14 June 2018

உயிருள்ளவரை உன்னோடு தான்……

வாழ்க வளமுடன்...


உயிருள்ளவரை உன்னோடு தான்……


மீண்டும் ஒரு வாசிப்பு அனுபவத்துடன் வந்துள்ளேன்...

வழக்கம் போல் இது கதைக்கான  விமர்சனம் அல்ல... எனது வாசிப்பு அனுபவம்...










வநிஷா…..இது இவரின் மூன்றாவது கதை....




எனக்கு இந்த கதையின் வழி தான் இவரின் எழுத்துக்கள்  அறிமுகம்...


ஆனால் இது தான் இவரின் மூன்றாவது கதை என்னும் கோட்டை தாண்டி...


மிக அரிய எழுத்து படைப்பு.. உணர்வின் வழியும்.. வார்த்தைகளின் வழியும்.. .💓💓💓💓



முதலில் கவர்வது கதாபாத்திரங்களின் பெயர்கள் தான் ..

அழகிய தமிழ் பெயர்கள்..


நாயகன் -ப்ரகாஷ் கபூர் ( இவர் மட்டும் வட நாட்டுக்காரர்..அதனால் இந்த பெயர்)

நாயகி -சித்ரா பௌர்ணமி

தங்கை  -வைகாசி நிலா

தம்பி - மாசிலா மணி

குழந்தை - கார்த்திகை தீபா என தொடர்கிறது...



பொதுவான காதல், சண்டை என்னும் எண்ணங்கள் தாண்டி

இயல்பு வாழ்வில்..



வரும் திருமண வாழ்வின் பின்னான குழந்தை பிறப்பு...



ஆம்



கருத்தருப்பில் பிரச்சனைகளும் ...  பின் அந்த  மருத்துவத்தில் ஆண், பெண் இருவரும் பெறும் மன உலைசல்களும்...  உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளும்...  என மிக பல தகவல்கள்..



இது தான் இந்த கதையில் என்னை அதிகம் கவர்ந்தது...பாதித்தது..



ஒவ்வொரு பதிவும் இத்தகவல்களுடனே தொடங்கும்..



இது பலரும் அறியாத தகவல்கள்...



ஒவ்வொரு hormone ஊசிகளும் எத்தனை வேதனைகளும்...வலிகளும் நிறைந்தது என பலரும் தெரிந்துக் கொள்ள செய்கிறார் ஆசிரியர்..



அனைத்தையும் தாண்டி  இந்த கதை சில பல நக்கல், நையாண்டி என செல்கிறது.. ...

timing நகைச்சுவை இங்கு அதிகம்...நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்  ...


மனம் நிறைந்து சிரிக்க ...சிந்திக்கவும்....வைக்கிறார்..



 மிக அருமையான கதைக் களம்..


குடும்பம் என்னும் வீட்டில் எவ்வாறு அனைவரும் விட்டுக் கொடுத்து....


அன்பை பகிர்ந்து வாழ வேண்டும் என அழகியலாக சொல்கிறார்...ஒவ்வொன்றும் மிக அழகு...


தாய் ..மகள்

தந்தை ..மகன்

அக்கா ..தங்கை

அக்கா ..தம்பி

என ஒவ்வொரு உறவின் உணர்வு வெளிப்பாடுகளும் மிக சிறப்பு..



வாரம் இருமுறை என பதிவிட்டார்...

எப்பொழுது பதிவு வரும் என முன்பு வாசல் பார்த்து புத்தங்களுக்காக காத்து இருந்தது போல்...  இப்பொழுது  கைப்பேசி வழி காத்து இருந்தோம்....😊😊😊



நான் மட்டும் அல்ல ...



இந்த கதைக்கென பல பல ரசிகர்கள் முக  நூலில் உண்டு.....


இங்கு நான் பகிரும் முன்னே இதுவரை பலர் தங்கள் அனுபவங்களை எழுதிவிட்டார்கள்...


அனைத்தும் மிக எளிய அழகிய விமர்சனங்கள்...



இருப்பினும்  எனது அனுபவத்தை பகிரவே இந்த பதிவு..



நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக வாசித்து பாருங்கள்...மிக சிறப்பான நாவல்...


வநிஷாவின் தளம்....vanishawrites.


கதைக்கான தளம்...smtamilnovels./va-nishas-uyir-vidum-varai-unnoduthaan.


இது போல் பல அழகிய நாவல்களை படைத்திட அன்பு வாழ்த்துக்கள் வநிஷா  (நிஸ் )...💗💗👍👍🎇🎆🎈


அன்புடன்
அனுபிரேம்...



11 comments:

  1. பிரகாஷ் கபூர் என்பது தமிழ்ப்பெயரா என்ன?!! ஹா... ஹா... ஹா...

    கதையை ரசித்துப் படித்து எங்களுக்கும் பகிர்ந்துரைத்திருப்பதற்கு நன்றி.

    ReplyDelete
  2. ஸ்ரீராம் சார்...

    எழுதும் போதே நினைத்தேன்..இவன் வட நாட்டு பையன் ன்னு சொல்லாம் ன்னு...சரி ...இந்த பேர் மட்டும் தானே...

    கீழ இருக்க சித்ரா ,வைகாசி நிலா, மாசில மணி எல்லாம் தமிழ் பேர் ...தானே...அதை பத்தி நீங்க ஒன்னும் சொல்ல...

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் தமிழ்ப் பெயர்கள்தான்!!

      :))

      Delete
    2. நன்றி சார்...வருகைக்கும் கருத்துக்கும்..

      Delete
  3. அருமையாக இருக்கும்போலிருக்கே கதை. சூட்டியிருக்கும் பெயர்கள் மிக அழகு.

    ReplyDelete
  4. தமிழ்ப் பெயர்களை நினைவு கூர்ந்த விமர்சனம் - அழகு..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  5. ஆஹா அருமையா இருக்கும் போலிருக்கே .இருங்க சுட்டிக்கு போய் வாசிச்சிட்டு வரேன் .
    நீங்க சொன்னதில் அந்த ஊசிகள் விஷயம் நட்பு ஒருவர் விஷயத்தில் பார்த்தது .அவருக்கு குழந்தைகள் பிரியம் முதல் குழந்தைக்கு ஊசிகள்தான் பிறகு இரண்டாவது வேணும்னு பல ஊசி போட்டார் அவர் உடம்பில் பல பக்க விளைவுகளாம் மனா உளைச்சல் உடல்சார்ந்த பிரச்சினைகள் இப்படி நிறைய .ஆனால் பல வருஷம் கழித்து ஊசி போடாமல் இரண்டாவதும் பிறந்தது .

    ReplyDelete
  6. அருமையான விமர்சனம் படிக்க தூண்டுகிறது படிக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  7. நானும் வாசிக்கிறேன் அனு. சூட்டியிருக்கும் பெயர்கள் அழகா இருக்கு.

    ReplyDelete
  8. அழகான தமிழ் பெயர்கள்....அவரின் தளம் சென்று வாசிக்கிறேன்.நன்றி அனு.

    ReplyDelete
  9. துளசி: நல்ல அறிமுகம்.

    கீதா: நீங்க ரசித்ததை இங்கு பகிர்ந்து அறிமுகப் படுத்தியது சூப்பர் அனு. வலைத்தளம் குறித்துக் கொண்டேன். வாசிக்கிறேன்.

    ReplyDelete