அனைவருக்கும் வணக்கங்கள் .....
இன்றைய பதிவு கம்பு மாவு பக்கோடா...
முதலில் கம்பு (PEARL MILLET ) பற்றி...
கம்பு அரிசியை விட 3.8 மடங்கு கனிமங்கள் 6.5 மடங்கு ஃபைபர் மற்றும் 24 மடங்கு இரும்பு சத்து கொண்டிருக்கிறது.
கம்பு கோதுமையை விட 5.2 மடங்கு ஃபைபர் மற்றும் 3 மடங்கு இரும்பு கொண்டிருக்கிறது.
கம்பு மத்தியில் இரும்பு உள்ளடக்கத்தை அதிகபட்ச அளவு கொண்டது.
கால்சியம், புரதம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் உள்ள பணக்கார தினை கம்பு.
இது நம் உடலில் உள்ள கெட்ட சிதையாக் கொழுப்பு அளவை குறைக்க உதவுகிறது.
மேலும் நம் குடல் இயக்கங்கள் மேம்படுத்த உதவுகிறது.
செரிமானம் சக்தியை அதிகரிக்கும் மற்றும் வயிற்று புண்களை ஆற்றும் தன்மை கொண்டது ....!
தேவையானவை
கம்பு மாவு - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1\4 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1
உப்பு
பொரிக்க தேவையான எண்ணெய் ....
செய்முறை
கம்பு மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் ,உப்பு சேர்த்து நீர் ஊற்றி சிறிது கெட்டியாக பக்கோடா மாவு பதத்திற்க்கு பிசயவும்...
பிறகு......சிறிது சிறிதாக எண்ணையில் பொரித்து எடுக்கவும் ....
நமது சத்தான சுவையான கம்பு மாவு பக்கோடா தயார் .....
அன்புடன்
அனுபிரேம்