....
   எங்க ஊர் துறையூர் பக்கம் (திருச்சியில் இருந்து 48 KM ) ,,,

   Delete
 6. துறையூர் அருமையான ஊர்தான்...

  ReplyDelete