தொடர்ந்து வாசிப்பவர்கள்

31 July 2015

பாகற்காய் கொடி

அன்பான காலை வணக்கங்கள்...

இன்று பாகற்காய் பதிவு ...

பாகற்காய்  பற்றிய சில  தகவல்கள் (இணையத்தில் இருந்து )...

 •  பாகற்காயின் அறிவியல் பெயர் மொமோர்டிகா சாரன்டியா. 

 •  குறைந்த ஆற்றல் வழங்குபவை பாகற்காய்கள். 100 கிராம் பாகற்காயில் 17 கலோரி ஆற்றலே உடலுக்கு கிடைக்கிறது. 


 • பாகற்காயின் விதைகள் எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள், தாதுஉப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு பொருட்களைக் கொண்டது.    * 'பாலிபெப்டைடு-பி'   எனப்படும்   குறிப்பிடத்தக்க சத்துப்பொருள் பாகற்காயில் காணப்படுகிறது. இதனை தாவரங்களின் 'இன்சுலின்' என்று கருதுகிறார்கள். ஏனெனில் தாவரங்களில் சர்க்கரை மிகுதியாகாமல் கட்டுப்படுத்துவது இதுதான். 
 
 • உடற்செயலின் போது 'சாரான்டின்' எனும் பொருளை பாலிபெப்டைடு-பி உருவாக்குகிறது.  சாரான்டினானது குளுகோசை அதிகம் கிரகித்து சர்ச்கரையின் அளவை உடலில் கட்டுக்குள் வைக்கிறது.  எனவே நாம் பாகற்காயை உண்ணுவதால் 'டைப்-2' நீரிழிவில் இருந்து பாதுகாப்பு தருகிறது பாகற்காய். 

 • பாகல் விதையில் சிறப்புமிக்க சத்துப்பொருளான போலேட் உள்ளது. 100 கிராம் பாகற்காயில் 72 மைக்ரோகிராம் போலேட் உள்ளது. இது கருவில் வளரும் குழந்தைக்கு நரம்பு பாதிப்புகள் உருவாகாமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் தாதுவாகும். 

 • சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின்-சி, பாகற்காயில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் பாகல் விதையில் 84 மில்லிகிராம் வைட்டமின்-சி உள்ளது. இயற்கை நோய் எதிர்ப்பு பொருளான இது, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டியடிக்கும். 
 
 • பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், லுடின், ஸி-சாந்தின் போன்ற புளோவனாய்டுகள் உள்ளன. அத்துடன் வைட்டமின்-ஏ சிறந்த அளவில் உள்ளது. இவை புற்றுநோயை உருவாக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதோடு, வயது மூப்படைவதில் இருந்தும், வியாதிகள் தாக்காதவாறும் காக்கும். 

 • ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் பாகற்காய்க்கு உண்டு. மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை போக்கும். 

 • வைட்டமின்-பி3, வைட்ட மின் பி-5, வைட்டமின்-பி6 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்ற முக்கியத் தாதுக்களும் பாகற்காயில் இருந்து உடலுக்கு கிடைக்கிறது. 

 • பாகற்காய், எச்.ஐ.வி.க்கு எதிரான நோய்த்தடுப்பு சக்தியை வழங்குவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இப்ப  வாங்க  பாகற்காய் கொடி பார்க்க  போலாம் ....ஏற்கனவே எங்க காட்டில் உள்ள பாகற்காய்களை  பார்த்தீர்கள்...   இன்று எங்க  வீட்டு  தொட்டியில் உள்ளவை...   ..ஊர்லேந்து  வந்த  பாகற்காயில்  சில  பழுத்து  விட்டதால்  தொட்டியில் போட்டேன் ...எல்லாம் வளர்ந்து சின்ன  சின்ன  பாகற்காயை  தந்தது... 


பூ 


அன்புடன்
அனுபிரேம்

Image result for kalam words in tamil

3 comments:

 1. உங்க வீட்டு பாவக்காயை எட்டிப் பறிக்கணும்னு தோணுது.

  எங்க வீட்டு செடியில ரெண்டு விதமா பூ வருது. பெரிய பூ விழுந்திடுது. உங்க புகைப் படத்துல இருக்கிற மாதிரி இருக்கும் பூ காய்ச்சிருக்கு. ஆனால் பெருசாகல, பார்க்கலாம் எப்படி வருதுன்னு.

  ReplyDelete
 2. Wow..super! Nice to see home grown veggies any! Happy harvesting! :)

  ReplyDelete
 3. மிகவும் பிடித்த காய்! தகவல்கள் அருமை! படம் சூப்பர்!

  ReplyDelete