13 March 2015

ஓட்ஸ் தோசை

  ஓட்ஸ் தோசை

வலை உலகில்  இந்த ஓட்ஸ் தோசை பற்றி  பல மாதங்களுக்கு முன்  பார்த்தேன்...(யாருடைய பதிவில் என்பது மறந்து வீட்டது ....sorry )  ....அதிலிருந்து மாதம் இரு முறை கண்டிப்பாக ஓட்ஸ் தோசை உண்டு ....இது மிகவும் மொருகளாக வருவதால் பசங்களுக்கும் ரொம்ப விருப்பம்...

ஓட்ஸ்சை உணவில் சேர்க்க  ரொம்ப நாளா ஆசை  ஆனால் ஓட்ஸ் கஞ்சி  எனக்கு பிடிப்பதில்லை அதனால் மாற்றாக  தோசை  ....இது  மிகவும் அருமையாக உள்ளது ...

செய்முறை

ரவை - 1 கப்

ஓட்ஸ் -1 கப்

தயிர் - 1 கப்

தோசை மாவு  -1 கப்

ரவையும் ,ஓட்ஸ்சையும் சேர்த்து தயிரில்  அரை மணி நேரம் ஊறவைக்கவும் ....பின் ஊற வைத்ததை மிக்ஸ்யில் போட்டு அரைக்கவும் ..இதனுடன் தோசைமாவை கலந்து மீண்டும் அரை மணி நேரம் விட்டு ...தோசை ஊற்றலாம் ...












அன்புடன் 
அனுபிரேம் 


Image result for tamil quotes

8 comments:

  1. ம்ம் ஓட்ஸ் தோசை பற்று சகோதரி உமையாள் காயத்ரி அவர்கள் எழுதி இருந்தார்கள்.

    நாங்களும் செய்வதுண்டு. குறித்தும் கொண்டோம்.....மிக்க நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. சகோதரி உமையாள் காயத்ரி ஓட்ஸ் குழி பணியாரம் தான் போஸ்ட் செய்ததாக நினைவு....

      கண்டிப்பாக செய்து பாருங்க .....

      Delete
  2. ஓட்ஸ் தோசை பார்க்க நன்றாக இருக்கு அனு. மகனுக்கும் soft ஆக தோசை இருந்தால் பிடிக்காது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரியசகி ....

      Delete
  3. தோசை பக்கத்தில சிவப்பா ஒரு சட்னி இருக்கே, அதுக்கும் ரெசிப்பி கொடுக்கலாமே அனு! ;) :)

    ஓட்ஸ் தோசை செய்வதுண்டு, ஆனால் வேறு ப்ரபோர்ஷன்ஸ்..இப்படியும் செய்து பார்க்கணும். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தக்காளி சட்னி மகி ....கண்டிப்பாக செய்முறை பதிவு பண்றேன் ...........

      Delete
  4. அனு,

    கலர்ஃபுல் சட்னியுடன் தோசை சூப்பரா இருக்கு. செய்முறை கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. ஓட்ஸ் வாங்கி ஏறக்குறைய ஒரு வருடமாகிறது. சீக்கிரமே வாங்கி ரவை சேர்த்து செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  5. ஓட்ஸ் தோசையை செய்து பார்க்க வீட்டம்மாவிடம் சொல்லுகிறேன்.

    ReplyDelete