தொடர்ந்து வாசிப்பவர்கள்

07 April 2015

கம்பு மாவு பக்கோடா ...அனைவருக்கும்  வணக்கங்கள் .....

இன்றைய பதிவு கம்பு மாவு பக்கோடா...


முதலில் கம்பு  (PEARL MILLET ) பற்றி...

 கம்பு  அரிசியை விட 3.8 மடங்கு கனிமங்கள் 6.5 மடங்கு ஃபைபர் மற்றும்  24 மடங்கு  இரும்பு சத்து கொண்டிருக்கிறது.

கம்பு கோதுமையை விட  5.2 மடங்கு ஃபைபர் மற்றும் 3 மடங்கு இரும்பு கொண்டிருக்கிறது.

 கம்பு மத்தியில் இரும்பு உள்ளடக்கத்தை அதிகபட்ச அளவு கொண்டது.

கால்சியம், புரதம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் உள்ள  பணக்கார  தினை கம்பு.

இது நம் உடலில் உள்ள கெட்ட சிதையாக் கொழுப்பு அளவை  குறைக்க உதவுகிறது.

மேலும் நம் குடல் இயக்கங்கள் மேம்படுத்த உதவுகிறது.

செரிமானம் சக்தியை அதிகரிக்கும்  மற்றும் வயிற்று புண்களை ஆற்றும் தன்மை  கொண்டது ....!தேவையானவை  


கம்பு மாவு  - 1 கப்
பொடியாக நறுக்கிய  வெங்காயம்  - 1\4 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்  -1
உப்பு

பொரிக்க தேவையான எண்ணெய் ....


செய்முறை

கம்பு மாவு, பொடியாக நறுக்கிய  வெங்காயம், மிளகாய் ,உப்பு  சேர்த்து  நீர் ஊற்றி   சிறிது கெட்டியாக பக்கோடா மாவு பதத்திற்க்கு பிசயவும்...

பிறகு......சிறிது  சிறிதாக எண்ணையில் பொரித்து எடுக்கவும்  ....

நமது  சத்தான சுவையான கம்பு மாவு பக்கோடா தயார் .....


அன்புடன் 
அனுபிரேம் Image result for tamil quotes for self confidence

4 comments:

 1. கம்புமாவு உருண்டை ந்னு எங்க அம்மம்மா செய்து தருவாங்க. நீண்டகாலமாச்சு.கஷ்டப்பட்டு சாப்பிடுவோம்.இப்போ அதன் அருமை தெரிகிறது.
  கம்புமாவு பக்கோடா பார்க்க ஆவலைத்தூண்டுகிறது அனு. இந்த மாவுக்கு எங்கன போவேன்....
  கிடைத்தால் செய்துபார்க்கிறேன்.நன்றி பகிர்விற்கு.

  ReplyDelete
 2. கண்டிப்பா செய்து பாருங்க.....கம்பு கெடச்சா கூட நீங்க மிக்ஸ் இல் போட்டு அரைத்து கொள்ளலாம்.... நான் அத்தை கொடுத்த கம்பு எல்லாத்தைம் மெசனில் கொடுத்து அரைத்து கொண்டேன் ....

  ReplyDelete
 3. சத்தான பக்கோடா. செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
 4. கம்பு மாவு வைத்து பல நிறைய பலகாரங்கள் செய்வதுண்டு. மற்ற மாவுகளான, சோள் மாவு, தின்மை மாவு போன்றவர்றுடன்...சேர்த்தும்....பக்கோடா கலந்து செய்ததுண்டு....இதையும் செய்து பார்த்துட்டா போச்சு......

  ReplyDelete