11 June 2018

உளுந்தங்கஞ்சி


வாழ்க வளமுடன்..








உளுந்தின் — பயன்கள்


 கடும் நோயில் இருந்து மீண்டவர்களும் , உடல் பலவீனமானவர்களுக்கும் உளுந்து ஒரு வர பிரசாதம்.

 இவர்கள் உளுந்தை களியாகவோ, கஞ்சியாகவோ, அரிசியுடன் கலந்தோ உண்டு வந்தால் தேகம் வலுவடையும்.

எலும்பு, தசை, நரம்புகள் ஊட்டமடைந்து உடல் வச்சிரமாகும்.


உளுந்தை அடிக்கடி உணவில் சேர்த்துவர இடுப்பு வலி நீங்கும்.

காச நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.

உளுந்தை‌க் கொண்டு செய்த பண்டங்களை உண்டு வர நினைவுத்திறன் அதிகரிக்கும்.

உளுந்தில் புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.

உடல் சதை வளர்ச்சிக்கு உளுந்து மிகவும் சிறந்தது.

மெலிந்த உடல்வாகு உள்ளவர்கள் இதனை களி கிளறி சாப்பிட்டு வர உடல் பருமன் அதிகரிக்கும்.





உளுந்தங்கஞ்சி செய்வதற்கு 


தேவையானவை


உளுந்த மாவு  - 3 கரண்டி

அரிசி - 3 ஸ்பூன்

தேங்காய் துருவல்  -சிறிது

வெல்லம் - அரை கப்

ஏலக்காய்  - 2

தண்ணீர் - 6 கப்












செய்முறை



இட்லிக்கு மாவு ஆட்டும் போது அதில் இருந்து 3 கரண்டி மாவு எடுத்து செய்வது மிகவும் எளிது..

நாங்கள் அப்படி தான் செய்வோம்...இன்று அந்த முறை தான்...





 அரிசி, தேங்காய், ஏலக்காய் இவைகளை தனியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்...



அடிகனமான பாத்திரத்தில் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்கும் போது கரைத்து வைத்துள்ள உளுந்து மாவை கலந்து, நன்கு வேகும் வரை கைவிடாமல் கிளர வேண்டும்..






பின் அதில் அரைத்த அரிசி, தேங்காய், ஏலக்காய் கலவையை சேர்த்து ....

மாவு வெந்து வரும்போது பொடித்து வைத்துள்ள வெல்லம்  சேர்க்கவும்...

 மீண்டும் ஒரு கொதி விட்டு ...இறக்கினால்...







சுவையான உளுந்தங்கஞ்சி தயார்...



அன்புடன்
அனுபிரேம்


18 comments:

  1. Super da anu,Sure i wil try 👍👍👍👍👍😍😍😍😍😍

    ReplyDelete
  2. வா.வ் சூப்பரான சத்தான கஞ்சி. உங்க குறிப்பு வித்தியாசமாக இருக்கு அனு. இப்படி செய்ததில்லை. செய்து பார்க்கனும்.

    ReplyDelete
    Replies
    1. சமைத்து பார்த்து சொல்லுங்க அம்மு..

      Delete
  3. //மெலிந்த உடல்வாகு உள்ளவர்கள் இதனை களி கிளறி சாப்பிட்டு வர உடல் பருமன் அதிகரிக்கும்.//

    ஆத்தா......டி.... அப்போ நான் இதைச் சாப்பிடக்கூடாது!

    செய்முறை எளிதாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சமா சாப்பிடலாம் ஸ்ரீராம் சார்..

      ஈசி தான்..

      Delete
  4. ஹெல்த்தி ரெசிப்பி அனு .செய்து கொடுக்கணும் வீட்டில் இருக்கிறவங்களுக்கு .நீங்க யூஸ் பண்ணது தோலுடன் கருப்பு உளுந்தா ?

    ReplyDelete
    Replies
    1. இல்ல அஞ்சு ..தோல் நீக்கிய பருப்பு தான்..

      அது ஊரில் உடைத்தது அதனால் சில தோலுடன் இருக்கும் ...நானும் அப்படியே சமைப்பேன்..


      Delete
  5. பாரம்பர்ய உணவினைப் படங்களுடன் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி...

    ReplyDelete
  6. அரிசி, உளுந்து சேர்த்து தேங்காய் பூ வேகவைத்து கஞ்சி செய்வோம்.
    அரைத்து செய்தது இல்லை. செய்து பார்க்கிறேன் அனு.

    ReplyDelete
    Replies
    1. ஓ..அந்த முறையில் எனக்கு தெரில.

      ஆன இது கொஞ்சம் எளிய முறை மா..எங்க அத்தை இப்படி தான் செய்வாங்க..

      Delete
  7. அருமையான குறிப்பு.

    ReplyDelete
  8. Can Heart patients have this ... bcos i have been asked to avoid coconut

    ReplyDelete
    Replies
    1. without cocount also it taste good..so u can try without cocount ..

      thanks for visiting here ..

      Delete
  9. அருமை
    சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஐயா..

      Delete