தொடர்ந்து வாசிப்பவர்கள்

19 June 2018

சன் செட் பாயிண்ட் (sunset point )

வாழ்க வளமுடன்..sunset point ...காந்தி மண்டபத்திலிருந்து  கடற்கரை சாலையிலே செல்லும் போது இந்த இடத்திற்கு செல்லாம்..

ஆட்டோ...வேன் வசதிகளும் உண்டு..


பலர் சூரிய மறைவை காண இங்கு ஆவலுடன் காத்திருந்தனர்...
 இங்கிருந்து சூரிய அஸ்தமனத்தை காண மிக அழகா இருக்கும் ..என பலரும் கையில் கேமரா, கைப்பேசி என தயாராக காத்திருந்தோம்.......அந்த நிகழ்வை படம் எடுக்க...ஆனால் ....எங்களின் ஆர்வம்

 கண்டு

சூரியனுக்கே  


வெட்கம் போல்..


மேக பொதிக்களுக்குள் 

சென்று 

மறைந்து விட்டான் ..

கள்ளன்...

மேரி மாதா ...தூரமாகவே அழகா இருந்தாங்க...முன்புறம் பார்க்கணும் ன்னா மேலே ஏறி செல்லனும்...எங்களால் அப்போ போக முடில...


குடும்பத்துடன் சென்று அமர்ந்து ரசிக்க தக்க இடம்... இந்த சன் செட் பாயிண்ட் (sunset point ).
21 comments:

 1. கண்கவரும் படங்களுடன்
  கன்யா குமரி தரிசனம்!..

  அழகு.. அழகு..

  வாழ்க நலம்...

  ReplyDelete
 2. ஆ இங்கும் மீதான் 1ஸ்ட் போல:).. அத்தனை படமும் அழகு.. சூரிய அஸ்தமனம் பார்க்கவே அங்கு மக்கள் கூடுவார்கள் எனக் கேள்விப்பட்டேன்.

  அனுவின் கவிதை சூப்பர்.. வாழ்க கவிஞர் அனு...

  ReplyDelete
  Replies
  1. அட இல்லங்க ஞானி...நம்ம துரை அண்ணா வந்துட்டார்..firstட்ட்ட்டட்ட்ட்டு...

   இருந்தாலும் அந்த ஆயா உங்களுக்கு தான்,,


   நன்றி நன்றி...ஞானி சொன்னா சரியா தான் இருக்கும்...கவிஞர் அனு...ஆஹா அழகா இருக்கே...

   Delete
 3. அனைத்து படங்களும் அழகு.
  சூரியன் ஏமாற்றி விட்டாரே மேகத்தில் மறைந்து.

  ReplyDelete
  Replies
  1. ஆமா அம்மா..கள்ளன் அவன்.

   Delete
 4. மேரி மாதா இருக்கும் இடம் புதிதாக கட்டி இருக்கிறார்கள் போலும்.
  முன்பு பார்த்தது இல்லை.

  ReplyDelete
 5. படங்கள் அழகு. இந்த மே மாதம் இங்கே செல்லத் திட்டமிட்டு கடைசி நேரத்தில் போக முடியாமல் போனது.....

  ReplyDelete
  Replies
  1. அடடா...

   நாங்கள் மூன்று வருடமாக திட்ட மிட்டு இப்பொழுது தான் சென்று வந்தோம்...

   அடுத்த முறை கண்டிப்பாக சென்று வாருங்கள்...அருமையான இடம்..

   Delete
 6. வா..வ் அழகான படங்கள். நாங்கள் வந்து பார்த்தபோதும் மாதா இருக்கவில்லை. அழகான கவிதை.

  ReplyDelete
 7. புகைப்படங்கள் அனைத்தும் அழகு.2 வருடங்களுக்கு முன் சென்ற போதும் இப்படித்தான் சூரிய அஸ்தமனம் பார்க்கவில்லை. ஒரு அமானுஷ்யமான அமைதி மட்டுமே அங்கிருந்தது.

  ReplyDelete
 8. வணக்கம் சகோதரி

  முதல் வருகை கோவில் உலாவாக வந்திருக்கிறேன். அழகான தெளிவான படங்கள். அனைத்தும் கண்ணுக்கு விருந்தாக இருந்தது. கன்னியாகுமரி சென்று நிறைய வருடங்கள் ஆகி விட்டன. மற்றொரு முறை செல்லும் வாய்ப்புக்காக தவமிருக்கிறேன். தங்கள் பதிவினை மிகவும் ரசித்தேன்.
  பாரதியின் கவிதை அருமை.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 9. படங்கள் அழகாக இருக்கின்றன சகோதரி. எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது கன்னியாகுமரி பார்த்து..

  துளசிதரன்

  அனு சன் செட் பாயின்ட் மாத்திருக்காங்க போல முன்பெல்லாம் கடற்கரை காந்திமண்டபம் பக்கத்திலேயேதான் பார்ப்பது வழக்கம். அந்த சர்ச் கூட இப்போது பெரிதாக உள்ளது போல. இருக்கு...படங்கள் எல்லாம் செம

  கீதா

  ReplyDelete