19 October 2016

திருவரங்கம் கொலு...2016

அனைவருக்கும்  அழகான காலை வணக்கங்கள்...


இந்த வருடம் திருவரங்கம் பெரிய  பெருமாள்  ஆலயத்தில் கொலு பார்க்கும்  சந்தர்ப்பம் அமைந்தது...


மிக அழகான நேர்த்தியான அமைப்புடன் கொலு  அமைக்கப்பட்டு இருந்தது...




 சுவாமி  ஸ்ரீ ராமானுஜரின்  ஆயிரமாம்  பிறந்த  ஆண்டை சிறப்பாக்கும்   வகையில் , ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில்  நவராத்திரி கொலுவில் ஆச்சார்யா  வாழ்க்கையின் முக்கியமான  நிகழ்வுகளை சித்தரிக்கும் விதமாக கொலு அலங்காரம் அமைக்கப் பட்டு  இருந்தது....

கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி  ஸ்ரீ ராமானுஜரின் துறவி தத்துவம் மற்றும் போதனைகள் வைத்து சித்தரிக்கப் பட்டு  இருந்தது....

காஞ்சிபுரம் கோவில் .. - மேல்கோட்டை கோவில் ..., மற்றும் வழிபாடு அவரது பயணம்..என பல்வேறு நிகழ்வுகளை காட்டுகிறது....

மிக அழகாக...கண்ணுக்கு நிறைவாக இருந்தன....


ஆனால் அங்கு புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை...இருந்தும் இங்கு பகிர வேண்டும் என்ற ஆசையில்  இந்த படங்களை எல்லாம்

ஸ்ரீரெங்கம்   வலைத்தளத்தில் இருந்து இங்கு பகிர்கிறேன்....






































தொடரும்....





பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.



தொண்டரடிப் பொடியாழ்வார்


முதல் திருமொழி (873)




அன்புடன்

அனுபிரேம்...




4 comments:

  1. மிக அழகான கொலு. நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. மிக அழகான கொலு.
    நேரில் பார்த்த்து போல் இருந்த்து.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. மிக அழகிய கொலு. படங்களும் அழகு. நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறேன். உங்கள் தளம் புதுத் தோற்றம் பெற்று வண்ண மயமாக இருக்கிறது.

    ReplyDelete